இன்றைய நவீன இந்தியாவில் ஆதார் அட்டை பொதுமக்களாகிய நாம் ஒவ்வொரு சேவையைப் பெறுவதற்கும் அத்தியாவசியமான ஒன்றாக மாறியுள்ளது. இந்த நிலையில், ஆதார் அட்டையை தொலைத்துவிட்டால் வீட்டில் இருந்தபடியே திரும்ப பெறுவது எப்படி? என்பதை கீழே காணலாம்.
1. முதலில் ஆதாரின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://uidai.gov.in/ta/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
2. பின்னர், அதில் என் ஆதார் என்ற தேர்வின் கீழ் உள்ள ஆதார் சேவைகளைத் தேர்வு செய்ய வேண்டும்.
3. அதன் கீழே தவறவிட்ட ஆதார் அடையாள அட்டை எண்ணை திரும்ப பெற என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
4. அதில் கேட்கப்பட்டிருக்கும் பெயர், மின்னஞ்சல் முகவரி, செல்போன் எண் ஆகியவற்றை பதிவிட வேண்டும். ஆதார் அட்டையில் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணையே பதிவு செய்ய வேண்டும்.
5. பின்னர், அந்த செல்போன் எண்ணுக்கு ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் கடவுச்சொல் அதாவது ஓடிபி எண் வரும். அதை அந்த இடத்தில் பதிவு செய்ய வேண்டும்.
6. பின்னர், அனைத்து தரவுகளையும் சரி பார்த்த பிறகு நீங்கள் இட்ட ஓடிபி-க்கு பிறகு நீங்கள் உங்கள் மின்னனு ஆதார் அட்டையை பெறலாம்.
7. அந்த மின்னனு ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
எம் ஆதார் ஆஃப் ( செயலி) வழியில் எப்படி ஆதார் அட்டையில் எப்படி பெறுவது?
1.உங்கள் செல்போனில் ப்ளே ஸ்டோரில் எம் ஆதார் என்ற செயலியை முதலில் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
2. அந்த செயலியில் என் ஆதார் தேர்வுக்கு கீழே தவறவிட்ட ஆதார் அடையாள அட்டையைத் திரும்ப பெற என்பதைத் தேர்வு செய்யவும்.
3. அதில் பெயர், செல்போன் எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் பிற தகவல்களை பதிவிடவும்.
4. பின்னர், ஆதார் அட்டைக்காக பதிவு செய்துள்ள செல்போன் எண்ணிற்கு வரும் ஓடிபி-யை பதிவு செய்ய வேண்டும்.
5. அனைத்து தரவுகளையும் சரி செய்த பிறகு ஆதார் அட்டையைப் பெறுவதற்கான பதிவிறக்கம் என்ற தேர்வை தேர்வு செய்ய வேண்டும்.
இந்த வழிமுறைகளைப் பயன்படுத்தி நீங்கள் வீட்டில் இருந்தபடியே மிக எளிமையாக மின்னனு ஆதார் அட்டையை பெறலாம்.
செல்போன் சிம் கார்டு பெறுவதற்கு, ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு, வங்கிக்கணக்கு எண் தொடங்குவதற்கு, வாக்காளர் அடையாள அட்டை பெறுவது, அரசு அலுவலகங்களில் அரசு சேவைகள் பெறுவதற்கு என அனைத்து விதமான சேவைகளுக்கும் ஆதார் அட்டை மிக மிக அவசியமான ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.