மேலும் அறிய
Advertisement
Vodafone Recharge: நாங்கனா சும்மாவா..! வோடாஃபோன் நிறுவனமும் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு
Vodafone Recharge: வோடாஃபோன் ஐடியா டெலிகாம் நிறுவனமும் தங்களது சேவைகளுக்கான, கட்டணத்தை உயர்த்தி அறிவித்துள்ளது.
Vodafone Recharge: ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களை தொடர்ந்து, வோடாஃபோன் ஐடியா டெலிகாம் நிறுவனமும் தங்களது சேவைக் கட்டணத்தை உயர்த்தி அறிவித்துள்ளது.
ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்திய வோடாஃபோன் ஐடியா:
புதிய கட்டணங்கள் ஜுலை 3ம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவித்துள்ளது. அதன்படி, கட்டணங்கள் சுமார் 20 ரூபாயில் தொடங்கி 600 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்களும் தங்களது சேவை கட்டணத்தை உயர்த்திய நிலையில், வோடாஃபோன் நிறுவனமும் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இது பயனாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உயர்த்தப்பட்ட கட்டண விவரங்கள்:
- 28 நாட்களுக்கு 179 ரூபாய்க்கு வழங்கப்பட்டு வந்த அன்லிமிட்டெட் வாய்ஸ் காலிங் சேவைக்கான கட்டணம் தற்போது 199 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
- 84 நாட்களுக்கு 459 ரூபாய்க்கு வழங்கப்பட்டு வந்த அன்லிமிட்டெட் வாய்ஸ் காலிங் சேவைக்கான கட்டணம் தற்போது 509 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது
- 365 நாட்களுக்கு 1799 ரூபாய்க்கு வழங்கப்பட்டு வந்த அன்லிமிட்டெட் வாய்ஸ் காலிங் சேவைக்கான கட்டணம் தற்போது 1999 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது
- 28 நாட்களுக்கு 269 ரூபாய்க்கு வழங்கப்பட்டு வந்த டெய்லி டேட்டா பிளானிங் சேவைக்கான கட்டணம் தற்போது 299 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது
- 28 நாட்களுக்கு 299 ரூபாய்க்கு வழங்கப்பட்டு வந்த டெய்லி டேட்டா பிளானிங் சேவைக்கான கட்டணம் தற்போது 349 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது
- ஒரு மாதத்திற்கு 319 ரூபாய்க்கு வழங்கப்பட்டு வந்த டெய்லி டேட்டா பிளானிங் சேவைக்கான கட்டணம் தற்போது 379 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது
- 56 நாட்களுக்கு 479 ரூபாய்க்கு வழங்கப்பட்டு வந்த டெய்லி டேட்டா பிளானிங் சேவைக்கான கட்டணம் தற்போது 579 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது
- 56 நாட்களுக்கு 539 ரூபாய்க்கு வழங்கப்பட்டு வந்த டெய்லி டேட்டா பிளானிங் சேவைக்கான கட்டணம் தற்போது 649 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது
- 84 நாட்களுக்கு 719 ரூபாய்க்கு வழங்கப்பட்டு வந்த டெய்லி டேட்டா பிளானிங் சேவைக்கான கட்டணம் தற்போது 859 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது
- 84 நாட்களுக்கு 839 ரூபாய்க்கு வழங்கப்பட்டு வந்த டெய்லி டேட்டா பிளானிங் சேவைக்கான கட்டணம் தற்போது 979 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது
- 365 நாட்களுக்கு 2899 ரூபாய்க்கு வழங்கப்பட்டு வந்த டெய்லி டேட்டா பிளானிங் சேவைக்கான கட்டணம் தற்போது 3499 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது
- நாளொன்றிற்கு 19 ரூபாய்க்கு வழங்கப்பட்டு வந்த 1ஜிபி டேடா சேவைக்கான கட்டணம் 22 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது
- மூன்று நாட்களுக்கு 39 ரூபாய்க்கு வழங்கப்பட்டு வந்த 6ஜிபி டேடா சேவைக்கான கட்டணம் 48 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது
- 401 ரூபாய்க்கு வழங்கப்பட்டு வந்த போஸ்ட்பெய்ட் விஐ மேக்ஸ் சேவைக்கான கட்டணம் 451 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது
- 501 ரூபாய்க்கு வழங்கப்பட்டு வந்த போஸ்ட்பெய்ட் விஐ மேக்ஸ் சேவைக்கான கட்டணம் 551 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது
- 601 ரூபாய்க்கு வழங்கப்பட்டு வந்த ஃபேமிலி போஸ்ட்பெய்ட் விஐ மேக்ஸ் சேவைக்கான கட்டணம் 701 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது
- 1001 ரூபாய்க்கு வழங்கப்பட்டு வந்த ஃபேமிலி போஸ்ட்பெய்ட் விஐ மேக்ஸ் சேவைக்கான கட்டணம் 451 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது
. மொத்தம் 13 ப்ரீபெய்ட் திட்டங்கள் மற்றும் 4 போஸ்ட்பெய்ட் திட்டங்கள் உயர்வு கண்டுள்ளன. ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகியவை அந்தந்த திட்டங்களுக்கு அறிவித்த உயர்வுகளுக்குப் பிறகு இந்த உயர்வு வந்துள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
சென்னை
இந்தியா
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion