மேலும் அறிய

Union Budget 2022-23: இந்திய ரயில்வே துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்படுமா? எப்படி இருக்கும் மத்திய பட்ஜெட்?

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, தனியான ரயில் பட்ஜெட் முறையை நீக்கியது.  

இந்திய ரயில்வேக்கு 2021-22 நிதிநிலை அறிக்கையில் ரூ. 1,10,055 கோடி வழங்கப்பட்டது. இந்த தொகையில், மூலதன செலவிற்காக மட்டும் ரூ. 1,07,100 கோடி ஒதுக்கப்பட்டது.  கடந்தாண்டை விட, இந்தாண்டு நிதிநிலை அறிக்கையில் ரயில்வே துறைக்கு கூடுதாலாக 20% நிதி ஒதுக்கீடு (2.5 லட்சம் கோடி)  செய்யப்படலாம் என்று பொருளாதார நிபுணர்கள் கணிக்கின்றனர்.  

இந்திய ரயில்வேயின் தனித்துவ பண்புகள்: 

இந்திய ரயில்வேத் துறையில் ஒரு ரூபாய் முதலீடு செய்தால், அது ஒட்டுமொத்த பொருளாதரத்தில் 5 முதல் 7 மடங்கு வரை புத்தாக்கம் செய்யும் (Multipler Effect) என்று மதிப்பிடப்படுகிறது. 

உலகின் நான்காவது மிகப்பெரிய ரயில்வே கட்டமைப்பை கொண்ட நாடு இந்தியா.

தினசரி 20,00௦க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதன்மூலம், தோரயமாக 2.5 கோடி பயணிகளையும், 2.9 மில்லியன் டன்கள் சரக்குகளை இந்திய ரயில்வே கொண்டு செல்கிறது. அதாவது, புவிக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரத்தை விட 4 மடங்கு அதிகமான அளவு இந்திய ரயில்வே  இயக்கப்படுகிறது. 

Union Budget 2022-23: இந்திய ரயில்வே துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்படுமா? எப்படி இருக்கும் மத்திய பட்ஜெட்?
ரயில் விபத்துகள் 

16 இலட்சம் பணியாளர்கள் இதில் பணிபுரிகின்றனர். 

தடம்புரள்தல், ரயில்கள் மோதல், மனிதர்களால் இயக்கப்படும் லெவல் கிராசிங்குகள், ஆளில்லா லெவல் கிராசிங்குகள் போன்ற பல்வேறு காரணங்களால் ரயில் விபத்துகள் ஏற்படுகின்றன. விளம்புநிலை மக்களின் பொது விருப்பமாக இந்திய ரயில்வே உள்ளது.   

Union Budget 2022-23: இந்திய ரயில்வே துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்படுமா? எப்படி இருக்கும் மத்திய பட்ஜெட்?
புலம்பெயர் தொழிலாளர்களின் ரயில் பயணங்கள்    

2022-23 பட்ஜெட் அறிவிப்பு:   

கடந்த காலங்களில், தேசிய நெடுஞ்சாலைகளுக்கு கிடைத்த முக்கியத்தும் ரயில்வே கட்டமைப்புக்கு கொடுக்கப்படவில்லை  என்ற கருத்தை பல்வேறு புள்ளிவிவரங்கள் தெரிவிகின்றன.     

Union Budget 2022-23: இந்திய ரயில்வே துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்படுமா? எப்படி இருக்கும் மத்திய பட்ஜெட்?
இந்திய பொருளாதார ஆய்வறிக்கை (2014-15)

ஓவ்வொரு ஐந்தாண்டுத் திட்டங்களிலும், ஒட்டுமொத்த போக்குவரத்துத் துறையுடன் ஒப்ப்டிடுகையில் இந்திய ரயில்வேக்கு மிகவும் குறைவான வளங்களே ஒதுக்கப்பட்டுள்ளது. 2005-12 ஆகிய காலகட்டங்களில் அண்டை நாடான சீனா, ரயில்வே துறையில் இந்தியாவை விட மூன்று மடங்கு மூலதனம் செய்திருக்கிறது. 

