திருச்சியில் நடைபெற்ற திமுக வாக்குச் சாவடி முகவர்களுக்கான பயிற்சிப் பாசறைப் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது, “ மத்திய பிரதேசத்துக்குப் போனாலும், அந்தமான் விமானநிலையத்தை திறந்து வைக்கச் சென்றாலும்  திமுகவைத் திட்டுகிறார் பிரதமர் மோடி. திமுகவை வாரிசுகளின் கட்சி என்கின்றனர். இதனைக் கேட்டு கேட்டு புளித்து விட்டது. திமுகவை வாரிசுகளின் கட்சி என்கின்றனர். ஆமாம் திமுக வாரிசுகளின் கட்சிதான். ஆரியத்தை வீழ்த்த திராவிடத்தின் வாரிசுகள் நாங்கள். தந்தை பெரியாரின் வாரிசுகள், அண்ணாவின் வாரிசுகள், கலைஞரின் வாரிசுகள் நாங்கள். இதனை தைரியமாக பெருமையோடு என்னால் சொல்ல முடியும். பாஜக யாருடைய வாரிசு? கோட்சேவின் வாரிசுகள்தான் நீங்கள். இதனை உங்களால் பெருமையாக சொல்ல முடியுமா? குஜராத் மாநிலத்தில் 2002ஆம் ஆண்டு நடந்ததை யாரும் மறக்கவில்லை. அதனை இன்றைக்கு மணிப்பூர் நினைவு படுத்திக்கொண்டுள்ளது. மணிப்பூரில் நடக்கும் கலவரத்தை மாநிலத்தில் ஆளும் பாஜகவும் கட்டுப்படுத்தவில்லை, ஒன்றியத்தை ஆளும் பாஜகவும் கட்டுப்படுத்தவில்லை. வன்முறையாளர்களும் மாநிலத்தை ஆளும் பாஜக கட்டுப்பாட்டில் உள்ள மணிப்பூர் காவல்துறையும் மக்களைத் தாக்கிக்கொண்டுள்ளது என நான் கூறவில்லை, பாஜவைச் சேர்ந்த மணிப்பூர் சட்டமன்ற உறுப்பினர் பாவோலிய நால்ஹாக்கி கூறியிருக்கிறார். இதனைக் கூறியது ஸ்டாலின் அல்ல, பாஜக எதிரணியைச் சார்ந்தவரல்ல, பாஜகவைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர் கூறியிருக்கிறார். 


ஒற்றுமையாக இருந்த மக்களிடத்தில் பிரிவினைவாதத்தைத் தூண்டி அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட நினைத்ததன் விளைவுதான் இன்றைக்கு மணிப்பூர் பற்றி எரிந்துகொண்டுள்ளது. தமிழ்நாட்டில் அதிமுக என்ற பெயரில் ஒரு கொத்தடிமைக் கூட்டம் இயங்கிக்கொண்டுள்ளது. அவர்களில் யாராவது மணிப்பூரைப் பற்றி பேசினார்களா? பாஜகவுக்கு நான் அடிமை இல்லை என்ற பழனிசாமி மணிப்பூர் முதலமைச்சரையோ ஒன்றிய பாஜக அமைச்சரையோ கண்டித்தாரா? பழனிசாமியை அருகில் வைத்துக்கொண்டு ஊழல் ஒழிப்பு பற்றி பிரதமர் பேசுகிறார். சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு தடை கேட்டு உச்சநீதிமன்றம் சென்றவர் பழனிசாமி. கர்நாடகாவில் பாஜக மாநில அரசு ஊழல் செய்ததால்தானே மக்கள் சட்டமன்ற தேர்தலில் தோற்கடித்தார்கள். அதனை மறந்துவிட்டீர்களா? 


இந்தியாவில் மற்ற மாநிலங்கள் மணிப்பூர் போல் ஆக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தமிழை, தமிழ்நாட்டை, தமிழர்களை காக்க வேண்டும் எனறால் இந்தியாவின் ஜனநாயக கட்டமைப்பைக் காக்கவேண்டும். முத்துவேல் கருணாநிதியின் ஜனநாயகப் போர்படைத் தளபதிகள் நீங்கள்தான்.  என கூறினார். 


CM Stalin: எந்தக் கொம்பனும் குறை சொல்லமுடியாத அளவிற்கு ஆட்சி நடத்தி வருகிறோம் - முதலமைச்சர் ஸ்டாலின்


Die No Sirs Review: ஷார்ப் வசனங்கள், கேங் வார்... கோலிவுட்டுக்கு மற்றுமொரு ‘வட சென்னை’ வரவு... ’டைனோசர்ஸ்’ திரைப்பட விமர்சனம்!