Watch video: இவன் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டான்.. மணமேடையில் கன்னத்தில் அறைந்த மணமகள் - வைரல் வீடியோ !
மணமேடையில் திருமணத்திற்கு முன்பாக பெண் ஒருவர் மணமகனை அறையும் வீடியோ வேகமாக வைரலாகி வருகிறது.
![Watch video: இவன் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டான்.. மணமேடையில் கன்னத்தில் அறைந்த மணமகள் - வைரல் வீடியோ ! Uttarpradesh Hamirpur Bride slapping Bridegroom during wedding video goes viral in twitter Watch video: இவன் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டான்.. மணமேடையில் கன்னத்தில் அறைந்த மணமகள் - வைரல் வீடியோ !](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/20/a02bf31095c79c4b4e78cd8d7976fb42_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
உலகம் முழுவதும் திருமணம் என்றால் பெரிய கொண்டாட்டம் தான். அதிலும் குறிப்பாக இந்தியாவில் திருமணங்கள் என்றால் பெரியளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும். தென் இந்தியாவைவிட வட இந்தியாவில் திருமணங்கள் மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும். அப்படி நடைபெறும் திருமணங்களில் சில வீடியோக்கள் வைரலாவது வழக்கம். அந்தவகையில் தற்போது வட இந்திய திருமணம் தொடர்பான வீடியோ ஒன்று வேகமாக வைரலாகி வருகிறது.
இந்நிலையில் உத்தரபிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற திருமணம் ஒன்று தொடர்பான வீடியோ வேகமாக வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் திருமணம் செய்யும் மேடையில் மணமகனை மணமகள் கண்ணத்தில் இரண்டு முறை அறைந்துள்ளார். அத்துடன் அவர் மாலையை மாற்றும் போது மேடையில் இருந்து கீழே இறங்கும் காட்சிகள் இந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்தத் திருமணம் கடந்த சனிக்கிழமை இரவு நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Bride slaps groom twice, storms off stage in UttarPradesh's Hamirpur pic.twitter.com/ux8EHXCatl
— शुद्ध गरीब 🏹 (@ShuddhGarib) April 19, 2022
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது. இந்த வைரலான வீடியோ தொடர்பாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி உத்தரபிரதேச மாநிலம் ஹமிர்பூர் பகுதியில் இந்த திருமணம் நடைபெற்றுள்ளது. மணமேடையில் திடீரென மணமகள் மணமகனை அறைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனினும் சில மணி நேரங்களுக்கு பிறகு உறவினர்களின் பேச்சை கேட்டு அப்பெண் மணமகனை திருமணம் செய்து கொண்டுள்ளதாக தெரிகிறது. இருப்பினும் தற்போது வரை அந்தப் பெண் எதற்காக மணமகனை அடித்தார் என்பது தொடர்பான தகவல் வெளியாகவில்லை. இதன்காரணமாக இந்தச் சம்பவம் எந்த காரணத்தால் நடைபெற்றது என்பது தொடர்பாக தெளிவாக தெரியவில்லை. எனினும் ஒரு சிலர் இது வரதட்சணை பிரச்னையாக இருக்கலாம் என்றும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அது தொடர்பாகவும் காவல்துறையினர் விசாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க:ரூபாய் நோட்டில் காதலனுக்கு தூது அனுப்பிய காதலி: டிரெண்டாக்கிய நெட்டிசன்கள்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)