9 AM National Headlines: தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசிய பாஜக.. முடக்கப்பட்ட செயலிகள்.. இந்தியாவின் முக்கிய நிகழ்வுகள் இதோ..!

ABP Nadu India News: இந்தியா முழுவதும் நடைபெற்ற மிக முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடுவின் காலை செய்திகளில் காணலாம்.

Continues below advertisement
  • 'என்.ஆர்.சி, பொது சிவில் சட்டம் அமலாகும்..’ கர்நாடக பாஜக தேர்தல் அறிக்கையால் பரபரப்பு.. முழு விவரம்

கர்நாடகாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் தேசிய குடிமக்கள் பதிவேடு, பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுளது. இதனால் அரசியல் சூழலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் வரும் 10ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் பாஜக தேர்தல் அறிக்கையில் இந்த வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஆண்டுக்கு 3 இலவச கேஸ் சிலிண்டர், தினமும் அரை லிட்டர் பால் இலவசம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க

Continues below advertisement

  • கர்நாடகாவில் நெருங்கும் சட்டமன்ற தேர்தல் - வாக்குறுதிகளை அள்ளி வீசிய பாஜக 

கர்நாடகாவில் வரும் 10-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில் மாதந்தோறும் ஐந்து கிலோ ரேஷன் பருப்பு ஆகியவை ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவசமாக வழங்கப்படும். வேலைக்குச் செல்லும் பெண்கள் மற்றும் மாணவிகள் 30 லட்சம் பேருக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படும். வயதானவர்களுக்கு ஆண்டு தோறும் இலவசமாக முழு உடல் பரிசோதனை உள்ளிட்ட பல வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க

  • அதிகமாக மது அருந்தும் காவல்துறை அதிகாரிகளுக்கு விருப்ப ஓய்வு... அஸ்ஸாம் முதலமைச்சர் அதிரடி..!

மது பழக்கம் அதிகம் உள்ள 300 காவல்துறை அதிகாரிகளுக்கு விருப்பு ஓய்வு அளிக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். இதற்கான செயல்முறை ஏற்கனவே தொடங்கப்பட்டு, காலியிடங்களை நிரப்ப புதிய ஆட்சேர்ப்பு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.உலக சுகாதார அமைப்பின் 2018ஆம் ஆண்டு அறிக்கையின்படி, மதுபானம் அருந்துவதால் இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 2,60,000 பேர் உயிரிழக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.  மேலும் படிக்க

  • இந்திய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்; 14 ஆஃப்களை முடக்கிய மத்திய அரசு

பயங்கரவாத செயல்பாடுகளை முடக்கும் விதமாக 14 மொபைல் செயலிகளை முடக்கி மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. பயங்கரவாத குழுக்கள், இந்த செயலிகளை பயன்படுத்தி வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில் பாகிஸ்தானில் இருந்து அனுப்பப்படும் ஆலோசனைகளை கொண்டு சேர்க்க இந்த செயலி பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் படிக்க

  • நெஞ்சம் பதைக்கிறது... மல்யுத்த வீரர்கள் போராட்டத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஆதரவு..!

டெல்லி ஜந்தர் மந்தரில்   இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ் பூஷண் சிங் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீரர்களுக்கு  டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் ஆதரவு தெரிவித்திருந்தனர். இந்த நிலையில்,  மற்போர் வீரர்களுக்கு நீதி கிடைக்க உறுதுணையாக நிற்போம் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மல்யுத்த வீரர்கள் போராடும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதைக் காண நெஞ்சம் பதைக்கிறது என்றும் அவர் குறிப்பட்டுள்ளார். மேலும் படிக்க

Continues below advertisement
Sponsored Links by Taboola