(Source: ECI/ABP News/ABP Majha)
Exit polls: வெளியானது 3 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிந்தையை கருத்துக்கணிப்பு: யார் எங்கே ஆட்சி?
நாகலாந்து, மேகாலயா மற்றும் திரிபுரா ஆகிய 3 மாநில சட்டப்பேரவைக்கான தேர்தலில், கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.
3 மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் இன்று முடிவுற்ற நிலையில், தேர்தல் பிந்தைய கணிப்பை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
திரிபுரா சட்டப்பேரவை:
இந்தியா டுடே கணிப்பு : பாஜக ஆட்சி அமையும் என கணிப்பு
மொத்த இடங்கள்: 60
பாஜக கூட்டணி - 36 முதல் 45 இடங்கள்
காங்கிரஸ் கூட்டணி - 6 முதல் 11 இடங்கள்
திப்ரா மேத்தா - 9 முதல் 16 இடங்கள்
இதர - 0 இடங்கள்
டைம்ஸ் நவ் கணிப்பு :
பாஜக கூட்டணி - 24 இடங்கள்
காங்கிரஸ் கூட்டணி - 21 இடங்கள்
திப்ரா மேத்தா - 14 இடங்கள்
மற்றவை- 1 இடங்கள்
நாகலாந்து சட்டப்பேரவை:
நாகாலாந்து மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (பிப்ரவரி 27) ஆம் தேதி நடைபெற்றது. 60 சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய அம்மாநிலத்தில் 13.17 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதனிடையே இன்று நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 184 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். 59 தொகுதிகளுக்கு மட்டுமே இன்று தேர்தல் நடந்தது.
மீதமுள்ள ஒரு தொகுதியான அகுலுடோவில் பாஜக தேர்தலுக்கு முன்பே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அந்தத் தொகுதியில் காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். ஆனால் காங்கிரஸ் வேட்பாளரான சுமி கடைசி நேரத்தில் வேட்புமனுவை வாபஸ் பெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் பாஜக வேட்பாளரான தற்போதைய எம்.எல்.ஏவாக இருந்த கசெட்டோ கிமினி போட்டியின்றி வெற்றி பெற்றதாக தேர்தல் அலுவலர் சஷாங்க் சேகர் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார்.
மொத்த இடங்கள்: 60
இந்தியா டுடே கணிப்பு : பாஜக ஆட்சி அமையும் என கணிப்பு
பாஜ கூட்டணி 38 முதல் 48 இடங்கள்
காங்கிரஸ் 1-2 இடங்கள்,
நாகா மக்கள் முன்னணி கட்சி - 3 முதல் 8 இடங்கள்
டைம்ஸ் நவ் கணிப்பு : பாஜக ஆட்சி அமையும் என கணிப்பு
பாஜ கூட்டணி- 44 இடங்கள்
காங்கிரஸ்- 0 இடங்கள்,
நாகா மக்கள் முன்னணி கட்சி - 6 இடங்கள்
மற்றவை - 9 இடங்கள்
மேகாலயா சட்டப்பேரவை:
மொத்த இடங்கள்: 60
இந்தியா டுடே கணிப்பு :
தேசிய மக்கள் கட்சி- 18 முதல் 24 இடங்கள்
காங்கிரஸ் - 6 முதல் 12 இடங்கள்
பாஜக- 4 முதல் 8 இடங்கள்
மற்றவை -17 முதல் 20 இடங்கள்
டைம்ஸ் நவ் கணிப்பு
தேசிய மக்கள் கட்சி- 22 இடங்கள்
காங்கிரஸ் - 3 இடங்கள்
பாஜக- 5 இடங்கள்
மற்றவை -29 இடங்கள்