• ஞானவாபி மசூதி விவகாரம்; 10 நாட்களில் அறிக்கையை சமர்ப்பிக்க தொல்லியல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவு


உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகே உள்ள ஞானவாபி மசூதியில் இந்திய தொல்லியல் துறை ஆய்வு மேற்கொள்ள அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் அனுமதி வழங்கியிருந்தது. இதை எதிர்த்து மசூதி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் உச்சநீதிமன்றம் அலகாபாத் உயர்நீதி மன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்து விட்டது.  மேலும் படிக்க..



  • நடந்து முடிந்த 5 மாநிலத் தேர்தல்: தலையெழுத்தை நிர்ணயிக்கும் டிச.3 - வாக்கு சதவீதங்கள் இவைதான்!


சத்தீஸ்கர், தெலங்கானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் மிசோரம் மாநிலங்களில் வாக்குப் பதிவு நடைபெற்று முடிந்துள்ள நிலையில், டிச.3ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் ஏற்கனவே நடைபெற்று முடிந்தது. குறிப்பாக மத்தியப் பிரதேச மாநிலத்தில், 230 தொகுதிகளுக்கும் நவம்பர் 17ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இங்குள்ள 64,626 வாக்குச் சாவடிகளில் மொத்தம் 71.16 சதவீத வாக்குகள் பதிவாகின. மேலும் படிக்க..



  • நாட்டின் எழுச்சியை தீர்மானிக்கும் நான்கு ஜாதிக்காரர்கள் எனக்காக இருக்கின்றனர் - பிரதமர் மோடி பேச்சு


அடுத்தாண்டு நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. மீண்டும் ஆட்சியை தக்க வைக்க பா.ஜ.க. கூட்டணியினரும், ஆட்சியை கைப்பற்ற காங்கிரசும் தீவிரமாக பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், பிரதமர் மோடி விக்சிட் பாரத் சங்கல்ப் யாத்ரா என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். பிரதமர் மோடி காணொலி காட்சி மூலமாக இந்த திட்டத்தின் பயனாளிகளிடம் பேசினார். அதில் அவர் பேசியதாவது, “ நான்கு மிகப்பெரிய ஜாதிகளான ஏழைகள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் விவசாயிகள் எனக்காக இருக்கிறார்கள். அவர்களின் எழுச்சி இந்தியாவை வளர்ச்சியடையச் செய்யும். மேலும் படிக்க..



  • தெலங்கானாவில் வாக்குப்பதிவு நிறைவு... ஆட்சி அமைக்கப்போவது யார்?


தெலங்கானாவில் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. 5 மணி நிலவரப்படி, 63.94 சதவிதித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. ஆளும் பாரத ராஷ்ட்ரிய சமிதி, பாஜக, காங்கிரஸ் ஆகிய 3 பிரதான கட்சிகள் இடையே அங்கு பலத்த போட்டி நிலவுகிறது. மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 2,290 வேட்பாளர்கள் களம் காண்பதால் மக்கள் ஆதரவு யாருக்கு என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இன்று பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3 ஆம் தேதி எண்ணப்படுகிறது. மேலும் படிக்க..



  • எதிர்பார்ப்பை கிளப்பிய ஐந்து மாநில தேர்தல்.. பாஜகவா? காங்கிரஸா? பிரம்மாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?


அடுத்தாண்டு ஏப்ரல், மே மாதங்களில் மக்களவை தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில், ஐந்து மாநில தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அதற்கான முடிவுகள் வரும் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 3ஆம் தேதி) அறிவிக்கப்படவிருக்கிறது. அதற்கு முன்னதாக, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சியும் ராஜஸ்தானில் பாஜகவும் ஆட்சி அமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் பல்வேறு நிறுவனங்கள், வேறு வேறு விதமான கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது. மேலும் படிக்க..