Yuvraj Singh Arrested | சாஹல் மீது சாதி ரீதியான வன்ம வார்த்தைகளை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு : யுவராஜ் சிங் கைது
சாஹல் மீது சாதி ரீதியான வன்ம வார்த்தைகளை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு : யுவராஜ் சிங் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
வீடியோ காலில் பேசும்போது, சக கிரிக்கெட்டர் சாஹல் மீது சாதி ரீதியான வன்ம வார்த்தைகளை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டின் காரணமாக முன்னாள் கிரிக்கெட்டர் யுவராஜ் சிங் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், கிரிக்கெட்டர் சாஹலுக்கு எதிராக வீடியோ காலில் பேசும்போது சாதி வன்ம வார்த்தைகளைப் பயன்படுத்தியதற்காக ஹன்சி போலீஸாரால் நேற்று கைது செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது. மூன்று மணிநேர விசாரணைக்குப் பின்பு, இடைக்கால ஜாமினில் விடுவிக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. பிரிவு 153 A மற்றும் பிரிவு 505-கீழ் யுவராஜ் சிங்கின் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.
சாதிய ரீதியான பேச்சு:-
முன்னதாக கடந்த பிப்ரவரி மாதத்தில், ஒரு குறிப்பிட்ட சாதியைக் குறித்து பேசியதற்காக ஹரியானா போலீசாரால் யுவராஜ் சிங் மீது வழக்கு பதியப்பட்டது. ஐபிசி 153, 153(a), 505, 295 பிரிவுகளின் கீழ் பதியப்பட்ட அவர் மீது அப்பொழுதே வழக்கு பதியப்பட்டது குறிப்பிடத்தக்கது
Former Indian cricketer #YuvrajSingh arrested by Haryana Police today, for allegedly using casteist slur against #YuzvendraChahal while on a video chat with Rohit Sharma last year; released on interim bail. He had issued an apology also. pic.twitter.com/YBwKxFyxfg
— Asianet Newsable (@AsianetNewsEN) October 17, 2021
ரிபப்ளிக், ஆசியாநெட் நியூஸேபில் தளங்கள் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளன.