Watch Video: தரையிறங்கும்போது துள்ளியபடி குதித்த ஹெலிகாப்டர்.. அதிர்ச்சி வீடியோ..!
ஹெலிகாப்டரின் கடைசி பகுதியில் இருக்கும் காற்றழுத்தம் குறித்து எச்சரிக்கையுடன் செயல்படுமாறு விமானிகளை டிஜிசிஏ கேட்டுக் கொண்டுள்ளது.
கேதார்நாத்தில் கட்டுப்பாடில்லாமல் கடுமையாக தரையிறங்கியதால் ஹெலிகாப்டர் குதித்து திரும்பியது. இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
கடந்த வாரம் யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற தனியார் ஹெலிகாப்டர் கேதார்நாத் கோயிலின் ஹெலிபேடில் கட்டுப்பாடில்லாமல் கடுமையாக தரையிறங்கியதை அடுத்து, விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் விசாரணையைத் தொடங்கியுள்ளது. இச்சம்பவம் கடந்த மே 31ஆம் தேதி நடந்தது. உயரமான கேதார்நாத் கோயிலுக்கு தம்பி ஏவியேஷன் ஹெலிகாப்டர் யாத்ரீகர்களை ஏற்றிச் சென்று கொண்டிருந்தது. இந்த சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இதுதொடர்பாக வெளியான வீடியோவில், பனிமூட்டமான வானிலைக்கு மத்தியில் கேதார்நாத் ஹெலிபேடில் தரையிறங்கும் போது ஹெலிகாப்டர் துள்ளிக் குதித்து திரும்புவதைக் காணலாம்.
மே 31 அன்று, தோராயமாக மதியம் 1.30 மணியளவில், தம்பி ஏவியேஷன் நிறுவனத்திற்கு சொந்தமான பெல் 407 ஹெலிகாப்டர், கேதார்நாத் ஹெலிபேடில் தரையிறங்கும் போது கட்டுப்பாடற்ற, மிகவும் கடினமாக தரையிறங்கியதாக விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
#WATCH A helicopter belonging to a private aviation company while landing at Kedarnath helipad had an uncontrolled hard landing on 31st May; no passengers were injured in the incident#Uttarakhand pic.twitter.com/4yskr0aoz5
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) June 6, 2022
இதனைத்தொடர்ந்து, டிஜிசிஏ அனைத்து ஆபரேட்டர்களுக்கும் பாதுகாப்புத் தரங்களை கண்டிப்பாக கடைபிடிப்பதற்கான செயல்பாட்டு ஆலோசனையை வழங்கியுள்ளது. டிஜிசிஏ தனது ஆலோசனையில், நான்கு உயரமான புனிதத் தலங்களை அணுகும் போது, குறிப்பாக கேதார்நாத்தில், ஒரு வழி அணுகுமுறையின் தடையை எதிர்கொள்ளும் போது, ஹெலிகாப்டரின் கடைசி பகுதியில் இருக்கும் காற்றழுத்தம் குறித்து எச்சரிக்கையுடன் செயல்படுமாறு விமானிகளை டிஜிசிஏ கேட்டுக் கொண்டுள்ளது.
கேதார்நாத் பள்ளத்தாக்கில் பறக்கும் அனைத்து ஹெலிகாப்டர்களும் போதுமான இடைவெளியை பராமரிக்க வேண்டும் என்றும், விமானிகள் நடவடிக்கை எடுக்க தகுதியானவர்களா என்பதை ஆபரேட்டர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் விமான ஒழுங்குமுறை அதிகாரி மேலும் தெரிவித்தார்.
Incident being probed, an operational advisory issued to all operators for strict compliance to safety standards as per joint SOP issued for these operations. A spot check is also planned for ensuring safety oversight on these operations: Directorate General of Civil Aviation
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) June 6, 2022
இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றுநோய் காரணமாக யாத்திரை நிறுத்தப்பட்டதால் இமயமலைக் கோயில்களுக்கு இந்த ஆண்டு யாத்ரீகர்களின் கூட்டம் அதிகமாக உள்ளது. ஒரு மாதத்திற்குள் இமயமலை கோயில்களுக்கு செல்லும் யாத்ரீகர்களில் குறைந்தது 78 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்