மேலும் அறிய

புதுக்கோட்டை நீர்நிலை ஆக்கிரமிப்பு: தார் சாலைகளை அகற்ற உத்தரவு; அரசுக்கு உயர் நீதிமன்றம் பாராட்டு!

ஆக்கிரமப்புகள் குறித்து அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கைகள் மிகவும் பாராட்டத்தக்கது நீதிபதிகள் அரசுக்கு பாராட்டு.

நீர்நிலை ஆக்கிரமப்புகள் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் தாங்களே ஆக்கிரமிப்புகளை அகற்ற உள்ளதாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வியப்பாக உள்ளது, இது போன்று அறிக்கைகள் பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது- அரசுக்கு நீதிபதிகள் பாராட்டு.
 
பொதுநல வழக்கு.
 
புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூரை சார்ந்த  காசிராஜன் தாக்கல் செய்த பொதுநல வழக்கு. நீர்நிலை புறம்போக்குகளில்   அரசு, தனியார் நிர்வாகமும்  எந்த ஒரு கட்டுமானங்களும் கட்டக் கூடாது  என்று  உயர்நீதிமன்ற உத்தரவு உள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் குமாரமங்கலம் ஊராட்சியில் தேவளி பெரியகுளம்  உள்ளது இந்தக் குளம் இப்பகுதி விவசாயிகளின் நீர் ஆதாரமாக உள்ளது இந்நிலையில் இந்த நீர் நிலை பகுதியில் சுமார் 15 ஏக்கர் நிலங்கள் தனிநபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு அதில் கட்டிடங்கள் தார் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த பகுதியை சார்ந்த சிலர் தங்களுக்கு சொந்தமான பட்டா நிலத்தில் வீட்டுமனை  DTCP அப்ரூவல் வழங்க  உரிய பாதை வசதி  இல்லை இதனால் நீர்நிலை  பொறம்போக்கு பகுதியை ஆக்கிரமிப்பு செய்து ஊராட்சி அதிகாரிகள் உதவியுடன் முறைகேடாக பட்டாக்கள் பெற்று தற்போது தார் சாலைகள் அமைத்து வருகின்றனர் இதன் மூலம் தங்கள் நிலங்களை அதிக விலைக்கு விற்பனை செய்ய தயாராக உள்ளனர்.
 
நீர் நிலைகள் தான் அதனை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
 
இவ்வாறு நடைபெற்றால் இந்த பகுதியின் தேவளி பெரியகுளம்  விவசாய நீர் மாசுபடும்  விவசாயத்துக்கு சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் மேலும் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு அழிவுக்கு உள்ளாகும் எனவே பகுதியில் சட்டவிரோதமாக பெறப்பட்ட பட்டாக்களை ரத்து செய்து நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்த உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீர்நிலை ஆக்கிரமிப்பு குறித்து விசாரணை செய்யும் சிறப்பு நீதிமன்றத்தில்  நீதிபதிகள் ஜி. ஆர். சுவாமிநாதன் புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது அரசு தரப்பில்  வழக்கறிஞர் கண்ணன் ஆஜராகி தார் சாலை போடப்பட்டுள்ள பகுதிகள் நீர் நிலைகள் தான் அதனை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
 
அப்புறப்படுத்த வேண்டும்
 
இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது என பல்வேறு உத்தரவுகள் போடப்பட்டிருந்தாலும் தொடர்ந்து இந்நிலை நீடித்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட நீர்நிலை ஆக்கிரமிப்புகளை மூன்று மாதத்தில் முழுமையாக அப்புறப்படுத்த வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் மூன்று மாதம் கழித்து மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் அப்பொழுது நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றியது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர். இதேபோல் பல்வேறு வழக்குகள் விசாரணைக்கு வந்தது அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் புகார் குறித்து உரிய அளவீடு செய்து ஆக்கிரப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் மனு தாக்கல் செய்தனர்.
 
அறிக்கை பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது
 
அப்பொழுது நீதிபதிகள் இதுபோன்று பதில் அறிக்கை பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாத சூழல் இருந்தது தற்போது அரசே அக்கிரமிப்புகள் அகற்றப்படும் என பதில் மனு தாக்கல் செய்வது பார்க்கும்போது வியப்பாக உள்ளது எனவே இந்த நடவடிக்கைக்கு நீதிமன்றம் பாராட்டுகளை தெரிவித்துகிறது இதுதான் உண்மையான மாற்றம் இந்த நிலை தொடர வேண்டும் என வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Advertisement

தலைப்பு செய்திகள்

சுதந்திர தினத்திற்கு BSNL கொடுக்கும் சூப்பர் ஆஃபர் மிஸ்பண்ணாதீங்க... 1.ரூ ஒரு 4G சிம் கார்டு !
சுதந்திர தினத்திற்கு BSNL கொடுக்கும் சூப்பர் ஆஃபர் மிஸ்பண்ணாதீங்க... 1.ரூ ஒரு 4G சிம் கார்டு !
மதுரை: கீழ்மதுரையில் நிற்காத ஆடி அமாவாசை சிறப்பு ரயில்; ஊழியர்கள் மீது நடவடிக்கை!
மதுரை: கீழ்மதுரையில் நிற்காத ஆடி அமாவாசை சிறப்பு ரயில்; ஊழியர்கள் மீது நடவடிக்கை!
வீ த லீடர்ஸ் - சார்பாக சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெறும் ஒற்றுமை பேரணிக்கு உயர் நீதிமன்றம் பச்சைக்கொடி!
வீ த லீடர்ஸ் - சார்பாக சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெறும் ஒற்றுமை பேரணிக்கு உயர் நீதிமன்றம் பச்சைக்கொடி!
மானாமதுரை காவல் நிலையத்தில் பெண் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சியால் பரபரப்பு ஏற்பட்டது !
மானாமதுரை காவல் நிலையத்தில் பெண் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சியால் பரபரப்பு ஏற்பட்டது !
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Anbumani: பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை
பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை
CM Vijay DVAC: லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
திமுக ஆட்சியில் ரூ.37 ஆயிரம் EB பில்.. இப்போ ரூ.13 ஆயிரம்.. எனக்கு அதிகமாக வரல.. வசமாக சிக்கிய வைஷாலி!
திமுக ஆட்சியில் ரூ.37 ஆயிரம் EB பில்.. இப்போ ரூ.13 ஆயிரம்.. எனக்கு அதிகமாக வரல.. வசமாக சிக்கிய வைஷாலி!
Volkswagen SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட் எஸ்யுவி - ஃபோக்ஸ்வாகன் அதிரடி - என்ன இருக்கும்? எந்த மாடல் - முழு விவரம்
ரூ.9 லட்சம் பட்ஜெட் எஸ்யுவி - ஃபோக்ஸ்வாகன் அதிரடி - என்ன இருக்கும்? எந்த மாடல் - முழு விவரம்
TN Weather News: இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
Embed widget