Union Budget 2022-23: இந்திய ரயில்வே துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்படுமா? எப்படி இருக்கும் மத்திய பட்ஜெட்?
1991-2001 வரையிலான காலகட்டங்களில் இந்திய ரயில்வேயின் திறன் விரிவாக்கம் மிகக்குறைவு 

ரயில் தடங்களை விரிவாக்கம் செய்ய போதிய முதலீடுகள் மேற்கொள்ளப்படாதால், வழித்தடங்களின் அடர்த்தி (Network Congestion Density) அதிகரித்து காணப்பட்டது. இதன், காரணமாக நமது ரயில்களின் வேகம் மிகவும் குறைவாக இருந்தது. இதன் காரணமாக, சரக்குப் போக்குவரத்தில் விமானம் மற்றும் நெடுஞ்சாலைகள் முக்கியத்துவம் பெறத் தொடங்கின. இதனால், இந்திய ரயில்வே துரையின் வருமான குறையத் தொடங்கியது. 

தேசிய ஜனநயாகக் கூட்டணியும் - இந்திய ரயில்வே துறையும்:   

தனியான ரயில் பட்ஜெட் முறையை நீக்கியது.  

2014க்குப் பிந்தைய காலகட்டங்களில், அதிவேக ரயில்களுக்கான தடங்கள், ரயில்வே விரிவாக்கம் மற்றும் மின்மயமாக்கல் மீது அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. சாலை துறைகளில் மத்திய அரசும் ,மாநிலம் அரசுகளும் முதலீடுகள் செய்கிறது. ஆனால், ரயில்வே துறையில் மாநில அரசுகளின் பங்களிப்புகள் இல்லாததால், தனியார் துறைகளை ஈர்க்கும் நடவடிக்கைகளையும் மத்திய அரசு துரிதப்படுத்தியுள்ளது.      

கடந்தாண்டில் மட்டும், 1924 கி.மீ தூர வழித்தடம் மின்மயமாக்கப்பட்டுள்ளது. 1330.41 கி.மீ தூரத்துக்கு புதிய ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. 

விவசாயிகள் நலனுக்காக முதல் கிசான் ரயில் சேவை மகாராஷ்டிரா - பீகார் இடையே  2021 ஆகஸ்ட் 7 ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. 100வது கிசான் ரயிலை  பிரதமர் தொடங்கி வைத்தார். கடந்த டிசம்பர் 24ம் தேதி வரை 1806 கிசான் ரயில்கள் 153 வழித்தடங்களில், 5.9 லட்சம் டன் வேளாண் பொருட்களை கொண்டு சென்றுள்ளன.  

2022-23 பட்ஜெட்டில் எதிர்பார்ப்பு:   

கடந்தாண்டை விட, இந்தாண்டு நிதிநிலை அறிக்கையில் ரயில்வே துறைக்கு கூடுதாலாக 20% நிதி ஒதுக்கீடு (2.5 லட்சம் கோடி)  செய்யப்படலாம் என்று பொருளாதார நிபுணர்கள் கணிக்கின்றனர். 

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள ஐந்து மாநிலங்களில் புதிய ரயில் விரிவாக்கத் திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

டெல்லி – வாரணாசி இடையே அதிவிரைவு புல்லட் ரயில் பாதை அமைத்து தொடர்பான அறிவிப்புகள் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.  

இந்திய ரயில்வே, கரியமில வாயுவை முற்றிலும் வெளியிடாத அமைப்பாக 2030-ம் ஆண்டுக்குள் உருவெடுக்க இருக்கிறது (National Rail Plan). எனவே, அந்த இலக்கை  விரைவுபடுத்தும் விதமாக சில அறிவிப்புகள் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. 

ரயில் சேவைகளுக்கான கட்டணத்தை நிர்ணயிக்கும் அமைப்பான ரயில் மேம்பாட்டு ஆணையம் (rail Development Authority) தொடர்பாக சில முக்கிய அறிவுப்புகளால் இந்த நிதிநிலை அறிக்கையில் வெளியாகலாம் என்று கருதப்படுகிறது. 

சுற்றுலா பயணிகளுக்காக, மேலும் சில வழித்தடங்களில் படுக்கை வசதியுடன் கூடிய தேஜஸ் ரயில்பெட்டிகள் அறிமுகம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.    

