தமிழ்நாடு:



  • வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில் “வேளாண் சங்கமம்-2023” மாபெரும் கண்காட்சி: திருச்சியில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

  • பாஜகவுக்கு நாடாளுமன்ற தேர்தலில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

  • திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பௌர்ணமிக்கு பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யவேண்டும் என ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

  • அதிமுகவின் சொத்து பட்டியலை மட்டும் அண்ணாமலை ஏன் வெளியிடவில்லை என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

  • சாலை விபத்தில்‌ பாதிக்கப்பட்டவர்களை உயிர்காக்கும்‌ நற்கருணை வீரருக்கு ரூ.5,000 - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

  • எந்தக் கொம்பனும் குறை சொல்லமுடியாத அளவிற்கு ஆட்சி நடத்தி வருகிறோம் - முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி

  • எந்த கட்சி வேறுபாடின்றி விண்ணப்பிக்கும் தகுதி வாய்ந்த ஏழை, எளிய மக்கள் அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் - அமைச்சர் பொன்முடி

  • ஆளுநருடன் சந்திப்பை நடத்திய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவினர் மீதான சொத்து பட்டியல் தொடர்பான ஆவணங்களை ஆளுநரிடம் வழங்கினார்.

  • மூன்றாவது முறையாக அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்றக் காவல் ஆகஸ்ட் 8 வரை நீட்டிப்பு - சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்


இந்தியா: 



  • மாநிலங்களவைக்கு தலைமை வகித்ததன் மூலம், நாகாலாந்தை சேர்ந்த பாஜக எம்.பி. பேங்னான் கோன்யாக், இந்திய நாடாளுமன்ற ஜனநாயக வரலாற்றில் புதிய வரலாறை படைத்துள்ளார். நாகாலாந்தை சேர்ந்த பெண் எம்பி ஒருவர், மாநிலங்களவைக்கு தலைமை வகிப்பது இதுவே முதல் முறை. 

  • பிரதமர் மோடியை பேச வைப்பதற்கான காங்கிரஸ் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்துக்கு ஏற்பு : மக்களவையில் விவாதிக்கும் தேதி பின்னர் அறிவிப்பு என சபாநாயகர் தகவல்

  • உலக பொருளாதாரத்தில் 3வது இடம் பிடிப்போம், மூன்றாவது முறையாக எனது ஆட்சி அமையும் - பிரதமர் மோடி உறுதி

  • அமலாக்கத்துறை இயக்குனர் பதவியை நீட்டிக்க மனு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

  • மத்திய அரசின் நிதிக்காக காத்திருப்பதால் சட்டமன்ற நிகழ்வுகளை நேரலை செய்ய முடியாது: துர்தர்ஷன் தெரிவித்ததாக சட்டமன்ற செயலாளர் உயர்நீதிமன்றத்தில் தகவல் 

  • "என்னோட சுயமரியாதைக்கே சவால் விட்டிருக்கீங்க" - மாநிலங்களவையில் மைக் அணைக்கப்பட்டதற்கு பொங்கி எழுந்த எதிர்க்கட்சி தலைவர் கார்கே

  • இணையதளம் மூலம் இயங்கும் அத்தியாவசிய சேவைகளுக்கு இடையூறு ஏற்படுவதைத் தவிர்க்க OTT தளங்களைத் தேர்ந்தெடுத்துத் தடைசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ட்ராய் தெரிவித்துள்ளது.


உலகம்:



  • ஈக்வடார் நாட்டில் சிறை கைதிகள் இடையே நடைபெற்ற கலவரத்தில் 31 கைதிகள் உயிரிழந்தனர்.

  • ஜப்பானில் வரலாறு காணாத அளவில் மக்கள்தொகை வீழ்ச்சியடைந்துள்ளதாக தகவல்.

  • தன் மீதான ஊழல் வழக்கில் சட்ட நடவடிக்கைகளை நிறுத்தக்கோரிய இம்ரான்கானின் மனுவை தள்ளுபடி - பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் உத்தரவு

  • தென்னாப்பிரிக்காவில் பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 77 பேர் படுகாயம்


விளையாட்டு: 



  • இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான கடைசி  ஆஷஸ் டெஸ்ட் தொடர் இன்று தொடக்கம்.

  • இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பிரிட்ஜ்டவுனில் இன்று நடைபெறுகிறது.

  • ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்க இந்திய கால்பந்து அணிகளுக்கு அனுமதி - மத்திய விளையாட்டு அமைச்சகம் முடிவு

  • ஃபிபா மகளிர் உலகக் கோப்பை கால்பந்து: 5-0 என்ற கோல் கணக்கில் ஜாம்பியாவை வீழ்த்தியது ஸ்பெயின்