Top 10 News Headlines: ஆந்திராவில் கல்வி உதவித் தொகை திட்டம்! ரெட் அலர்ட், கார் பரிசு- டாப் 10 செய்திகள்
Top 10 News Headlines Today June 12: இந்தியா முழுவதும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்.

கல்வி உதவித் தொகை
ஆந்திர பிரதேசத்தில் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் தாயார் வங்கிக் கணக்குகளில் கல்வி உதவித் தொகையாக ஆண்டுக்கு ரூ.15,000 செலுத்தும் புதிய திட்டம் அமலுக்கு வந்தது! (இதன் மூலம் 67 லட்சம் மாணவர்கள் பயனடைவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னேற்பாடுகள் தீவிரம்
நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால், 2 தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் அங்கு விரைந்துள்ளன. முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்வதற்காக 60 பேர் கொண்ட குழுக்கள் மீட்பு உபகரணங்களுடன் களத்தில் உள்ளன.
வீரர்களுக்கு BYD கார் பரிசு!
ஃபிபா கால்பந்து உலக கோப்பை தொடருக்கு முதல்முறையாக தகுதி பெற்ற உஸ்பெகிஸ்தான் அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் உட்பட40 பேருக்கு மைதானத்திலேயே BYD எலக்ட்ரிக் கார்களை பரிசாக வழங்கிய அந்நாட்டு பிரதமர் ஷவ்கத் மிர்சியோயேவ்.
கின்னஸ் சாதனை:
சிறுவயதில் இருந்தே கேமராக்களை சேகரித்து வந்த சென்னையைச் சேர்ந்த பல் மருத்துவர் வசந்த ராவ் அருண், ஒரு அருங்காட்சியத்தையே |திறந்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்! உலகிலேயே அதிக புகைப்பட கேமராக்களை வைத்துள்ளார். இவரிடம் சுமார் 5,707 கேமராக்கள் உள்ளன.
தொல்லியல்துறையின் அகழ்வாராய்ச்சிப் பணிகள் நிறுத்தம்
புதுக்கோட்டை: கொடும்பாளூரில் நடைபெற்று வந்த ஒன்றிய தொல்லியல்துறையின் அகழ்வாராய்ச்சிப் பணிகள் கடந்த 25 நாட்களுக்கு மேலாக முழுவதுமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது! பணிகள் மேற்கொள்ள ஒன்றிய அரசு போதிய நிதிகள் ஒதுக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், அகழ்வாராய்ச்சி இயக்குநராக பணியில் இருந்த அனில் குமார் என்பவரை திடீரென இடமாற்றம் செய்துள்ளது மத்திய அரசு.
சகோதரியை திட்டியதற்காக இழப்பீடு
ஐக்கிய அரபு அமீரகம்: சகோதரி தன்னை தகாத வார்த்தைகளால் திட்டி அவமதித்ததாக வழக்குத் தொடர்ந்த பெண்ணுக்கு ரூ.2.30 லட்சம் இழப்பீடு வழங்க அல்-ஐன் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு. குற்றம் சாட்டப்பட்டவர் மேல்முறையீடு செய்தபோதும் நீதிமன்றம் விசாரிக்க மறுத்துவிட்டது. அவர் பயன்படுத்திய வார்த்தைகள் தரைக்குறைவாகவும், மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகவும் நீதிமன்றம் கருத்து.
பிஎஸ்எஃப் வீரர்களுக்கு மோசமான ரயில்பெட்டி: 4 பேர் சஸ்பெண்ட்
BSF வீரர்களுக்கு முறையாக பராமரிக்காத ரயில் பெட்டியை துக்கியதாக எழுந்த புகாரில் 4 அதிகாரிகள் சஸ்பெண்ட் ரயில்வே நிர்வாகம் உத்தரவு.திரிபுராவில் இருந்து அமர்நாத் யாத்திரை பாதுகாப்பு பணிக்காக சென்ற BSF வீரர்களுக்கு மோசமான பெட்டி ஒதுக்கப்பட்டது தொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையானது.
திருச்சி - டெல்லி விமான சேவை; துரை வைகோ வரவேற்பு
திருச்சியில் இருந்து டெல்லிக்கு நேரடி விமான சேவை தொடங்குவதை அறிந்து மகிழ்ந்தேன். இண்டிகோ நிறுவனத்தின் அறிவிப்பால் எனது தொகுதி மக்கள் உள்ளிட்டோர் பயனடைவார்கள், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனமும் விரைவில் விமான சேவையை தொடங்கும் என நம்புகிறேன் மதிமுக எம்.பி. துரை வைகோ
பாமக இளைஞரணி தலைவர் மர்ம மரணம்
சோளிங்கர் அருகே பாமகவின் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட இளைஞரணி தலைவராக செயல்பட்டு வந்த வழக்கறிஞர் சக்ரவர்த்தி (48) என்பவர் நேற்று இரவு தலையில் காயங்களுடன் மர்மமான முறையில் சாலை ஓரம் சடலமாக மீட்பு. சாலை விபத்தா? அல்லது கொலையா ?என்ற கோணத்தில் கொண்டபாளையம் காவல் துறை விசாரணை!
மழை நீர் வடிகால்கள்:
சென்னை விமான நிலையத்திற்குள், விமான போக்குவரத்துக்கு இடையூறாக ஓடுபாதைகள் மற்றும் விமானங்கள் நிறுத்தும் இடங்களில், மழை நீர் தேங்காமல் தடுக்க விமான நிலைய வளாகத்திற்குள் 4.3 கி.மீ. நீளத்திற்கு புதிய மழைநீர் கால்வாய் கட்டும் பணியை இந்திய விமான நிலைய ஆணையம் தொடங்கியுள்ளது! இந்த கால்வாய் வழியாக, அடையாறு ஆற்றில் கலக்கும் விதத்தில், கால்வாய் அமைக்கப்படுகிறது. சென்னை ஐஐடி நிபுணர்களின் ஆலோசனைகளின் பெயரில், இந்த மழைநீர் கால்வாய் அமைக்கப்படுவதாக, சென்னை விமான நிலைய அதிகாரிகள் தகவல்.






















