Byjus Layoffs: பைஜூஸ் நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில் அதன் பெங்களூரு அலுவலகத்தை மூடியுள்ளது. 


பைஜூஸ் நிறுவனம்: 


இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் கல்வி ஆப் நிறுவனமாக பைஜூஸ் பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. பைஜுஸ் நிறுவனம் பல்வேறு துணை நிறுவனங்கள் மூலமாக இணையவழி கல்வி சேவையை வழங்கி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் மார்க்கெட்டிங் மூலம் மிகப்பெரிய சந்தையை பைஜூஸ் பிடித்துள்ளது. இதனை உலகம் முழுவதும் விரிவுபடுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது பைஜூஸ். 


இந்நிலையில், கடந்து ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தொடர்ந்து பணிநீக்க நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டு 2,500 ஊழியர்களையும், இந்த ஆண்டு 1,500 ஊழியர்களையும் பணிநீக்கம் செய்தது பைஜூஸ். மேலும் பணிநீக்கங்கள் மேற்கொள்ளப்படாது என்று சிஇஓ ரவீந்தரன் தெரிவித்திருந்த நிலையில், சமீபத்தில் ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்துள்ளது பைஜூஸ்.


நிதி நெருக்கடியில் பைஜூஸ்: 


வருமானம் குறைந்ததோடு, பைஜூஸ் நிறுவனம் கடும் கடன் நெருக்கடியில் சிக்கியுள்ளதும் பணி நீக்கத்திற்கு காரணமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. கடன் வாங்கல், கொடுக்கல் தொடர்பான பிரச்சனையில் பைஜூஸ் நிறுவனம் சிக்கியள்ளதாக தெரிகிறது. இதனால் கடும் நிதி நெருக்கடியில் மாட்டிக் கொண்டு நீதிமன்றம் வரை சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், பைஜூஸ் நிறுவனம் கடந்த 2021ஆம் ஆண்டு திரட்டிய 1.2 பில்லியன் டாலர் மூலம் கடன் வழங்கி வந்த நிலையில், தற்போது அதனையும் நிறுத்துவதாக தெரிகிறது. மேலும், பைஜூஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 75 சதவீதம் சரிந்துள்ளதாக தெரிகிறது. 


அலுவலகத்தை காலி செய்யும் பைஜூஸ்: 


இந்நிலையில், பெங்களூருவில் உள்ள அலுவலகத்தை பைஜூஸ் நிறுவனம் மூடியுள்ளது. பெங்களூருவில் கல்யாணி டெக் பார்க்கில் உள்ள 5.58 சததுர அடி அலுவலகத்தை மூடி உள்ளதாக தகவல் வெளியாகி  இருக்கிறது. இதேபோல பிரஸ்டீஜ் டெக் பார்க்கில் இருந்த ஒன்பது தளங்களை கொண்டிருந்த பைஜூஸ் நிர்வாகம் இரண்டு தளங்களை காலி செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும், கல்யாணி டெக் பார்க்கில் வேலை செய்த ஊழியர்களை  பன்னர்கட்டா மெயின் ரோட்டில் உள்ள பிரெஸ்டீஜ் டெக் பார்க் மற்றும் அதன் தலைமை அலுவலகத்தில் இருந்து வேலை செய்ய அறிவுறுத்தியுள்ளது பைஜூஸ். இதேபோல, டெல்லி என்சிஆர் செக்டார் 44ல் இருந்த ஒரு அலுவலகத்தை இந்த மாதம் மூடியது. பணம் தட்டுப்பாடு காரணமாக இதுபோன்ற நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது குறிப்பிடத்தக்கது.




மேலும் படிக்க 


Embracing the Future: எச்டிஎஃப்சி லைஃப் இன்சூரன்ஸ்.. 11 முதல் 26 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரத்யேக திட்டம்