தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி கடந்த 12 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, இன்று (டிசம்பர் 01, 2023) காலை  05.30 மணியளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.  இது தென்கிழக்கை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் அட்சரேகை 9.1°க்கு அருகில் நிலவி வருகிறது. மேலும் தீர்க்கரேகை 86.4°E, புதுச்சேரிக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 790 கி.மீ., சென்னைக்கு தென்கிழக்கே 800 கி.மீ., பாபட்லாவிலிருந்து தென்கிழக்கே 990 கி.மீ., மச்சிலிப்பட்டினத்திலிருந்து தென்கிழக்கே 970 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


இது தொடர்ந்து மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, 2-ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், டிசம்பர் 3-ஆம் தேதி தென்மேற்கு வங்கக்கடலில் ஒரு சூறாவளி புயலாகவும் மாறும். அதன்பிறகு, இது வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் அதை ஒட்டிய வட தமிழகக் கடற்கரையை சென்னைக்கும் மச்சிலிப்பட்டினத்திற்கும் இடையே டிசம்பர் 4 ஆம் தேதி மாலையில் சூறாவளி புயலாகக் கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.