மேலும் அறிய

சிபிஐ ஆபிஸில் கைவரிசை.. கப்போர்டு.. கதவு.. ஜன்னல்.. எதையுமே விட்டு வைக்காத கொள்ளை கும்பல்!

இந்தியாவின் உச்சபட்ச விசாரணை அமைப்பான சிபிஐ அதிகாரிகளிடமே கொள்ளை கும்பல் கைவரிசையில் ஈடுபட்டிருக்கிறது. இந்த சம்பவம் திரிபுராவில் நடந்துள்ளது.

திரிபுராவில் சிபிஐ அலுவலகத்தை குறிவைத்து கொள்ளை கும்பல் கைவரிசையில் ஈடுபட்ட சம்பவம் சிபிஐ அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிபிஐ ஆபிஸில் கொள்ளை:

இந்தியாவின் உச்சபட்ச விசாரணை அமைப்பான சிபிஐ அதிகாரிகளிடமே கொள்ளை கும்பல் கைவரிசையில் ஈடுபட்டிருக்கிறது. இந்த சம்பவம் திரிபுரா மாநிலத்தின் தலைநகர் அகர்தலாவில் நடந்துள்ளது. பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்த ஷியாமலி பஜார் வளாகத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்திற்கு கடந்த பிப்ரவரி 11ஆம் தேதி, சிபிஐ அதிகாரிகள் சென்றபோது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பொருள்கள் மாயமாகி இருப்பதை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். திருடர்கள், அலுவலகத்தில் இருந்த அனைத்தையும் கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர். எஃகு அலமாரிகள், நாற்காலிகள், மின்சார உபகரணங்கள், கதவுகள் மற்றும் ஜன்னல்களை கூட விட்டுவைக்கவில்லை. ஐந்து மாதங்களாக சிபிஐ அலுவலகம் பூட்டப்பட்டிருந்தது.

அதிகாரிகளுக்கு காத்திருந்த ஷாக்:

சிபிஐ இன்ஸ்பெக்டர் அனுராக் புகார் அளித்ததை அடுத்து, திருட்டு குறித்து விசாரணை தொடங்கப்பட்டது. ஆரம்பகட்ட விசாரணையில் பிப்லாப் தேபர்மா மற்றும் ராஜு பௌமிக் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். பின்னர், அகர்தலாவின் புறநகரில் அமைந்துள்ள ஷியாமலி பஜார் மற்றும் கெஜூர் பாகன் பகுதிகளில் இருந்து மேலும் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

எட்டு எஃகு அலமாரிகள், ஏழு மர நாற்காலிகள், நான்கு ஜன்னல்கள், வாட்டர் ஹீட்டர் மற்றும் நான்கு சாதாரண நாற்காலிகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

தற்போது போலீஸ் காவலில் உள்ள சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள். வேறு எதையாவது திருட அந்த கும்பல், அலுவலகத்திற்கு வந்ததா அல்லது வேறு பெரிய சதி திட்டம் இதன் பின்னணியில் இருக்கிறதா என்பதைக் கண்டறிய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், "கைது செய்யப்பட்டவர்களில் சிலர் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களாக உள்ளனர்" என்றார்.

இதையும் படிக்க: BNS different from IPC: புதிய குற்றவியல் சட்டம் Vs இந்திய தண்டனை சட்டம் - அறிய வேண்டிய முக்கிய விதிகள்

தலைப்பு செய்திகள்

வருமான வரி தாக்கல்: இன்றே இறுதி நாள்! தவறினால் ரூ.5000 அபராதம் உறுதி! விபரம் இதோ..
வருமான வரி தாக்கல்: இன்றே இறுதி நாள்! தவறினால் ரூ.5000 அபராதம் உறுதி! விபரம் இதோ..
மத்திய அரசு ஊழியர்களே! 8வது ஊதியக் குழுவின் FITMENT FACOTR: உங்கள் சம்பளம் எவ்வளவு?
மத்திய அரசு ஊழியர்களே! 8வது ஊதியக் குழுவின் FITMENT FACOTR: உங்கள் சம்பளம் எவ்வளவு?
ஆகஸ்ட் மாதத்தில் 14 நாட்கள் வங்கி விடுமுறை! தமிழ்நாட்டிற்கு எத்தனை நாள் தெரியுமா?
ஆகஸ்ட் மாதத்தில் 14 நாட்கள் வங்கி விடுமுறை! தமிழ்நாட்டிற்கு எத்தனை நாள் தெரியுமா?
நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்: அன்புமணி ராமதாஸ் நாடாளுமன்றத்தில் காரசார வாதம்!
நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்: அன்புமணி ராமதாஸ் நாடாளுமன்றத்தில் காரசார வாதம்!

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
ஓ சகி.. வா சகி.. வந்துடுச்சு புதிய கவாஸகி! Kawasaki Ninja 300 பைக் விலை, தரம் எப்படி?
ஓ சகி.. வா சகி.. வந்துடுச்சு புதிய கவாஸகி! Kawasaki Ninja 300 பைக் விலை, தரம் எப்படி?
Skoda Kylaq Rivals: ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் வரப்போகும் 3 SUV-விக்கள் - இல்லாத வசதிகளே இல்லை, கைலாக்கிற்கு சவால்
ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் வரப்போகும் 3 SUV-விக்கள் - இல்லாத வசதிகளே இல்லை, கைலாக்கிற்கு சவால்
America F35 Jet : அலறிய ட்ரம்ப்.! 3 அதி நவீன எப்35 போர் விமானம் காலி.? அமெரிக்காவை மிரளவைத்ததா ஈரான்- நடந்தது என்ன.?
அலறிய ட்ரம்ப்.! 3 அதி நவீன எப்35 போர் விமானம் காலி.? அமெரிக்காவை மிரளவைத்ததா ஈரான்- நடந்தது என்ன.?
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?
விவசாயிகள் பயிர்க் கடனை உடனே முழுமையாக தள்ளுபடி செய்திடுங்க.! சிஎம் விஜய்க்கு பறந்த இபிஎஸ் அறிக்கை
விவசாயிகள் பயிர்க் கடனை உடனே முழுமையாக தள்ளுபடி செய்திடுங்க.! சிஎம் விஜய்க்கு பறந்த இபிஎஸ் அறிக்கை
Embed widget