மேலும் அறிய

தேனி : விசாரணைக்கு சென்ற காவலர்களை மது போதையில் அரிவாளால் வெட்ட முயற்சி செய்தவர் கைது.

விசாரணைக்கு சென்ற காவலர்களை மது போதையில் அரிவாளால் வெட்ட முயற்சி செய்த வழக்கில் 4 மாதமாக தலைமறைவாக இருந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட 14வது வார்டு தென்கரை பட்டாளம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்த பிரபாகர் என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த தீபக் ரவிச்சந்திரன் மற்றும் அவரது நண்பரான  காமராஜ் ஆகியோருக்கும் இடையே முன்பகை இருந்ததாக கூறப்படுகிறது.

தேனி : விசாரணைக்கு சென்ற காவலர்களை மது போதையில் அரிவாளால் வெட்ட முயற்சி செய்தவர் கைது.

இந்நிலையில் 02.07.2023 அன்று மாலை தீபக் ரவிச்சந்திரன் மற்றும் அவரது நண்பரான காமராஜ் இருவரும் கஞ்சா மற்றும் மது போதையில் பிரபாகரன் என்பவரது வீட்டிற்கு அரிவாள் மற்றும் கத்தியுடன் சென்ற போது பிரபாகரன் வீட்டில் இல்லாத நிலையில் அவரது தங்கை ஹேமலதா வெளியே வந்த போது ஹேமலதாவை கத்தியால் அவரது உடையை கிழித்து வீட்டில் இருந்த பொருட்களையும் அடித்து நொறுக்கியதாகவும் அப்பொழுது ஹேமலதா அவசர எண் 100க்கு அழைத்து கத்தி மற்றும் அரிவாளுடன் இருவர் தகராறு செய்வதை புகார் தெரிவித்ததோடு உடனடியாக ஹேமலதா மற்றும் அவரது தாயை அழைத்துக்கொண்டு பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளனர்.

தேனி : விசாரணைக்கு சென்ற காவலர்களை மது போதையில் அரிவாளால் வெட்ட முயற்சி செய்தவர் கைது.

இதனைத் தொடர்ந்து இத்தகவல் அறிந்து பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்திலிருந்து செந்தமிழன் மற்றும் தினேஷ் என்ற இரு காவலர்கள் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு சென்றபொழுது தகராறில் ஈடுபட்ட தீபக் ரவிச்சந்திரன் மற்றும் காமராஜ் ஆகிய இருவரும்  காவலர்களிடம் இடுப்பில் மதுபாட்டில் கதை சொருகிக்கொண்டு தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஒரு கட்டத்தில் காமராஜ் என்ற இளைஞர் அவரது இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த அரிவாளை எடுத்து விசாரணைக்கு சென்ற காவலரை வெட்டினால் தலை துண்டாக போய்விடும் என அறிவாளை ஓங்கி மிரட்டி தகராறில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து அங்கு இருந்த சிலர் அருவாளை எடுத்து வெட்ட வந்த காமராஜர் தடுத்து நிறுத்தியதோடு காவலர்களையும் அங்கிருந்து செல்லுமாறு அனுப்பி வைத்ததை தொடர்ந்து காவல்துறையினர் காவல் நிலையம் திரும்பி சென்று நடந்த சம்பவத்தை காவல் ஆய்வாளர் இடம் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சம்பவத்தை அறிந்த தென்கரை காவல்துறை ஆய்வாளர் ஜோதி பாபு மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு காவலர்களை தகாத வார்த்தையில் திட்டியும் காவல்துறையினரை வெட்ட வந்தவர்களை கைது செய்ய சென்றபொழுது அரிவாளை எடுத்து  வெட்டி விடுவேன் என்று கூறிய இளைஞரான காமராஜ் தப்பி ஓடிய நிலையில் தீபக் ரவிச்சந்திரன் என்ற இளைஞரை மட்டும் காவல்துறையினர் கைது செய்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

தேனி : விசாரணைக்கு சென்ற காவலர்களை மது போதையில் அரிவாளால் வெட்ட முயற்சி செய்தவர் கைது.

