Aadhar | இந்திய ஆதார் துறையில் வேலைவாய்ப்பு : தகுதி உள்ளவர்கள் எப்படி விண்ணப்பிக்கிலாம் | விவரம் உள்ளே..
இந்திய ஆதார் துறையின் கீழ் பெங்களுரு, அசாம், மும்பை ஆகிய மாநிலங்களில் 25 காலியிடங்களுக்கான அறிவிப்பு UIDAI ல் வெளியாகியுள்ளது.
இப்பணிகளுக்கு சேரவிரும்புவோர் சட்டம், மனிதவள மேம்பாடு, நிதி, திட்டமிடுதல் மற்றும் அதனை சரிபார்த்தல் போன்றவற்றில் முன் அனுபவம் பெற்றவர்களாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மேற்கண்ட தகுதி பெற்றவர்கள் UIDAI Official Notification Details & Application Form 1,UIDAI Official Notification Details & Application Form 2, UIDAI Official Notification Details & Application Form 3 என்ற இணையத்தில் உள்ள விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து ஜூலை 16 ஆம் தேதிக்குள் அறிவிப்பில் வெளியாகியுள்ள இந்த முகவரிக்கு Address (Bengaluru): Assistant Director General (HR), Unique Identification Authority of India (UIDAI), Regional Office, 3rd Floor, South Wing, Khanija Bhavan, No. 49, Race Course Road, Bengaluru 560001
Address (Guwahati): Assistant Director General (HR), Unique Identification Authority of India (UIDAI), Regional Office, Block-V, 1 st Floor, Housefed Complex, Dispur, Guwahati -781006
Address (Mumbai): Assistant Director General (HR), Unique Identification Authority of India (UIDAI), Regional Office, 7th Floor, MTNL Telephone Exchange, GD Somani Marg, Cuffe Parade, Colaba, Mumbai – 400 005 அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் நபர்கள் அனைவரும் 56 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு, நேரடி நேர்காணல் ஆகியவற்றின் மூலம் இப்பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 படிகளில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் இந்திய ஆதார் துறையின் கீழ் மூன்று ஆண்டுகள் வரை பணியில் இருக்க முடிவும். ஒரு வேளை பணிகளின் தேவையினை பொறுத்து 5 ஆண்டுகள் வரை நீடிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது மட்டுமின்றி டெல்லியில் Senior Analyst பணிக்கான காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.இப்பணிக்கு B.E/B.Tech in Computer Science Engineering /IT/Electronics & Communications Engg/MCA பட்டப்படிப்பினை முடித்தவர்களாக இருக்க வேண்டும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியுள்ள நபர்கள் UIDAI Official Notification Details & Application Form ல் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்படிவத்தினை பூர்த்தி செய்து மே 26 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு கூறப்பட்டுள்ளது. இப்பணியிடங்களை நிரப்புவதற்கும் எழுத்துத் தேர்வு,சான்றிதழ் சரிபார்ப்பு, நேரடி நேர்காணல் போன்றவை நடத்தப்படவுள்ளது.