இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்ததன் மூலம் பல சாதனைகளை படைத்துள்ளார் இந்திய அணியின் இளம் கேப்டன் சுப்மன் கில். ஆசிய கண்டத்தை சேர்ந்த கேப்டன் ஒருவர் இங்கிலாந்தில் மண்ணில் இரட்டை சதம் அடிப்பது இதுவே முதல்முறை. அதுமட்டும் இல்லை, SENA (தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா) நாடுகளில் ஆசிய கண்டத்தை சேர்ந்த கேப்டன் ஒருவர் முதல்முறையாக இரட்டை சதம் அடித்திருப்பதும் இதுவே முதல்முறை.
சாதனை நாயகனாக மாறிய கில்:
சுப்மன்கில் தலைமையிலான இளம் இந்திய அணி இங்கிலாந்தில் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் ஆடி வருகிறது. லீட்ஸ் மைதானத்தில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த நிலையில், 2வது டெஸ்ட் போட்டி நேற்று பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டனில் தொடங்கியது.
இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடியது. 2 ரன்களில் அவுட்டாகி இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி அளித்தார் ராகுல். இருப்பினும், ஜெய்ஸ்வால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
ஆசியாவிலேயே முதல் கேப்டனாக செய்த சம்பவம்:
கருண், பந்த் ஆகியோர் சுமாராக ஆடிய போதிலும், கேப்டன் கில் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதலில் ஜெய்ஸ்வால் உடனும் பின்னர், ஜடேஜா உடனும் சிறப்பாக பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடினார். பொறுமையாக ஆடி ரன் சேர்த்த கில் 200 ரன்களை கடந்து ஆடி வருகிறார்.
இந்த இரட்டை சதம் முலம் பல சாதனைகளை படைத்துள்ளார் கில். ஆசிய கண்டத்தை சேர்ந்த கேப்டன் ஒருவர் இங்கிலாந்தில் மண்ணில் இரட்டை சதம் அடிப்பது இதுவே முதல்முறை. அதுமட்டும் இல்லை, SENA (தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா) நாடுகளில் ஆசிய கண்டத்தை சேர்ந்த கேப்டன் ஒருவர் முதல்முறையாக இரட்டை சதம் அடித்திருப்பதும் இதுவே முதல்முறை.
இங்கிலாந்து மண்ணில் அதிக ரன்களை எடுத்த இந்தியர் என்ற சாதனையையும் கில் படைத்துள்ளார். அதோடு, இங்கிலாந்தில் அதிக ரன்களை எடுத்த ஆசியர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார் கில்.