Rajasthan Election 2023: ராஜஸ்தான் தேர்தல் வாக்குப்பதிவு - பிற்பகல் 01.00 மணி வரையிலான நிலவரம் என்ன?

Rajasthan Election 2023: ராஜஸ்தான் மாநிலத்தின் 199 சட்டமன்ற தொகுதிகளில், இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

Continues below advertisement

Rajasthan Election 2023: ராஜஸ்தான் மாநிலத்தில் வாகுப்பதிவை ஒட்டி, 199 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Continues below advertisement

பிற்பகல் 1 மணி நிலவரம்:

ராஜஸ்தான் மாநிலத்தில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், பிற்பகல் 1 மணி வரையில் 40.27 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. அதாவது 90 நிமிடங்களில் சுமார் 16 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. 11.30 மணி நிலவரப்படி 24.74 சதவிகிதம் அளவிற்கு வாக்குகள் பதிவாகி இருந்தது. முதல் 2 மணி நேரத்தில் 10 சதவிகித வாக்குகள் மட்டுமே பதிவான நிலையில், அடுத்த 2.3 மணி நேரத்தில் 14.74 சதவிகித வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது..

ராஜஸ்தான் மாநில சட்டமன்ற தேர்தல்:

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கான முன்னோட்டமாக, 5 மாநில தேர்தல் பரபரப்பிற்கு பஞ்சமின்றி நடைபெற்று வருகிறது. இதில், மிசோரம், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 200 சட்டமன்ற தொகுதிகளில், 199 தொகுதிகளுக்கு இன்று  ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

ஒரேகட்டமாக வாக்குப்பதிவு:

ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் 199 தொகுதிகளுக்கு நவம்பர் 25, சனிக்கிழமை அன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 200 தொகுதிகளில் 199 தொகுதிகளுக்கு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவும், டிசம்பர் 3ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது. ஸ்ரீகங்காநகரின் கரன்பூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரும், எம்எல்ஏவுமான குர்மீத் சிங் கூனார் மரணமடைந்ததால், இந்தத் தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குப்தா அறிவித்தார்.

வாக்காளர் விவரங்கள்:

199 தொகுதிகளில் களமிறங்கியுள்ள  ஆயிரத்து 862 வேட்பாளர்களின் தலை எழுத்தை நிர்ணயிக்க,   5 கோடியே 25 லட்சத்து 38 ஆயிரத்து 105 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அவர்களில் 18-30 வயதுக்குட்பட்ட 1,70,99,334 வாக்காளர்களும், 18 முதல் 19 வயதுக்குட்பட்ட 22,61,008  புதிய வாக்காளர்களும் அடங்குவர். 

பாதுகாப்பு பணிகள் தீவிரம்:

மாநிலத்தில் மொத்தம் 36,101 இடங்களில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில்,  நகர்ப்புறங்களில் 10,501 வாக்குச்சாவடிகளும், கிராமப்புறங்களில் 25 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும், 65,277 வாக்குப்பதிவு அலகுகள், 62,372 கட்டுப்பாட்டு அலகுகள், இருப்புக்கள் உட்பட 67,580 விவிபிஏடி இயந்திரங்கள் வாக்குப்பதிவு பணிக்காக பயன்படுத்தப்படுகின்றன. அமைதியான வாக்குப்பதிவை உறுதி செய்வதற்காக 1,02,290 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கூட்டணி விவரங்கள்:

ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவிற்கும் இந்த தேர்தலில் நேரடி போட்டி நிலவி வருகிறது. பாஜக அனைத்து இடங்களிலும் போட்டியிடுகிறது, அதே நேரத்தில் 2018 தேர்தலைப் போலவே காங்கிரஸ் அதன் கூட்டணிக் கட்சியான ராஷ்ட்ரிய லோக்தளத்திற்கு ஒரு தொகுதிய வழங்கிவிட்டு மற்ற தொகுதிகளில் நேரடியாக போட்டியிடுகிறது. காங்கிரஸில் இருந்து விலகிய கிரிராஜ் சிங் மலிங்கா உட்பட 59 எம்.எல். ஏக்கள்,  6 மக்களவை மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் உள்ளிட்டோர் இந்த தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடுகின்றனர். அதே நேரத்தில் காங்கிரஸ் 7 சுயேச்சைகள் மற்றும் பாஜகவில் இருந்து ஒருவர் உட்பட 97 எம்எல்ஏக்களை களமிறக்கியுள்ளது. தற்போதைய சூழலில், ராஜஸ்தானில் காங்கிரஸிடம் 107 எம்.எல்.ஏ.க்களும்,  பாஜக 70 எம்.எல். ஏக்களையும் கொண்டுள்ளது.

மாறுமா வரலாறு?

பெண்களுக்கு எதிரான குற்றங்கள், தேர்வுத்தாள் ஊழல், விவசாயிகள் தற்கொலை போன்றவை ஆளும் காங்கிரஸுக்கு எதிராக பாஜகவால் முன்வைக்கப்பட்ட முக்கிய குற்றச்சாட்டுக்ள் ஆகும். அதேநேரம், ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் ஆட்சி மாறும் என்ற, கடந்த 30 ஆண்டுகால வரலாறு இந்த முறை மாற்றி அமைக்கப்பட்டு மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமையும் என, முதலமைச்சர் அசோக் கெலாட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 

Continues below advertisement