Top 10 News Headlines: "பாஜக ஒரு நெகட்டிவ் சக்தி" கட்டணமில்லா பார்கிங், இந்தியர் சாதனை - 11 மணி செய்திகள்
Top 10 News Headlines Today July 21: இந்தியா முழுவதிலும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக தற்போது பார்க்கலாம்.

திமுகவில் இணைந்த அன்வர் ராஜா
அதிமுக அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா, திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் தன்னை அக்கட்சியில் சேர்த்துக்கொண்டார். முன்னதாக அன்வர் ராஜா அண்ணா அறிவாலயம் சென்ற தகவல் வெளியானதுமே, அவரை அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
எடப்பாடி மீது அன்வர் ராஜா அட்டாக்:
“3 முறை பேட்டி அளித்த அமித் ஷா ஒரு இடத்தில் கூட முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் என கூறவில்லை. நான்தான் போரை நிறுத்தினேன் என்று டிரம்ப் கூறுவதைப் போல நான்தான் முதலமைச்சர் வேட்பாளர் என்று 10 நாட்களாக எடப்பாடி கூறி வருகிறார். “பாஜக ஒரு NEGATIVE சக்தி தமிழ்நாடு மக்கள் ஒருபோதும் பாஜகவை ஏற்க மாட்டார்கள்” - அனவ்ர் ராஜா
PSP மருத்துவக் கல்லூரிக்கு 50 இடங்கள் குறைப்பு
தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகளை பின்பற்றாததால் காஞ்சிபுரம் பிஎஸ்பி மருத்துவக் கல்லூரிக்கு 50 இடங்கள் குறைப்பு. 100 மாணவர்களை மட்டுமே சேர்க்க அனுமதி. விதிகளை பின்பற்றாத ஆந்திரா, சத்தீஸ்கர், டெல்லி, குஜராத், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள 9 மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கைக்கு தேசிய மருத்துவ ஆணையம் முழுமையாக அனுமதி மறுத்துள்ளது.
மாநகராட்சி PARKING-ல் கட்டணம் இல்லை
சென்னை மாநகராட்சி வாகன நிறுத்துமிடங்களில் இன்று முதல் எந்த கட்டணமும் இல்லாமல் வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம். கட்டண வசூலுக்கு தமிழ்நாடு முன்னாள் படைவீரர் கழகத்துடன் செய்யப்பட்டிருந்த ஒப்பந்தம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், புதிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் வரை எவ்வித கட்டணமும் இல்லாமல் வாகனங்களை நிறுத்தலாம் என மாநகராட்சி அறிவிப்பு
பிரதமர் மோடி பெருமிதம்
”சர்வதேச விண்வெளி நிலையத்தில் இந்தியாவின் கொடி ஏற்றப்பட்டுள்ளது. இது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்க்கும் தருணம். இது நமது எதிர்காலப் பணிகளுக்கு உத்வேகமாக இருக்கும்” என மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குவதை ஒட்டி நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு
திருப்பதியில் இருந்து ஹைதராபாத்துக்கு புறப்பட்ட இண்டிகோ விமானம் அவசரமாக தரையிறக்கம். தொழில்நுட்பக் கோளாறால் அரை மணி நேரத்தில் மீண்டும் திருப்பதிக்கே திரும்பியது. புயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகளும் செய்து தரப்பட்டன.
வீட்டின் மேற்கூரையில் பாய்ந்த கார் - 6 பேர் படுகாயம்
ஜெர்மனியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தின் மீது மோதி, தரையிலிருந்து 3 மீ உயரத்தில் பறந்து சாலையோரம் இருந்த வீட்டின் மேற்கூரையில் பாய்ந்த கார். இந்த விபத்தில் 4 சிறுவர்கள் உட்பட 6 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி - போலீஸ் விசாரணை.
தென்கொரியாவில் சோகம்
தென்கொரியாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 17 பேர் உயிரிழப்பு. 13 பேரை காணவில்லை. மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
ஐசிசி வெளியிட்ட அறிவிப்பு
2027, 2029, 2031 என அடுத்த 3 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிகளும் இங்கிலாந்தில் நடைபெறும் என ஐசிசி அறிவிப்பு. ஏற்கனவே நடந்துள்ள 3 WTC FINALகளும் இங்கிலாந்தில் நடத்தப்பட்ட நிலையில், அடுத்த போட்டியை இந்தியாவில் நடத்த வேண்டும் என பிசிசிஐ வைத்த கோரிக்கையை நிராகரித்தது ஜெய்ஷா தலைமையிலான ஐசிசி.
இந்திய வீராங்கனை சாதனை
மகளிர் செஸ் உலக கோப்பை அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார் ஆந்திராவைச் சேர்ந்த கோனேரு ஹம்பி. ஜார்ஜியாவில் நடைபெற்று வரும் போட்டியில் சீனாவின் யூஜின் சாங்-ஐ வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தார்.





















