Watch Video: பாயும் பனிச்சிறுத்தை… பதறி ஓடும் ஆடு… கச்சிதமாக படம்பிடித்த இருவர்; வைரல் வீடியோ!
"இந்த கிளிப்பில் பயன்படுத்தப்பட்ட கடைசி பகுதியை எங்கள் விருந்தினர் எடித் பார்ஷி தனது தொலைபேசியில் அற்புதமாகப் படம்பிடித்தார்" என்று எழுதினார்.
இந்தியாவின் லடாக்கில் பனிச்சிறுத்தை வேட்டையாடும் தருணத்தை கச்சிதமாக படம்பிடித்த புனேவைச் சேர்ந்த வனவிலங்கு புகைப்படக் கலைஞர் வேதாந்த் திட்டே மற்றும் எடித் பார்ஷி என்ற இருவரின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
பனிச்சிறுத்தை வீடியோ
பனிச்சிறுத்தையைப் பார்ப்பது அரிதானது, அதிலும் அவை வேட்டையாடி இரையை பிடித்து கொன்று சாப்பிடுவதை காண்பது அரிதிலும் அரிது. வேதாந்தின் விடியோவில், பனிச்சிறுத்தை ஒரு யூரியலை (காட்டு ஆடு) வீழ்த்துவதற்கு அதன் முயற்சிகளையும் திறமைகளையும் வெளிப்படுத்தி வேட்டையாடுவதை நாம் காணலாம். "இயற்கை தரும் தருணத்தை இன்னும் நம்ப முடியவில்லை, இதற்கு நானே சாட்சியாக இருந்தேன்," என்று எழுதி, புகைப்படக்காரர் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
View this post on Instagram
மொபைலில் படம்பிடிக்கப்பட்டட இறுதிக் காட்சி
இன்ஸ்டாகிராமில் இந்த வீடியோவை வெளியிட்ட வேதாந்த் அத்துடன், "சிறுத்தை யூரியலைப் பிடிக்கும் இந்த கிளிப்பில் பயன்படுத்தப்பட்ட கடைசி பகுதியை எங்கள் விருந்தினர் எடித் பார்ஷி தனது தொலைபேசியில் அற்புதமாகப் படம்பிடித்தார்" என்று எழுதினார்.
யார் இந்த வேதாந்த்?
வேதாந்த் திட்டே தனது இணையதளத்தில் தன்னை ஒரு "பன்முக இயற்கை ஆர்வலர்" என்று விவரிக்கிறார், புனேவின் புறநகரில் உள்ள மலைகளில் விலங்குகள் மீதான அவரது காதல் வளர்ந்துள்ளது. அவர் பாதுகாப்பு, ஆராய்ச்சி, வனவிலங்கு மறுவாழ்வு மற்றும் பொறுப்பான சுற்றுலா ஆகியவற்றில் 14 ஆண்டுகள் பணிபுரிந்ததாக கூறப்படுகிறது.
And this is how we bring down prey on the steep mountains... Only to stroll down and pick up the groceries.
— Koustubh Sharma (@koustubh_sharma) March 15, 2023
Edith Barschi, accompanied by @VedantThite captures a rare natural history moment on camera, records a #snowleopard hunting an urial in Ladakh pic.twitter.com/Dr3xydV5cX
ஜாவாய் இந்தியா நிகழ்ச்சி
கான்டே நாஸ்ட் டிராவலர், வோக், டிராவல் அண்ட் லீஷர் போன்ற புகழ்பெற்ற உலகளாவிய இதழ்களில் வேதாந்தின் குறிப்பிடத்தக்க படைப்புகள் இடம்பெற்று பாராட்டுக்களைப் பெற்றுள்ளன. எடித் பார்ஷிக்கு, வேதாந்துடன் இணைந்து 'ஜவாய் - இந்தியாவின் சிறுத்தை மலைகள்' நிகழ்ச்சி உருவாக்கத்தில் டிஸ்கவரி சேனல் குழுவுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது என்று கூறுகிறார்.