UP Poll 2022: உ.பி சட்டமன்ற தேர்தல்: இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு...!
பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் விவசாயிகளின் குடும்பத்தைச் சேர்ந்த 12 பேருக்கும், பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த 8 பேருக்கும், சீக்கியர்கள் 13 பேருக்கும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
உத்திரப்பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலையும், பஞ்சாப் தேர்தலில் போட்டியி முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலையும் பாஜக வெளியிட்டுள்ளது.
உத்திரப்பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் 85 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன. முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 58 தொகுதிகளில் 57 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயர்கள் வெளியிடப்பட்டன.
BJP releases its second list of candidates for the upcoming #UttarPradeshElections
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) January 21, 2022
Aditi Singh, who recently quit Congress to join BJP, to contest from Rae Bareli (1/2) pic.twitter.com/xQE51vy6v2
BJP releases its second list of candidates for the upcoming #UttarPradeshElections. 85 names announced in the second list. (2/2) pic.twitter.com/HFCnoMmmGE
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) January 21, 2022
உத்தரப்பிரதேசத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்ட தேர்தல் பிப்ரவரி 10 ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையர் சுசில் சந்திரா தெரிவித்தார். அதேபோல், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 14ஆம் தேதியும், 3ஆம் கட்ட தேர்தல் பிப்.20ஆம் தேதியும், 4ஆம் கட்ட தேர்தல் பிப்.24ஆம் தேதியும், 5 ஆம் கட்ட தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதியும்,ஆறாம் கட்ட தேர்தல் மார்ச் 3ம தேதியும், 7ம் கட்டதேர்தல் மார்ச் 7ம் தேதியும் நடைபெறுகிறது.
உத்தர பிரதேச சட்டபேரவை தேர்தலை பொறுத்தவரை பாஜக, சமாஜ்வாடி கட்சி மற்றும் காங்கிரஸ்கட்சிகளிடையே கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல், பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ள 34 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை பாஜக வெளியிட்டது. விவசாயிகளின் குடும்பத்தைச் சேர்ந்த 12 பேருக்கும், பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த 8 பேருக்கும், சீக்கியர்கள் 13 பேருக்கும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், மேலும் இந்தப் பட்டியலில் மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், விளையாட்டு வீரர்கள், விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளதாகவும் பாஜக தேசிய பொதுச் செயலாளர் தருண் சுக் கூறினார்.
BJP releases first list of 34 candidates for #PunjabElections2022 pic.twitter.com/yLrjCfjvE5
— ANI (@ANI) January 21, 2022
Tickets have been given to 12 candidates who belong to farmers' families, 8 tickets to members of the SC community, 13 tickets to Sikhs. The list has doctors, lawyers, sportspersons, farmers, youth, women & former IAS: Tarun Chugh, BJP National General Secy#PunjabElections2022 pic.twitter.com/XBepT21bRZ
— ANI (@ANI) January 21, 2022
பஞ்சாப்பில் பிப்ரவரி 14ஆம் தேதி நடைபெற இருந்த தேர்தல், சீக்கிய மத குரு ரவிதாஸ் நினைவு நாள் காரணமாக பிப்ரவரி 20ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அங்கு ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்