West Bengal Election Result: மே. வங்காளத்தில் மீண்டும் பதற்றம்.. வாக்கு எண்ணிக்கை மையம் முன்பு குண்டு வெடிப்பு..!
மேற்கு வங்காளத்தில் உள்ள டைமண்ட் துறைமுகத்தில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தின் முன்பு நாட்டு வெடிகுண்டு வெடித்தது.
மேற்கு வங்காளத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை காலை முதலே விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அபாரமான முன்னிலையுடன் உள்ளது. இந்த நிலையில், மேற்கு வங்காளத்தில் உள்ள டைமண்ட் துறைமுகத்தில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தின் முன்பு நாட்டு வெடிகுண்டு வெடித்தது. இதனால், அங்கு பெரும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டுள்ளது.
#WATCH | Crude bombs go off outside a counting centre in Diamond Harbour, West Bengal.
— ANI (@ANI) July 11, 2023
Counting for Panchayat election is underway across the state. pic.twitter.com/woRfeqtOz3
மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த ஜூலை 8ஆம் தேதி பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்றது. முக்கொம்பில் உள்ள 60 ஆயிரத்து 593 சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. பஞ்சாயத்து தேர்தல் 2023 முடிவுகள் ஜூலை 11 (இன்று) எண்ணப்பட்டு வருகிறது.
மாநிலத்தில் மொத்தம் 339 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், மத்திய காவல் படைகள் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளன. பஞ்சாயத்து தேர்தலின் வேட்புமனு தாக்கல் தொடங்கியது முதல் வாக்குப்பதிவு நடைபெற்றது வரை தொடர்ந்து அங்கு வன்முறை வெடித்தது. வேட்புமனு தாக்கல் தொடங்கியதில் இருந்து இதுவரை 41 பேர் பஞ்சாயத்து தேர்தலில் வன்முறையில் சிக்கி உயிரிழந்ததாக தகவல் வெளியானது. மேலும், வாக்குப்பதிவு நாளில் ஏற்பட்ட மோதலில் 18 பேர் உயிரிழந்தனர்.
முன்னதாக வாக்குப்பதிவின்போது முறைகேடு நடந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டினர். மேலும், வாக்குப்பெட்டியில் வாக்குகள் கொள்ளையடிக்கப்பட்டதாகவும் புகார் எழுந்துள்ளது. அதனால்தான் வாக்கு எண்ணிக்கையின் போது வாக்குச் சீட்டுகளின் நிலைமையை சரிபார்க்க மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆணையத்தின்படி, தலைமை அதிகாரியின் கையொப்பம் மற்றும் பின்புறத்தில் ரப்பர் ஸ்டாம்ப் அச்சு இல்லாமல் வாக்குச் சீட்டுகள் எண்ணப்படக் கூடாது என அறிவிக்கப்பட்டது.