பயணிகளுக்கு தரமான சேவையை வழங்க 500க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களை மறுசீரமைப்புக்கும் திட்டம் (Revelopment of Railway station) குறித்த அறிவிப்பை வெளியிடப்படலாம் என்று நம்பப்படுகிறது. இதன், மூலம் ரயில் நிலையக் கட்டிடத்தின் முகப்பை மேம்படுத்துதல், நடைமேடை மேற்பரப்பை மேம்படுத்துதல், நடை மேம்பாலங்கள், பெண்களுக்கு தனி கழிப்பறையுடன் கூடிய காத்திருப்பு அறை, மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் நிலையத்தில் நுழைவதற்கான வசதிகள் போன்ற பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டு வருகின்றன.  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Parasakthi Trailer Review: இந்தி திணிப்பு எதிர்ப்பு.. திமுக-வின் தேர்தல் பரப்புரை படமா பராசக்தி?
Parasakthi Trailer Review: இந்தி திணிப்பு எதிர்ப்பு.. திமுக-வின் தேர்தல் பரப்புரை படமா பராசக்தி?
America vs Venezuela: வெனிசுலா அதிபரை அமெரிக்கா சிறைபிடித்ததற்கு உண்மை காரணங்கள் என்ன? ஓர் அலசல்
America vs Venezuela: வெனிசுலா அதிபரை அமெரிக்கா சிறைபிடித்ததற்கு உண்மை காரணங்கள் என்ன? ஓர் அலசல்
முதலீட்டில் தமிழ்நாடு பின்தங்கியது: ஊழலா? அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு! ஆந்திரா, தெலுங்கானாவிடம் தோல்வி?
முதலீட்டில் தமிழ்நாடு பின்தங்கியது: ஊழலா? அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு! ஆந்திரா, தெலுங்கானாவிடம் தோல்வி?
Pongal Gift 2026: பொங்கல் பரிசு ரூ.3000... யாருக்கெல்லாம்.? எப்போது கிடைக்கும்- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
பொங்கல் பரிசு ரூ.3000... யாருக்கெல்லாம்.? எப்போது கிடைக்கும்- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
ABP Premium

வீடியோ

DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Parasakthi Trailer Review: இந்தி திணிப்பு எதிர்ப்பு.. திமுக-வின் தேர்தல் பரப்புரை படமா பராசக்தி?
Parasakthi Trailer Review: இந்தி திணிப்பு எதிர்ப்பு.. திமுக-வின் தேர்தல் பரப்புரை படமா பராசக்தி?
America vs Venezuela: வெனிசுலா அதிபரை அமெரிக்கா சிறைபிடித்ததற்கு உண்மை காரணங்கள் என்ன? ஓர் அலசல்
America vs Venezuela: வெனிசுலா அதிபரை அமெரிக்கா சிறைபிடித்ததற்கு உண்மை காரணங்கள் என்ன? ஓர் அலசல்
முதலீட்டில் தமிழ்நாடு பின்தங்கியது: ஊழலா? அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு! ஆந்திரா, தெலுங்கானாவிடம் தோல்வி?
முதலீட்டில் தமிழ்நாடு பின்தங்கியது: ஊழலா? அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு! ஆந்திரா, தெலுங்கானாவிடம் தோல்வி?
Pongal Gift 2026: பொங்கல் பரிசு ரூ.3000... யாருக்கெல்லாம்.? எப்போது கிடைக்கும்- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
பொங்கல் பரிசு ரூ.3000... யாருக்கெல்லாம்.? எப்போது கிடைக்கும்- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
போடு.. 1.76 லட்சம் ரூபாய் ஆஃபர்.. Honda Elevate கார் வாங்க ரெடியா?
போடு.. 1.76 லட்சம் ரூபாய் ஆஃபர்.. Honda Elevate கார் வாங்க ரெடியா?
கிரெடிட் ஸ்கோரை உயர்த்தி, குறைந்த வட்டியில் கடன் பெற வேண்டுமா? 3 எளிய வழிகள்!
கிரெடிட் ஸ்கோரை உயர்த்தி, குறைந்த வட்டியில் கடன் பெற வேண்டுமா? 3 எளிய வழிகள்!
Rain Alert: வானிலை எச்சரிக்கை! கடலோர தமிழகத்தில் 2 நாட்கள் மழை, சூறாவளி காற்று வீசும்: முழு விபரம் இதோ!
வானிலை எச்சரிக்கை! கடலோர தமிழகத்தில் 2 நாட்கள் மழை, சூறாவளி காற்று வீசும்: முழு விபரம் இதோ!
சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' டிரெய்லர் வெளியீடு: இந்தி திணிப்புக்கு எதிரான அதிரடி காட்சிகள்!
சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' டிரெய்லர் வெளியீடு: இந்தி திணிப்புக்கு எதிரான அதிரடி காட்சிகள்!
Embed widget