ரஃபேல் விமானத்தில் தொங்கவிடப்பட்ட எலுமிச்சை-மிளகாய்...மத்திய அரசை விமர்சித்த காங்.தலைவர்!
Pahalgam Attack Issue: பஹல்காம் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் மீதும், அவர்களின் ஆதரவாளர்கள் மீதும் எப்போது நடவடிக்கை எடுப்பீர்கள் என மத்திய அரசை காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் விமர்சித்திருக்கிறார்

உத்தரபிரதேச மாநிலத்தின் காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் ரஃபேல் என்று பெயரிடப்பட்ட 'பொம்மை ரபேல் விமானத்தை' எலுமிச்சை மற்றும் மிளகாயை தொங்கவிட்டு மத்திய அரசை விமர்சித்திருக்கிறார். ரஃபேல் ஜெட் விமானங்கள் வெளிநாட்டிலிருந்து கொண்டு வரப்பட்டாலும், அவை மிளகாய் மற்றும் எலுமிச்சை பழங்கள் தொங்கவிடப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளன என்று கூறி, பாஜக தலைமையிலான மத்திய அரசை விமர்சித்திருக்கிறார்.
பஹல்காம் தாக்குதல்:
கடந்த மாதம் 22 ஆம் தேதி, ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில், பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு, பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் (LeT) நிழல் குழுவான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF), பயங்கரவாத தாக்குதலுக்கு பொறுப்பேற்றது. இது 2019 இல் பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதிலிருந்து பள்ளத்தாக்கில் நடந்த மிக மோசமான தாக்குதலில் ஒன்றாகும்.
இந்தத் தாக்குதலால், பாகிஸ்தானுடனான தனது இராஜதந்திர உறவுகளை அனைத்து முனைகளிலும் இந்தியா குறைத்துவிட்டது. சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இடைநிறுத்தியது மற்றும் சமீபத்தில் பாகிஸ்தானில் இருந்து அனைத்து இறக்குமதிகளையும் தடை செய்தது.
காங்கிரஸ் விமர்சனம்
இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலத்தின் காங்கிரஸ் தலைவர் அஜய் ராய், பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். பயங்கரவாதம் மற்றும் அத்தகைய சதித்திட்டங்களுக்குப் பின்னால் உள்ளவர்களுக்கு எதிராக அரசாங்கம் தனது பாதுகாப்பு வளங்களை திறம்பட பயன்படுத்தத் தவறிவிட்டது என்று அவர் குற்றம் சாட்டினார்.
அவர் தெரிவித்துள்ளதாவது “ நாட்டில் பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. இதனால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில், நமது நாட்டு இளைஞர்கள் தங்கள் உயிர்களை இழந்தனர். ஆனால், நிறையப் பேசும் இந்த அரசாங்கம், பயங்கரவாதிகளை நசுக்குவோம் என்று கூறுகிறது.
அவர்கள் ரஃபேல் போர் விமானங்களை கொண்டு வந்தார்கள், ஆனால் அவர்கள், அதை மிளகாய் மற்றும் எலுமிச்சை கட்டி தொங்கவிடப்பட்டிருக்கிறார்கள். பயங்கரவாதிகளை மீதும், அவர்களின் ஆதரவாளர்கள் மீதும் எப்போது நடவடிக்கை எடுப்பீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.
#WATCH | Varanasi | Uttar Pradesh Congress President Ajay Rai shows a 'toy plane' with Rafale written on it and lemon-chillies hanging in it.
— ANI (@ANI) May 4, 2025
Ajay Rai says, "Terrorist activities have increased in the country, and people are suffering from it. Our youth lost their lives in the… pic.twitter.com/wIwLsa4akD
ரஃபேல் ஒப்பந்தம்:
பிரான்சுடன் 26 ரஃபேல் மரைன் போர் விமானங்களை வாங்குவதற்கான ரூ.63,000 கோடி ஒப்பந்தத்தை இந்திய மேற்கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தம், இந்தியாவின் கடற்படை தாக்குதல் திறன்களை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக பார்க்கப்படுகிறது. ரஃபேல்-எம் ஜெட் விமானங்கள் கடல்சார் தாக்குதல், உளவு மற்றும் வான் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.





















