• 14வது நாளை தொட்ட மீட்பு பணிகள்.. இன்றாவது மீட்கப்படுவார்களா? நெருங்கிய கடைசி கட்டம்..!


உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் யமுனோத்ரிதேசிய நெடுஞ்சாலையில் கட்டுமானத்தில் உள்ள சில்க்யாரா சுரங்கப்பாதைக்குள் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி இன்னும் முடிவடையவில்லை. இன்றுடன் இந்த மீட்பு பணி தொடங்கி 14வது நாளாகிறது. இன்றாவது சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களையும் மீட்பார்களா என்பது தெரியவில்லை. இருப்பினும், மீட்பு பணிக்காக கடைசி கட்ட தோண்டும் பணியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படிக்க..



  • ராஜஸ்தான் தேர்தலில் தொடங்கியது வாக்குப்பதிவு - 199 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு


ராஜஸ்தான் மாநிலத்தில் வாகுப்பதிவை ஒட்டி, 199 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கான முன்னோட்டமாக, 5 மாநில தேர்தல் பரபரப்பிற்கு பஞ்சமின்றி நடைபெற்று வருகிறது. இதில், மிசோரம், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 200 சட்டமன்ற தொகுதிகளில், 199 தொகுதிகளுக்கு இன்று  ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மேலும் படிக்க..



  • இந்தியாவில் சீறிப்பாய போகும் புல்லட் ரயில்.. செம்ம அப்டேட் கொடுத்த ரயில்வே அமைச்சர்


ரயில் சேவையை நவீனப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், பல்வேறு மாநிலங்களில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. வந்தே பாரத்தை காட்டிலும் அதி வேகமாக செல்லக்கூடிய புல்லட் ரயிலானது பயணிகளின் பயண நேரத்தை மேலும் குறைக்கும். எனவே, புல்லட் ரயில் திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. கடந்த 2009ஆம் ஆண்டு, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில், அதிக வேக ரயில்களை கொண்டு வருவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேலும் படிக்க..



  • "ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது" மாநில அரசுகளின் உரிமைகளை மீண்டும் நிலைநாட்டிய உச்ச நீதிமன்றம்


எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் இடையே தொடர்ந்து அதிகார போட்டி நிலவி வருகிறது. கேரளா, தமிழ்நாடு, டெல்லி, தெலங்கானா, பஞ்சாப், மேற்குவங்கம் என ஆளுநர் - அரசாங்கம் மோதல் நீடிக்கும் மாநிலங்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. மாநில சட்டப்பேரவைகளில் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர்கள் காலதாமதம் செய்வதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. மேலும் படிக்க..



  • டெல்லியில் உள்ள தூதரகத்தை நிரந்தரமாக மூடிய ஆப்கானிஸ்தான்: இதுதான் காரணம்!


இந்திய அரசாங்கத்தின் தொடர்ச்சியான சவால்களை எதிர்கொள்வதால், ஆப்கானிஸ்தான் தூதரகம் டெல்லியில் நிரந்தரமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆப்கானிஸ்தான் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய அரசிடம் இருந்து எதிர்கொண்டு வரும் சவால்களை குறைக்கும் விதமாக, கடந்த செப்டம்பர் மாதம் 30ம் தேதி டெல்லியில் உள்ள தூதரகத்தின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டன. இதன் விளைவாக எங்களுக்கு சாதகமான சூழல் உருவாகுன் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும் படிக்க..



  • சபரிமலையில் குவியும் பக்தர்கள்.. கேரளாவிற்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்..


கேரள மாநிலம் பத்தினம் திட்டாவில் அமைந்துள்ளது சபரிமலை. உலகப்புகழ்பெற்ற சபரிமலை கோயிலில் ஐயப்பனை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். கார்த்திகை மாதத்தில் மட்டும முதல் நாள் தொடங்கி மண்டல பூஜை காலம் வரை 41 நாட்கள் ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டிருக்கும். மேலும் படிக்க..