மேலும் அறிய
Advertisement
Today Headlines : புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி...! மீண்டும் கனமழை...! கான்பூர் டெஸ்ட் டிரா...! - தலைப்புச்செய்திகள்
கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
- கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்
- சென்னையில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் – வானிலை ஆய்வுமையம் தகவல்
- தெற்கு அந்தமான் பகுதியில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது
- 48 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என்று கணிப்பு
- தமிழ்நாட்டில் டிசம்பர் 3-ந் தேதிக்கு பிறகு மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு
- கனமழை எச்சரிக்கை காரணமாக தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை
- கடலூரில் 30க்கும் மேற்பட்ட நகரங்களில் வீடுகளைச் சூழ்ந்த வெள்ளம் – வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க நடவடிக்கை
- ஆர்.டி.இ. சட்டத்தின் கீழ் சேர்ந்த மாணவர்களுக்கான கல்விக்கட்டணத்தை விடுவித்தது தமிழக அரசு
- உண்மைக்கு புறம்பாக தன்மீது அவதூறு கூறிய கேரள பெண் மீது மானநஷ்ட வழக்கு – முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்
இந்தியா :
- நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது வேளாண் சட்ட ரத்து மசோதா
- குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு பிறகு மூன்று வேளாண் சட்டங்களும் ரத்து
- ஒமிக்ரான் வைரஸ் நுழைந்துவிடாமல் தடுப்பதற்காக விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரம்
- வேளாண் சட்ட ரத்து மசோதா நிறைவேற்றப்பட்டாலும் போராட்டத்தை தொடரும் விவசாய சங்கங்கள்
- நிலுவையில் உள்ள 6 கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக எழுத்துப்பூரவமாக அறிவிக்க வேண்டும் – விவசாயிகள் சங்கம்
- இந்தியாவில் 18 வயதிற்கு கீழே உள்ளவர்களுக்கு விரைவில் தடுப்பூசி
- பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி – முன்னாள் முதல்வர் அம்ரீந்தர்சிங்
உலகம் :
- ஒமிக்ரான் வைரஸ் குறித்து தீவிரமாக ஆய்வு செய்து வரும் உலக சுகாதார அமைப்பு
- ட்விட்டர் நிறுவனத்தின் சி.இ.ஓ. ஜேக் டார்ஸி ராஜினாமா : புதிய சி.இ.ஓ.வாக இந்தியாவைச் சேர்ந்த பரக் அகர்வால் தேர்வு
- கொரோனா கால போனஸ், ரூபாய் 1 லட்சத்து 10 ஆயிரம் ஊதிய உயர்வு – ஊழியர்களுக்கு அறிவித்தது ஜெர்மனி அரசு
விளையாட்டு :
- இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்டை போராடி டிரா செய்தது நியூசிலாந்து
- தேசிய சீனியர் கால்பந்து போட்டியில் தமிழக அணி தெலுங்கானாவை 20-0 என்ற கோல் கணக்கில் வென்று அசத்தல்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
இந்தியா
ஜோதிடம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion