மேலும் அறிய

"கல்வி என்பது தெய்வீக கட்டளை" குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் அதிரடி உரை..!

வளர்ச்சியடைந்த நாடு என்ற இலக்கை அடைய ஆராய்ச்சியும் புதிய கண்டுபிடிப்புகளும் முக்கியம்: குடியரசு  துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார்.

புதுதில்லியில் இன்று தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் (என்.ஐ.டி) 4-வது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய குடியரசு துணைத்தலைவர், கல்விச் சூழலை வலுப்படுத்துவதில் முன்னாள் மாணவர்களின் முக்கிய பங்கு குறித்து பேசினார்.

"ஆராய்ச்சியும் புதிய கண்டுபிடிப்புகளும் வளர்ச்சியடைந்த நாடு என்ற இலக்கை அடைவதற்கு முக்கியமானவை.    உண்மையில், ஆராய்ச்சியிலும் புதிய கண்டுபிடிப்புகளிலும்  நாம் எவ்வளவு உயர்ந்த நிலையில் இருக்கிறோம் என்பதுதான் உலக சமுதாயத்திற்கு நமது வலிமையை வரையறுக்கும். எனவே  கல்வி நிறுவனங்கள் தங்கள் திறனை "கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சியின் உலைக்களங்களாக" பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று குடியரசு துணைத்தலைவர்  ஜக்தீப் தன்கர் கூறியுள்ளார். கார்ப்பரேட் நிறுவனங்கள் கணிசமான பங்களிப்புகள் மூலம் இந்த இயக்கத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார். "வர்த்தகம், தொழில், வணிகம் மற்றும் வர்த்தக சங்கங்கள் தாராளமான நிதி பங்களிப்புகள் மூலம் ஆராய்ச்சியையும் புதிய கண்டுபிடிப்புகளையும் தூண்டுவதற்கு முன்வர வேண்டும்" என்று அவர் கேட்டுக்கொண்டார்.

"ஒரு நிறுவனத்தின் முன்னாள் மாணவர்கள் பல வழிகளில் அதன் உயிர்நாடி. அவர்கள் நிறுவனத்தின் தூதர்கள். உங்கள் நிறுவனத்திற்கு திருப்பிச் செலுத்துவதற்கான சிறந்த வழி பழைய மாணவர் சங்கத்தின் செயலில் உறுப்பினராக இருப்பதே என்பது உலகளாவிய ரீதியிலும் தேசிய அளவிலும் அங்கீகரிக்கப்பட்ட நடைமுறையாகும். வருடாந்திர பங்களிப்புகளை வழங்கும் முன்னாள் மாணவர் நிதியம் இருக்க வேண்டும் என்று நான் அழுத்தமாக வலியுறுத்துகிறேன். உலக அளவில் சில சிறந்த நிறுவனங்கள் மேல்நோக்கிய வளர்ச்சியில் உள்ளன. ஏனெனில் இந்த நிறுவனங்கள் முன்னாள் மாணவர்களின் ஆற்றலால் தூண்டப்படுகின்றன. கல்வியைப் பெறுவதற்காக இந்த நிறுவனத்தில் அடியெடுத்து வைக்கும் அனைவரின் சிறந்த எதிர்காலத்திற்காக உங்கள் முன்னாள் மாணவர்களின் ஆற்றலை நீங்கள் பாதுகாத்து ஒருங்கிணைக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.

"கல்வி என்பது வணிகம் அல்ல. கல்வி என்பது சமுதாய சேவை. கல்வி உங்கள் கடமை. நீங்கள் சேவை செய்ய வேண்டும். சமூகத்திற்கு திருப்பிச் செலுத்துவது உங்கள் கடமை, அது தெய்வீகக் கட்டளை. சமூகத்திற்கு திருப்பிச் செலுத்துவதற்கான சிறந்த வழி கல்வியில் முதலீடு செய்வதாகும். கல்வியில் முதலீடு என்பது மனித வளத்திற்கான முதலீடு, நமது நிகழ்காலத்திற்கான முதலீடு, நமது எதிர்காலத்திற்கான முதலீடு. கல்வியின் மூலமே பல்லாயிரம் நூற்றாண்டுகளின் பெருமைமிகு கடந்த காலத்தை நாம் கண்டடைகிறோம்" என்று  தன்கர் குறிப்பிட்டார்.

இந்தியாவின் வரலாற்று மற்றும் ஜனநாயக வலிமையைப் பிரதிபலிக்கும் வகையில் பேசிய குடியரசு துணைதலைவர், "பழமையான, மிகப்பெரிய, செயல்பாட்டு ஜனநாயகமான பாரதம், உலகில் மிக சக்திவாய்ந்ததாக இருக்க வேண்டும். அது நமது கனவாக இருக்க முடியாது. அது மீட்கப்பட்ட கனவாக இருக்க வேண்டும்; சக்திவாய்ந்த பாரதம் உலக நல்லிணக்கம், அமைதி மற்றும் மகிழ்ச்சிக்கான உத்தரவாதமாக இருக்கும். ஏனென்றால் நாம் பல நூற்றாண்டுகளாக நமது சிந்தனையை வளர்த்து வருகிறோம். அதை நாம் கடைப்பிடிக்கிறோம். வசுதைவ குடும்பகம் - ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்."

தேசியவாதத்திற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கு அழைப்பு விடுத்த தன்கர், "பாகுபாடு அல்லது பிற நலன்களை விட தேச நலனுக்கு முன்னுரிமை இருக்க வேண்டும்" என்றார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Embed widget