Viral Video : தெருவில் குடுமிபிடி சண்டைபோட்ட பள்ளி மாணவிகள்: வேடிக்கை பார்க்க குவிந்த கூட்டம்.. வைரல் வீடியோ
குழாயடியில் சண்டை, குடுமிபிடி சண்டையெல்லாம் தெருக்களில் பெண்கள் போடும் சண்டையாக தான் பார்த்திருப்போம்.
குழாயடியில் சண்டை, குடுமிபிடி சண்டையெல்லாம் தெருக்களில் பெண்கள் போடும் சண்டையாகத்தான் பார்த்திருப்போம். ஆனால் பள்ளியில் படிக்கும் சிறுமிகள் நடுத்தெருவில் அநாகரிகமாக சண்டையிட்ட காட்சி இணையத்தில் வைரலாகி விமர்சனங்களைப் பெற்றுள்ளது.
சண்டை பெரிதாக சாலையில் இருந்த பெண் ஒருவர் குறுக்கிட்டு சிறுமிகளை விலக்கி விட முயற்சிக்கிறார். இந்த சம்பவம் ராஜஸ்தானில் நடந்துள்ளது. இந்தக் காட்சிகள் அடங்கிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதுபோன்ற சம்பவங்கள் ராஜஸ்தானில் மட்டுமல்ல ஆங்காங்கே பல இடங்களிலும் நடப்பதை செய்திகள் வாயிலாக நாம் அவ்வப்போது பார்த்துதான் வருகிறோம். பெரும்பாலும் இந்த சண்டைகள் ஆண் நண்பர், பெண் தோழி விவகாரம் போன்ற பதின்ம வயது பிரச்சனைகளின் வெளிப்பாடாகத் தான் இருக்கின்றன. பதின்ம வயதில் எதிர்பாலினர் ஈர்ப்பு இயல்பே. இந்த வயதில் இயல்பை அவர்களுக்கு எடுத்துரைப்பது அவசியம்.
பதின் பருவத்து பிள்ளைகளை ஆரோக்கியமான கட்டுபாடுகளுக்கு உள்ளாக்க வேண்டியது அவசியம். தாங்கள் நினைத்ததைச் செய்யக்கூடிய தைரியம் அவர்களுக்கு வருவதற்குள் வாழ்வின் நெறிகளை ஆரோக்கியமாகப் புரிய வைக்க வேண்டும்.
दोन तरुणींच्या फ्री स्टाईल हाणामारीचा एक व्हिडीओ सध्या सोशल मिडीयावर प्रचंड व्हायरल झाला आहे. ज्यामध्ये तरुणी हाणामारी करताना दिसून येत आहेत. pic.twitter.com/FIEqb9CNHy
— News18Lokmat (@News18lokmat) February 4, 2023
தவறான உடலுறவு, எச்.ஐ.வி, எய்ட்ஸ் தொற்று, பால்வினை நோய்கள் குறித்த விழிப்புணர்வை தகுந்த வயதில் அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். அதேபோல மாதவிடாய் ஏற்படுவதற்கான காரணத்தில் மூடநம்பிக்கைகளை வளர்க்காமல் அறிவியல் சார்ந்த கருத்துகளை பதின் பருவத்தினருக்கு தெரியப்படுத்த வேண்டும்.
ஆனால் அவ்வாறான மனப்பக்குவம் இன்னும் இந்தியப் பெற்றோர்களுக்கு வரவில்லை என்று தான் கூற வேண்டும். அதற்குக் காரணம் பெற்றோரிடமே நிலவும் மனத் தடை. இதைப் பேசலாமா பேசக்கூடாதா என்ற தடை. இந்தியாவில் பாலியல் கல்வியைப் பள்ளிகளில் கொண்டு வருவது நீண்ட காலமாக விவாதப் பொருளாகவே இருக்கும் சூழலில். இந்தப் பிரச்சினைக்கு பெற்றோருக்கு ஆலோசனை வழங்கி அவர்களை அவர்களின் பிள்ளைகள் மத்தியில் பேசவைத்து தீர்வு காணலாம். ஓரளவு படித்த விவரம் தெரிந்து பெற்றோர் இதற்கு திறந்த மனதுடன் வரலாம். ஆனாலும் சிறு வயதிலிருந்தே பள்ளிகளில் ஆண், பெண் உடல்வாகு தொடங்கி அவர்களின் பாலியல் ஈர்ப்பு வரை எது சரியான அணுகுமுறை என்பதைப் புரிய வைக்க வேண்டும். ஹார்மோன் மாற்றங்களால் பாலுணர்வு இயல்பு தான் ஆனால் அதை ஆராய்ந்து செய்து பார்க்க உடலும், மனமும் தகுதி பெற வேண்டும் என்பதை புரிய வைக்க வேண்டும். மனதளவில் இதுபோன்ற தெளிவு பெற்றுவிட்டால். பின்னர் பதின்ம வயது ஈர்ப்புகளால் இது போன்ற தெருச் சண்டைகளில் குழந்தைகள் ஈடுபட மாட்டார்கள். இதுதவிர சினிமா, கிரிக்கெட் ரசிகர் மன்ற பிரச்சனையாலும் சிறார் மோதிக் கொள்வது உண்டு. அந்த போலி பிம்ப போற்றுதலையும், ஹீரோ ஒர்ஷிப் கலாச்சாரத்தையும் பேசித்தான் பிள்ளைகளுக்குப் புரிய வைக்க இயலும்.