Watch Video | திருமணத்திற்கு முன்பாக தேர்வு எழுதிய இளம்பெண்- வைரலாகும் வீடியோ !
திருமணத்திற்கு முன்பாக இளம்பெண் ஒருவர் தேர்வு எழுதும் வீடியோ ஒன்று வேகமாக வைரலாகி வருகிறது.
![Watch Video | திருமணத்திற்கு முன்பாக தேர்வு எழுதிய இளம்பெண்- வைரலாகும் வீடியோ ! Video of Rajkot young women Writing exam with Bridal Makeup goes viral in Instagram Watch Video | திருமணத்திற்கு முன்பாக தேர்வு எழுதிய இளம்பெண்- வைரலாகும் வீடியோ !](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/23/be6d6b0f518ae147e8b330190f5c7c08_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
திருமணங்கள் எப்போதும் இந்தியாவில் மிகவும் விமர்சையாக நடைபெறும் நிகழ்ச்சிகளில் ஒன்று. அதிலும் குறிப்பாக வட இந்தியாவில் திருமணங்கள் என்பது மிகப் பெரிய திருவிழாவை போல் நடைபெறும். அங்கு திருமணத்திற்கு முன்பாக பல்வேறு சடங்குகள் கலை நிகழ்ச்சிகள் என வீடு முழுவதும் கொண்டாட்டம் கலைக்கட்டும். அந்தவகையில் குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் பகுதியில் நடைபெற்ற திருமணத்தில் ஒரு வித்தியாசமாக நிகழ்வு நடைபெற்றுள்ளது.
ராஜ்கோட் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. சரியாக அவருடைய திருமணத்திற்கு முந்தைய நாளில் தேர்வு ஒன்று வந்துள்ளது. இதைத் தொடர்ந்து திருமண நிகழ்வுகளுக்கு தயாராகி அதை விரைவாக முடித்து கொண்டு அப்பெண் தேர்வு எழுத சென்றுள்ளார். அவர் மணப்பெண் கோலத்தில் தேர்வு எழுதியதை பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
View this post on Instagram
அந்தப் பெண் தேர்வு எழுதுவது தொடர்பாக வீடியோவை ஒருவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அத்துடன் அந்தப் பதிவில்,”குஜராத் மாநிலத்தில் பல்கலைக்கழக தேர்வுகளில் சிவாங்கி பகாதாரியா என்ற பெண் தன்னுடைய வருங்கால கணவருடன் மணப் பெண் கோலத்தில் வந்து தேர்வு எழுதி சென்றார். அவர் தேர்விற்கு பிறகு தன்னுடைய திருமணத்தின் மற்ற சடங்குகளை செய்வார்” எனக் கூறியிருந்தார். நேற்று பதிவிட்ட இந்த பதிவை தற்போது வரை 4 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர். அத்துடன் பலரும் இந்த மணப்பெண்ணை பாராட்டி வருகின்றனர்.
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்க: 25 எம்எல்ஏக்கள் தொடர்பில் உள்ளனர் - காங்கிரசுக்கு சவால் விடும் அரவிந்த் கெஜ்ரிவால்!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)