மேலும் தப்பி ஓடிய காமராஜ் என்ற இளைஞரை காவல்துறையினர் தேடி வந்த நிலையில் கடந்த நான்கு மாதங்களாக தலைமறைவாக இருந்த நிலையில் தீபாவளி பண்டிகைக்கு வீட்டிற்கு வந்துவிட்டு வழக்கம் போல் வெளியூர் சென்று தலைமறைவாக இருந்துள்ளார். இந்நிலையில் காவலர்களை அரிவாளால் வெட்ட வந்த காமராஜ் தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் தலைமறைவாக இருப்பதாக பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்திற்கு வந்த தகவலை அடுத்து தென்கரை காவல்துறையினர் அவரை சின்னமனூர் சென்று சுற்றி வளைத்து கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் நிறுத்தி நீதிபதி உத்தரவின் பேரில் சிறையில் அடைத்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

Madurai Hc ; அமைதியான போராட்டம் குற்றமல்ல: மாணவர் வழக்கை ரத்து செய்தது உயர் நீதிமன்றம்!
Madurai Hc ; அமைதியான போராட்டம் குற்றமல்ல: மாணவர் வழக்கை ரத்து செய்தது உயர் நீதிமன்றம்!
அமைச்சர் கலந்துகொள்ளும் நிகழ்வை புறக்கணிக்கும் சொந்த கட்சி எம்.எல்.ஏ., - சிவகங்கையில் அரசியல் சர்ச்சை?
அமைச்சர் கலந்துகொள்ளும் நிகழ்வை புறக்கணிக்கும் சொந்த கட்சி எம்.எல்.ஏ., - சிவகங்கையில் அரசியல் சர்ச்சை?
மதுரைக்கு இரட்டை வளர்ச்சிப் பரிசுகள்: புதிய அலுவலகம், திடக்கழிவு நிலையம் திறப்பு!
மதுரைக்கு இரட்டை வளர்ச்சிப் பரிசுகள்: புதிய அலுவலகம், திடக்கழிவு நிலையம் திறப்பு!
மதுரை: டெங்கு, மலேரியா தடுக்க குடிநீர் பாதுகாப்பு, கொசு ஒழிப்பு - ஆட்சியர் உத்தரவு!
மதுரை: டெங்கு, மலேரியா தடுக்க குடிநீர் பாதுகாப்பு, கொசு ஒழிப்பு - ஆட்சியர் உத்தரவு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: பறிபோகப்போகும் மாவட்டச் செயலாளர் பதவி! முன்னாள் அமைச்சர்களுக்கு இனி MLA சீட்டும் கிடையாதா?
DMK: பறிபோகப்போகும் மாவட்டச் செயலாளர் பதவி! முன்னாள் அமைச்சர்களுக்கு இனி MLA சீட்டும் கிடையாதா?
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
இது தெரியுமா? ஜென் ஆல்ஃபா மாணவர்களின் துணிச்சல் போராட்டம்! வகுப்புகள் புறக்கணிப்பு-ஏன், எதற்கு?
இது தெரியுமா? ஜென் ஆல்ஃபா மாணவர்களின் துணிச்சல் போராட்டம்! வகுப்புகள் புறக்கணிப்பு-ஏன், எதற்கு?
Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
Gujiliyamparai Issue: சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையை அனுப்பிய விவகாரம்; குஜிலியம்பாறை முன்னாள் வட்டாட்சியருக்கு நோட்டீஸ்
சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையை அனுப்பிய விவகாரம்; குஜிலியம்பாறை முன்னாள் வட்டாட்சியருக்கு நோட்டீஸ்
Ather Rizta Record Sales: ஒரே சார்ஜில் 161 கிமீ மைலேஜ்.! சந்தையை கதறவிடும் EV ஸ்கூட்டர்; விற்பனையில் சாதனை படைத்த ஏதர் ரிஸ்டா
ஒரே சார்ஜில் 161 கிமீ மைலேஜ்.! சந்தையை கதறவிடும் EV ஸ்கூட்டர்; விற்பனையில் சாதனை படைத்த ஏதர் ரிஸ்டா
Baleno Facelift Launch: அட்டகாசமான புதிய அம்சங்கள்.! CNG-ல் ஆட்டோமேட்டிக்; சூப்பர் அப்டேட்டுடன் Baleno Facelift லாஞ்ச் தேதி என்ன.?
அட்டகாசமான புதிய அம்சங்கள்.! CNG-ல் ஆட்டோமேட்டிக்; சூப்பர் அப்டேட்டுடன் Baleno Facelift லாஞ்ச் தேதி என்ன.?
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
Embed widget