சென்னையில் பல்வேறு இடங்களில் பரமரிப்பு பணிக்காக நாளை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. காலை 9 மணியிலிருந்து, மதியம் 2 மணி வரை கீழ்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

பாடி

சென்னை பாடியில், அன்னை நகர், சுப்புலட்சுமி நகர், ராஜீவ் நகர், பாலாஜி நகர், வாகை நகர் ஆகிய இடங்களில், நாளை பராமரிப்பு பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.

திருமங்கலம்

சென்னை திருமங்கலத்தில, மெட்ரோ ஜோன், சத்திய சாய் நகர், பாடிக்குப்பம் மெயின் ரோடு, டி.என்.ஹெச்.பி குடியிருப்பு, பழைய பென், கோல்டன் ஜூப்ளி அடுக்குமாடி குடியிருப்பு, பாலாஜி நகர், காமராஜ் நகர், பெரியார் நகர், விஜிஎன், அம்பேத்கர் நகர், மேத்தா ராயல் பார்க், ரயில் நகர், சிவன் கோவில் தெரு, சீனிவாசன் நகர், 100 அடி ரோடு, புது காலனி மற்றும் மேட்டுக்குப்பம் ஆகிய பகுதிகளில், மின் விநியோகம், காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின்சார வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரும்பாக்கம்

சென்னை அரும்பாக்கத்தில், பராமரிப்பு பணிகளுக்காக, 100 அடி ரோடு, விஎன் புரம் 1 முதல் 3-வது தெரு வரை, ட்ரையம்ப் அப்பார்ட்மெண்ட் ஆகிய இடங்களில் மின் விநியோகம் துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

பராமரிப்பு பணிகள் முடிந்த உடன், மதியம் 2 மணிக்குள்ளாக மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

மேற்கூறிய இடங்களில் உள்ளோர், இந்த மின் விநியோக நிறுத்தத்திற்கு ஏற்றவாறு தங்கள் வேலைகளை திட்டமிட அறிவுறுத்தப்படுகிறது.