• மூன்று பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா மாறும்: பிரதமர் மோடி


மூன்றாவது ஆட்சி காலத்தில் உலகின் முதல் மூன்று பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா உருவெடுக்கும் என மோடி உறுதி தெரிவித்துள்ளார்.எனது முதல் ஆட்சிக் காலத்தில், பொருளாதாரத்தில் இந்தியா 10 வது இடத்தில் இருந்தது. எனது இரண்டாவது பதவிக்காலத்தில், உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக மாறினோம் எனவும் அவர் கூறியுள்ளார். . கடந்த 9 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட முடிவுகள் மற்றும் கொள்கைகள், நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்வதையே காட்டுகிறது எனவும் மோடி தெரிவித்துள்ளார். மேலும் படிக்க



  • பெங்களூரு அலுவலகத்தை மூடிய பைஜூஸ்.. எத்தனை பேருக்கு வேலை போச்சு?


பைஜூஸ் நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில் அதன் பெங்களூரு அலுவலகத்தை மூடியுள்ளது.  கடந்த ஆண்டு 2,500 ஊழியர்களையும், இந்த ஆண்டு 1,500 ஊழியர்களையும் பணிநீக்கம் செய்தது பைஜூஸ். மேலும் பணிநீக்கங்கள் மேற்கொள்ளப்படாது என்று சிஇஓ ரவீந்தரன் தெரிவித்திருந்த நிலையில், பெங்களூருவில் உள்ள அலுவலகத்தை பைஜூஸ் நிறுவனம் மூடியுள்ளது. மேலும் படிக்க



  • திமுக வாரிசு கட்சிதான்; ஆனால் பாஜகவுக்கு திராணி இருக்கிறதா? - முதலமைச்சர் ஸ்டாலின் ஆவேசம்


திருச்சியில் நடைபெற்ற திமுக வாக்குச் சாவடி முகவர்களுக்கான பயிற்சிப் பாசறைப் பொதுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், திமுகவை வாரிசுகளின் கட்சி என்கின்றனர். ஆமாம் திமுக வாரிசுகளின் கட்சிதான். ஆரியத்தை வீழ்த்த திராவிடத்தின் வாரிசுகள் நாங்கள். தந்தை பெரியாரின் வாரிசுகள், அண்ணாவின் வாரிசுகள், கலைஞரின் வாரிசுகள் நாங்கள். இதனை தைரியமாக பெருமையோடு என்னால் சொல்ல முடியும். பாஜக யாருடைய வாரிசு? கோட்சேவின் வாரிசுகள்தான் நீங்கள். இதனை உங்களால் பெருமையாக சொல்ல முடியுமா? என கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் படிக்க




  • அமலாக்கத்துறை இயக்குநர் பணி நீட்டிப்பு விவகாரம்..மீண்டும் உச்ச நீதிமன்ற கதவுகளை தட்டிய மத்திய அரசு




அமலாக்கத்துறையின் இயக்குநராக உள்ள எஸ்.கே.மிஸ்ராவின் பதவிக்காலத்தை மூன்றாவது முறையாக மத்திய அரசு சமீபத்தில் நீட்டித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், எஸ்.கே.மிஸ்ராவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது சட்டவிரோதமானது என தெரிவித்தது. இந்த நிலையில், அக்டோபர் 15ஆம் தேதி வரை, அமலாக்கத்துறை இயக்குநராக தொடர எஸ்.கே.மிஸ்ராவை அனுமதிக்கக் கோரி மத்திய அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும் படிக்க



  • நாடாளுமன்றத்தில் 7 மசோதாக்கள் தாக்கல்.. என்னென்ன மசோதாக்கள்? முழு விவரம்..


நேற்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளின் அமளிக்கிடையே 7 மசோதாக்கல் தாக்கல் செய்யப்பட்டன. பிறப்பு, இறப்பு திருத்த மசோதா,  ஜம்மு காஷ்மீர் இட ஒதுக்கீடு திருத்த மசோதா,ஜம்மு-காஷ்மீர் பழங்குடியினர் பட்டியல் திருத்த மசோதா, சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை திருத்த மசோதா,வன பாதுகாப்பு மசோதா, ஜம்மு காஷ்மீர் இட ஒதுக்கீடு திருத்த மசோதா, ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா ஆகியவை தாக்கல் செய்யப்பட்டது. மேலும் படிக்க



  • நாடாளுமன்ற அலுவல்களில் இன்று கருப்பு உடையில் பங்கேற்க எதிர்க்கட்சிகள் முடிவு


நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதல் எதிர்க்கட்சி தரப்பில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. மேலும் கடந்த 5 நாட்களாக எதிர்க்கட்சிகள் அவையில் முழக்கம் எழுப்பி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். மணிப்பூர் விவகாரத்தில் விவாதத்தை அனுமதிக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று கருப்பு உடை அணிந்து கூட்டத்தொடரில் பங்கேற்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளனர். மேலும் படிக்க