மேலும் அறிய

2000 ரூபாய் நோட்டுகள் செல்லாதா? மீண்டும் வருகிறதா 1000 ரூபாய் நோட்டுகள்? எது உண்மை?

FACT CHECK : இரண்டாயிரம் ரூபாய் நோட்டு தடை செய்யப்படுவதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்களால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

மீண்டும் 1000 நோட்டுகளா..?

நாட்டில் வரும் ஜனவரி,1-ஆம் தேதி முதல் ஆயிரம் ரூபாய் பண நோட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வர இருப்பதாக சமூக வலைதளங்களில் வெளியான தகவல் வதந்தி என்று பத்திரிகை தகவல் அலுவலகம் (press bureau of india) தெரிவித்துள்ளது. 

சமூக வலைதளங்களில் ஆயிரம் ரூபாய் நோட்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர பட உள்ளதாகவும், இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை தடை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வைரல் ஆனது. 2018-2019 ஆம் ஆண்டிற்கு பிறகு புதிய ரூ.2000 நோட்களை அச்சடிக்க முடிவெடுக்கப்படவில்லை என்று மத்திய அரசு தெரிவித்ததற்கு பிறகு ரூ.1000 மற்றும் ரூ.2000 நோட்கள் பற்றிய செய்திகள் அதிகமாக பகிரப்பட்டன. 

வதந்தி:

இதை கவனித்த பத்திரிகை தகவல் அலுவலகத்தின் (PIB Fact Check) ‘உண்மை கண்டறியும்’ பிரிவு, “சமூக வலைதளங்களில் வெளியான தகவல் உண்மையில்லை. உறுதிப்படுத்தப்படாதா, தவறான தகவல்களை யாரும் பகிர வேண்டாம்.” என்று தெரிவித்திருந்தது.

மேலும், இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை தடை செய்யும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை என்றும் டிவிட்டர் பதிவில் தெரிவித்திருந்தது. 

2019-இல் இருந்து புதிய நோட்டுகள் அச்சிடப்படவில்லை:

ரிசர்வ் வங்கி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தரவுகளின் படி, கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டுவரை புதிதாக இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை அச்சிடவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 - ஆம் தேதி மத்திய அரசு பண மதிப்பு இழப்பை அறிவித்த பிறகு, ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் தடை செய்யப்பட்டு, இரண்டாயிரம் ரூபாய் பணம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இந்தாண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத் தொடரில், கடந்த 2016 ஆம் ஆண்டில் இருந்து 2020 வரை இரண்டாயிரம் ரூபாய் போலி பணத்தின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 2016-இல் 2,272 ஆக இருந்தது 2020-இல் 2,44,834 ஆக அதிகரித்துள்ளது.

ரூ. 2000 நோட்டு புழக்கம் குறைந்தது:

கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் நிலவரப்படி, 2,000 ரூபாய்  கரன்சி நோட்டுகளின் புழக்கம், 274 கோடியாக இருந்தது. இது, 2021 மார்ச்சில், 245 கோடியாகவும், 2022 மார்ச்சில், 214 கோடியாகவும் குறைந்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  கடந்த நான்கு ஆண்டுகளாக  2000 ரூபாய் நோட்டுகளை புதிதாக ரிசர்வ் வங்கி அச்சடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஊழல், கருப்புப்பண புழக்கத்தை குறைக்கும் நோக்கத்தில் உயர் மதிப்புமிக்க ரூ.2000 நோட்டுக்களை புதிதாக அச்சடிப்பதை நிறுத்துவதாக கடந்த 2019 ஆம் ஆண்டில் ரிசர்வ் வங்கி அறிவித்தது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

 “பிரபஞ்சம் இருக்கும் வரை... இதில்தான் கேப்டனின் ஆன்மா சந்தோஷமடையும்” - மனம் உருகி பேசிய பிரேமலதா விஜயகாந்த்
 “பிரபஞ்சம் இருக்கும் வரை... இதில்தான் கேப்டனின் ஆன்மா சந்தோஷமடையும்” - மனம் உருகி பேசிய பிரேமலதா விஜயகாந்த்
பெற்றோர் அச்சமடைய வேண்டாம்: அண்ணா பல்கலை நிர்வாகத்துக்கு ஆளுநர் போட்ட முக்கிய உத்தரவு!
பெற்றோர் அச்சமடைய வேண்டாம்: அண்ணா பல்கலை நிர்வாகத்துக்கு ஆளுநர் போட்ட முக்கிய உத்தரவு!
TNPSC Free coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி: கலந்துகொள்வது எப்படி?
TNPSC Free coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி: கலந்துகொள்வது எப்படி?
குடி குடியை கெடுக்குமா? அதுனால என்ன பயன்? - கடிந்து கொண்ட நீதிமன்றம் - என்ன நடந்தது?
குடி குடியை கெடுக்குமா? அதுனால என்ன பயன்? - கடிந்து கொண்ட நீதிமன்றம் - என்ன நடந்தது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
 “பிரபஞ்சம் இருக்கும் வரை... இதில்தான் கேப்டனின் ஆன்மா சந்தோஷமடையும்” - மனம் உருகி பேசிய பிரேமலதா விஜயகாந்த்
 “பிரபஞ்சம் இருக்கும் வரை... இதில்தான் கேப்டனின் ஆன்மா சந்தோஷமடையும்” - மனம் உருகி பேசிய பிரேமலதா விஜயகாந்த்
பெற்றோர் அச்சமடைய வேண்டாம்: அண்ணா பல்கலை நிர்வாகத்துக்கு ஆளுநர் போட்ட முக்கிய உத்தரவு!
பெற்றோர் அச்சமடைய வேண்டாம்: அண்ணா பல்கலை நிர்வாகத்துக்கு ஆளுநர் போட்ட முக்கிய உத்தரவு!
TNPSC Free coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி: கலந்துகொள்வது எப்படி?
TNPSC Free coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி: கலந்துகொள்வது எப்படி?
குடி குடியை கெடுக்குமா? அதுனால என்ன பயன்? - கடிந்து கொண்ட நீதிமன்றம் - என்ன நடந்தது?
குடி குடியை கெடுக்குமா? அதுனால என்ன பயன்? - கடிந்து கொண்ட நீதிமன்றம் - என்ன நடந்தது?
Chennai Rain: சென்னைக்கு மழை இருக்கா, இல்லையா.! வானிலை மையம் தெரிவித்தது என்ன?
Chennai Rain: சென்னைக்கு மழை இருக்கா, இல்லையா.! வானிலை மையம் தெரிவித்தது என்ன?
உடைகிறது பாமக? மேடையில் மோதிக்கொண்ட தந்தை - மகன்!  காரணமான முகுந்தன் யார்?
உடைகிறது பாமக? மேடையில் மோதிக்கொண்ட தந்தை - மகன்!  காரணமான முகுந்தன் யார்?
PMK Meeting: மேடையிலேயே வாக்குவாதம்.. அன்புமணி-ராமதாஸ் மோதல்! பரபரப்பில் பாமக!
PMK Meeting: மேடையிலேயே வாக்குவாதம்.. அன்புமணி-ராமதாஸ் மோதல்! பரபரப்பில் பாமக!
Anna University Issue: அண்ணா பல்கலை. மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு; கல்வி கட்டணமில்லை- நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Anna University Issue: அண்ணா பல்கலை. மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு; கல்வி கட்டணமில்லை- நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Embed widget