Shocking Video: கராச்சியில் உள்ள இங்கிலாந்து விசா அலுவலகத்தில் ஓடிய ஆபாச திரைப்படம்.. அதிர்ச்சியடையவைத்த வீடியோ

பாகிஸ்தான் கராச்சியில் உள்ள இங்கிலாந்து விசா அலுவலகத்தில் இருக்கும் விளம்பரப்படுத்தும் டிவி ஒன்றில் ஆபாச வீடியோ திரையிடப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

பாகிஸ்தான் கராச்சியில் உள்ள இங்கிலாந்து விசா அலுவலகத்தில் இருக்கும் விளம்பரப்படுத்தும் டிவி ஒன்றில் ஆபாச வீடியோ திரையிடப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது. 

Continues below advertisement

என்ன நடந்தது..? 

கராச்சியில் உள்ள இங்கிலாந்து விசா அலுவலகத்தில் மக்கள் தங்கள் பயண குறித்த நடைமுறைகள் மற்றும் பிற விவரங்களை சரிசெய்வதற்காக வழக்கம்போல் அங்கு வந்துள்ளனர். அப்போது, அங்கு எப்போதும்போல விளம்பரம் படுத்தும் டிவியில் திடீரென இரண்டு பெண்கள் ஒருவரை ஒருவர் முத்தம் கொடுப்பது போன்ற காட்சிகள் ஓட தொடங்கியுள்ளது. தொடர்ந்து, அடுத்தடுத்து ஒளிபரப்பான காட்சிகள் முகத்தை சுளிக்கும் அளவிற்கு ஓடியுள்ளது. பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் என அனைவரும் ஒரு பொது இடத்தில் இப்படியான காட்சிகள் ஒளிபரப்பானது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

இதை அஹ்மர் கான் என்ற நபர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில் அவர், “ கராச்சியில் உள்ள UK விசா அலுவலகம், தற்செயலாக பெரிய டிவியில் ஒரு பொருத்தமற்ற ஆபாச வீடியோவைக் ஓடுகிறது” என பதிவிட்டிருந்தார். 

கொஞ்ச நேரம் இந்த வீடியோ ஓடிய நிலையில், அலுவலகத்தில் இருந்த ஊழியர்களும் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து டிவியை அணைத்தனர். 

இதற்கு முன்பு கடந்த மார்ச் மாதமும் இதேபோன்ற சம்பவம் பாட்னா ரயில் நிலையத்தில் நடந்தது. கடந்த மார்ச் மாதம், பாட்னா சந்திப்பில் உள்ள நெரிசலான நடைமேடையில் ரயில் அட்டவணையை அறிவிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சியில் பாலியல் திரைப்பட தொழில் நடிகை கேந்திரா லஸ்ட்டின் வீடியோ திரையிடப்பட்டது. இது பயணிகளை திகைக்க வைத்தது.

Continues below advertisement