ஓடும் ரயிலில் துப்பாக்கிச் சூடு.. ஆர்.பி.எஃப் வீரர் உள்பட 4 பேர் உயிரிழப்பு; ஜெய்ப்பூரில் அதிர்ச்சி 


ஜெய்ப்பூரில் இருந்து மும்பை நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் பால்கர் ரயில் நிலையத்தைக் கடந்து சென்று கொண்டு இருந்தது. அப்போது ஆர்பிஎஃப் காவலர் ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் ரயிலில் இருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டுள்ளார். மேலும் படிக்க,


Congress On Parliament: சந்தேகத்தை எழுப்பும் மத்திய அரசின் நடவடிக்கைகள்..! - காங்கிரஸ் சொல்லும் காரணம் என்ன?


இரண்டு வாரங்களுக்கு முன்பாக தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. ஆனால், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விரிவாக விவாதிக்க வேண்டும், பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் அவை நடவடிக்கைகள் முடங்கி வருகிறது. மேலும் படிக்க,


ITR Filing: வருமான வரி தாக்கல் செய்த 6 கோடி பேர்... இன்று தவறினால் ரூ.5,000 வரை அபராதம் என எச்சரிக்கை


மாத ஊதியம் பெறுவோர், தொழில் முனைவோர், வருடத்துக்கு ஒருமுறை வருமான வரி விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்பது வழக்கமான விதி. மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த சென்ற நிதி ஆண்டுக்கான வரி விவரங்களை ஜூலை 31-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டியது அவசியம் ஆகும். மேலும் படிக்க,


Soldier Missing: விடுமுறைக்காக வீட்டுக்கு வந்த ராணுவ வீரர் மாயம்.. காரில் இருந்த ரத்தக் கறை.. காஷ்மீரில் பரபரப்பு


விடுமுறைக்காக ஜம்மு காஷ்மீரில் உள்ள தனது வீட்டுக்கு சென்ற ராணுவ வீரர் மாயமாகியுள்ளார். இது, தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தை பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது. ஜம்மு காஷ்மீர் காலாட்படை பிரிவைச் சேர்ந்த ரைபிள்மேன் ஜாவேத் அஹ்மத்,  ரமலான் விடுமுறைக்காக வீட்டிற்கு வந்துள்ளார். இன்று பணியில் சேரவிருந்தார். மேலும் படிக்க,


Opposition MPs: ”பிரதமரின் அலட்சியம்..மத்திய, மாநில அரசுகளின் தோல்வி..” மணிப்பூர் சென்ற இந்தியா கூட்டணி எம்பிக்கள் குற்றச்சாட்டு 


பிரதமர் நரேந்திர மோடியின் மௌனம், மணிப்பூரில் நடந்த வன்முறையில் அவரின் வெளிப்படையான அலட்சியத்தைக் காட்டுகிறது. கலவரத்தால் 140க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 500க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். 5,000க்கும் மேற்பட்ட வீடுகள் எரிக்கப்பட்டுள்ளது. 60,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். இம்மாதிரியாக இரு சமூகத்தினரின் உயிர்களையும் உடைமைகளையும் பாதுகாப்பதில் மத்திய, மாநில அரசுகளின் தோல்வியே தெரிகிறது. மேலும் படிக்க,


Opposition Alliance INDIA: இந்தியா கூட்டணியில் குழப்பம்? சரத் பவாரின் டபுள் கேம்? தள்ளிப்போகிறது எதிர்க்கட்சிகளின் 3-வது கூட்டம்..!


2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாஜகவை வீழ்த்தும் நோக்கில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் விதமாக, பாட்னாவில் முதல் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார் அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் மார். அதைதொடர்ந்து, அண்மையில் காங்கிரஸ் தலைமையில் பெங்களூருவில் எதிர்க்கட்சிகளின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்திய என பெயரிடப்பட்டது. இதையடுத்து, மூன்றாவது ஆலோசனைக் கூட்டம் மும்பையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. மேலும் படிக்க,