மேலும் அறிய
Today Headlines : ஜூலை 18 ஜனாதிபதி தேர்தல்...! செஸ் ஒலிம்பியாட் லோகோ வெளியீடு..! தெ.ஆ. அதிரடி வெற்றி..! இன்னும் முக்கியச்செய்திகள் பல
Today Headlines : கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.

தலைப்புச்செய்திகள்
தமிழ்நாடு :
- செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான இலட்சினை மற்றும் சின்னத்தை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
- சென்னை, மயிலாடுதுறை உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதும் 9 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
- தமிழ்நாட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்திய சோதனையில் ஆயுதங்கள் மற்றும் ஆவணங்கள் பறிமுதல்
- நியாய விலைக்கடை ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து ஒருவாரத்திற்குள் நல்ல முடிவு : அரசு
- கழிவு நீர் தொட்டிகளை தூய்மைப்படுத்த நவீன கருவி – தமிழ்நாட்டில் 10 இடங்களில் முதற்கட்டமாக அமல்
- வெளிநாட்டில் இருந்து மீட்கப்பட்ட 3 சிலைகள் கோவில்களில் ஒப்படைப்பு
- ஆபரேஷன் கந்துவட்டி வேட்டையில் ஈரோட்டில் ஒருவர் கைது
- தூத்துக்குடி ஆட்சியர் பெயரை பயன்படுத்தி வாட்ஸ் அப்பில் பண மோசடி
- நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.
இந்தியா :
- ஜூலை 18-ந் தேதி புதிய குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் – இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
- நாட்டின் 15-வது குடியரசுத் தலைவர் ஜூலை 25-ந் தேதி பதவியேற்பார் – இந்திய தேர்தல் ஆணையம்
- 16 இடங்களுக்கான மாநிலங்களவை பதவிக்கான தேர்தலுக்கு இன்று வாக்குப்பதிவு
- ராஜஸ்தான் மாநிலத்தில் குதிரைப்பேரம்: பாதுகாக்கப்படும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்
- நாட்டின் உயிரிபொருளாதாரம் 8 மடங்கு வளர்ச்சி: பிரதமர் மோடி
- நாடு முழுவதும் அமலாக்கத்துறையை கண்டித்து 13-ந் தேதி போராட்டம்
- கேரள முதல்வர் பினராயி விஜயன் பதவி விலகக்கோரி காங்கிரஸ் போராட்டம்
உலகம் :
- ரஷ்யாவுக்கு எதிரான போரில் பின்வாங்க மாட்டோம்: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி திட்டவட்டம்
- இலங்கையில் அரசுக்கு எதிராக தொடர்ந்து போராட்டம்: கண்ணீர் புகைக்குண்டு வீச்சு
- அமெரிக்காவில் தனியார் நிறுவனத்தில் துப்பாக்கிச்சூடு: 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு
- ஸ்பெயினில் வேகமாக பரவும் காட்டுத்தீ : மக்கள் வெளியேற்றம்: தீயை அணைக்கும் பணியில் 15 விமானங்கள்
விளையாட்டு :
- இந்திய அணி நிர்ணயித்த இமாலய இலக்கை எட்டி வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா
- இந்தியாவின் உலக சாதனை கனவை தகர்த்த தென்னாப்பிரிக்கா
- ஹர்திக், இஷான் கிஷான் அதிரடியை வீணாக்கிய வான்டர் டுசென் மற்றும் டேவிட் மில்லர்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Before You Go
பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
ட்ரெண்டிங் செய்திகள்

வினய் லால்Columnist
Opinion





















