Disease X: ”கோவிட்டை விட 20 மடங்கு ஆபத்தானது" மிரள வைக்க போகும் அடுத்த பெருந்தொற்று! - WHO வார்னிங்!
புதிய நோய் தொற்றுக்கு எதிராக உலக நாடுகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று:
கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சுகாதார ரீதியாக மட்டும் இன்றி, பொருளாதார ரீதியாகவும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இயல்பு வாழ்க்கையில் பாதிப்புகளை ஏற்படுத்தியது.
முதல் அலை, 2-வது அலை, 3-வது அலை என பரவிய கொரோனாவால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.
மேலும், அவ்வப்போது குரங்கு அம்மை, ஒமிக்ரான் போன்ற உருமாறிய கொரோனா வகைகளும் அச்சுறுத்தி வந்தன. இந்தியா மட்டுமின்றி உலகியே புரட்டிப்போட்ட கொரோனா தொற்றுக்கு, வேக்சினால் தான் சீக்சிரம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
"கொரோனாவை விட 20 மடங்கு ஆபத்தானது”
இந்த நிலையில், புதிய நோய் தொற்றை சமாளிக்க தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலகப் பொருளாதார மன்றத்தில் பார்வையாளர்கள் முன்னிலையில் பேசிய டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், "நாடுகள் மே மாதத்திற்குள் ஒரு புதிய தொற்று நோயை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
அனைத்து நாடுகளில் புதிய தொற்று நோய் பரவ வாய்ப்பிருக்கிறது. டிசீஸ் எக்ஸ் (Disease x) என்று குறிப்பிடும் புதிய நோய் தொற்றுக்கு எதிராக உலக நாடுகள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
‘Disease X’ is a placeholder for an unknown pathogen that could cause a global emergency.
— Tedros Adhanom Ghebreyesus (@DrTedros) January 17, 2024
History has taught us that we must anticipate new threats. Failing to prepare leaves the world prepared to fail.
At #WEF24 today, I spoke about @WHO initiatives that are supporting… pic.twitter.com/M4uF44WYNj
இந்த டிசீஸ்ஸ எக்ஸ் நோய் கொரோனாவை விட 20 மடங்கு ஆபத்தான கொடிய நோயாகும். இதனை சமாளிக்க உலக நாடுகள் தயாராக இருங்கள். கொரோனா தொற்றின்போது பல உயிர்கள் இழந்தோம். அவர்களை காப்பாற்றப்பட்டிருக்கலாம். ஆனால், போதுமான ஆக்ஸிஜன் இருப்பு, படுக்கைகள் இல்லை. அதேபோல, அனைத்து நாடுகளிலும் சமமான அளவில் தடுப்பூசிகள் கிடைக்கவில்லை. இது அனைத்து நாடுகளிலும் ஒரு தீவிர பிரச்னையாக உள்ளன" என்றார்.
டிசீஸ் எக்ஸ்:
நமக்கு தெரியாத ஒரு வகையான நுண்ணுயிர் பாதிப்பால் ஏற்படும் தொற்றை தான் டிசீஸ் எக்ஸ் என்று சொல்லப்படுகிறது. கொரோனா போலவே விலங்குகளிடையே பல நூறு வைரஸ் பாதிப்புகள் பரவி வருகிறது. அவை மனிதர்களுக்கு பரவினால் கொரோனாவை போல் பேரழிவை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. இந்த பாதிப்பு இணையாக இந்த புதிய தொற்று ஏற்படுத்தும் என்று வல்லுநர்கள் தெரிவித்தனர்.
கொரோனா வைரஸை போலவே இந்த புதிய வைரஸும் தன்னுடைய வெவ்வேறு திர்ப்புகளை இயற்கையாகவே மாறுபாடு அடைந்த தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்கலாம் என்றும் கணிக்கப்படுகிறது.