மேலும் அறிய
Advertisement
Today Headlines: தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா! தெ.ஆ.டெஸ்ட் இந்தியா தோல்வி..! முக்கியச் செய்திகள் சில!
தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு :
- தமிழ்நாட்டில் நேற்று முதல் அமலுக்கு வந்தது இரவு நேர ஊரடங்கு
- மக்கள் நடமாட்டத்தை கண்காணிக்க இரவு நேரங்களில் காவல்துறை தீவிர கண்காணிப்பு
- இரவு நேர ஊரடங்கால் தமிழ்நாட்டின் பிரதான சாலைகள் வெறிச்சோடியது
- தமிழ்நாட்டில் ஒரே நாளில் 6 ஆயிரத்து 983 பேருக்கு கொரோனா
- சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 4 ஆயிரம் பேருக்கு கொரோனா
- நீட் விலக்கு மசோதா குறித்து நாளை சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டம்
- நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசுக்கு முழு ஆதரவு அளிப்போம் – சட்டசபையில் அ.தி.மு.க. உறுதி
- சுனாமி போல பரவும் டெல்டா, ஒமிக்ரான் – சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேதனை
- முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திருச்சி சிறையில் அடைப்பு
இந்தியா :
- பிரதமரின் பஞ்சாப் பயண பாதுகாப்பு குறைபாடு : மூன்று பேர் கொண்ட விசாரணை குழுவை அமைத்தது மத்திய உள்துறை அமைச்சகம்
- பிரதமர் பாதுகாப்பு குறைபாடு குறித்து விசாரிக்க பஞ்சாப் விரைகிறது மத்திய உள்துறை அமைச்சகம்
- பிரதமரின் பஞ்சாப் பயணத்தின் பாதுகாப்பு குறைபாடு வழக்கு : உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
- பிரதமரின் பாதுகாப்பு மீது குறைபாட்டிற்கு மாநில அரசின் மீது குற்றம் சாட்டுவது நியாயமல்ல – பஞ்சாப் முதல்வர்
- நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர்களுக்கான தேர்தல் செலவு வரம்பு 95 லட்சமாக உயர்வு
உலகம் :
- ஒமிக்ரான் வைரசால் புதிய வகை வைரஸ் உருவாகலாம் : உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
- வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை : ஜப்பான் தகவல்
- தடுப்பூசி செலுத்தாதவர்களை பிரான்ஸ் அதிபர் விமர்சித்து பேசியது கடும் சர்ச்சை
- கொரோனா பாதித்தவர்களுக்கு 14 நாட்கள் தனிமையே தொடரலாம் : உலக சுகாதார அமைப்பு
விளையாட்டு :
- இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி
- ஜோகன்ஸ்பர்க்கில் இந்திய அணி நிர்ணயித்த 243 ரன்கள் இலக்கை 7 விக்கெட் வித்தியாசத்தில் அடைந்து வெற்றி
- முன்னணி டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சின் விசாவை ரத்து செய்த ஆஸ்திரேலியாவை கண்டித்து செர்பியாவில் போராட்டம்
- தடுப்பூசி செலுத்தாவிட்டால் விளைவுகளைச் சந்திக்கத்தான் நேரிடும் : ஜோகோவிச் விவகாரத்தில் நடால் கருத்து
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
சென்னை
தேர்தல் 2024
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion