மேலும் அறிய
Today Headlines : இ.பி.எஸ். மீது இன்று விசாரணை..! திரௌபதி முர்மு பதவியேற்பு..! அமெரிக்காவில் கட்டுக்கடங்காத காட்டுத்தீ..! இன்னும் பல
Today Headlines : கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு :
- எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு – உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
- அ.தி.மு.க. பொதுக்குழுவிற்கு எதிராக ஓ.பி.எஸ். தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு – நாளை மறுநாள் உச்சநீதிமன்றத்தில் விசாரணை
- இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும் – மத்திய அமைச்சருக்கு தமிழக முதல்வர் கடிதம்
- திருத்தணியில் தனியார் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் – 4 மணிநேரம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை
- அந்நிய மரங்களை அகற்ற கொள்கை முடிவெடுத்த தமிழக அரசே யூகலிப்ஸ்ட் மரங்களை நடுவது ஏன்? உயர்நீதிமன்றம்
இந்தியா :
- நாட்டு மக்களின் வளமான எதிர்காலத்திற்காக பணியாற்றப் போகிறேன் – புதிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
- பெண்களின் நலனில் தனி கவனம் செலுத்தப்படும் – திரௌபதி முர்மு
- நாட்டின் வளர்ச்சிக்கு எதிர்க்கட்சிகள் முட்டுக்கட்டை போடுகின்றன – பிரதமர் மோடி
- நாட்டில் எதிர்க்கட்சிகள் அரசியல் லாபத்திற்காகவே செயல்படுகிறன்ற – பிரதமர் மோடி குற்றச்சாட்டு
- காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியிடம் அமலாக்கத்துறையினர் இன்று மீண்டும் விசாரணை
- மக்களவை நடவடிக்கைகளுக்கு இடையூறு : ஜோதிமணி, மாணிக்கம்தாகூர் உள்பட 4 பேர் இடைநீக்கம்
- கட்டுக்கட்டாக சிக்கிய 21 கோடி ரூபாய் : மேற்கு வங்க அமைச்சருக்கு ஆகஸ்ட் 3 வரை காவல்
உலகம் :
- அமெரிக்காவில் வனப்பகுதியில் இருந்து குடியிருப்பு பகுதிகளுக்கு பரவிய காட்டுத்தீ – எரிந்து சாம்பலாகிய வீடுகள்
- குரங்கம்மை நோய் பாதிப்புடன் தாய்லாந்தில் இருந்து கம்போடியா தப்பியோடிய நைஜீரிய வாலிபர் கைது
விளையாட்டு :
- செஸ் ஒலிம்பியாட் தீபம் மதுரை வந்தது : அமைச்சர்கள் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி வரவேற்பு
- இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே நாளை கடைசி ஒருநாள் போட்டி
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
விளையாட்டு
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion