ஆட்டம்… கொண்டாட்டம்! நலங்கு விழாவில் நடமாடி திடீரென உயிரிழந்த மணமகள்! திருமணத்திற்கு முன்பு சோகம்!
உத்தரப்பிரதேசத்தில் திருமண நலங்கு வைக்கும் நிகழ்ச்சியில் நடனமாடிக்கொண்டிருந்த 22 வயது மணமகள் திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் திருமண நலங்கு வைக்கும் நிகழ்ச்சியில் நடனமாடிக்கொண்டிருந்த 22 வயது மணமகள் திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தின் பதாவுனில் 22 வயது மணமகள் ஒருவருக்கு, அவரது சிறப்பு நாளாக இருக்க வேண்டிய நாள் சோகமாக மாறியது. அவர் தனது திருமணத்திற்கு ஒரு நாள் முன்பு, நூர்பூர் பினானி கிராமத்தில் நலங்கு விழாவின் போது மாரடைப்பால் இறந்தார்.
மணமகள் தீக்ஷா ஞாயிற்றுக்கிழமை இரவு தனது நலங்கு விழாவின் போது தனது சகோதரிகள் மற்றும் உறவினர்களுடன் நடனமாடிக் கொண்டிருந்தபோது திடீரென அவருக்கு உடல்நிலை மோசமாகி உள்ளது.
இதையடுத்து அவள் மன்னிப்பு கேட்டு குளியலறைக்குச் சென்றாள். அங்கு அவள் சரிந்து மாரடைப்பால் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
அந்தப் பெண் நீண்ட நேரமாக வெளியே வராததால், குடும்ப உறுப்பினர்கள் கதவைத் தட்டினர். ஆனால் எந்த பதிலும் கிடைக்கவில்லை என்று அவரது தந்தை தினேஷ் பால் சிங் கூறினார்.
கதவை உடைத்து திறந்தபோது, அவள் மயக்கமடைந்து கிடந்தாள். இதைப்பார்த்த உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவள் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
மொராதாபாத் மாவட்டத்தில் உள்ள சிவபுரி கிராமத்தைச் சேர்ந்த சௌரப் என்பவரை திங்கட்கிழமை தீக்ஷா திருமணம் செய்து கொள்ளவிருந்தார். மணமகனின் திருமண ஊர்வலம் அன்றே வரவிருந்தது. திருமண ஏற்பாடுகள் பல நாட்களாக முழு வீச்சில் நடந்து வந்தன. ஆனால் அதற்குள் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்த திடீர் சோகம் முழு கிராமத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், குடும்பத்தினர் புகார் அளிக்க மறுத்து, பிரேத பரிசோதனைக்கு மறுத்துவிட்டனர் எனத் தெரிவித்துள்ளனர்.





















