மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: என்ன நடந்தது நேற்று..? என்ன நடக்கிறது இன்று..? இன்றைய தலைப்புச் செய்திகள் உங்களுக்காக!
Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- ஆசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கங்களை வென்று சாதனை புரிந்த இந்திய விளையாட்டு வீரர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- வளிமண்டல் சுழற்சி காரணமாக 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
- பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று கூடுகிறது: காவிரி தொடர்பாக தீர்மானம் தாக்கலாகிறது.
- அடுத்த முறை பாஜக ஆட்சிக்கு வந்தால், இந்தியாவில் மாநிலங்களுக்கு அதிகாரமில்லாத, ஒற்றையாட்சி ஏற்படும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
- புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடையாது; யூனியன் பிரதேச அந்தஸ்தே தொடரும் என முதல்வர் ரங்கசாமிக்கு மத்திய உள்துறை அமைச்சகம் பதில் கடிதம் அனுப்பியுள்ளது.
- சேப்பாக்கம், மயிலாப்பூர், எழும்பூர் உள்பட 9 திட்டப்பகுதிகளில் ரூ.556 கோடியில் 3,238 அடுக்குமாடி குடியிருப்புகள் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
- மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 3,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் 2,300 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
- இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது, பாஜகவை எதிர்ப்பதாக அதிமுக கூறுவது ஏற்க முடியாது - கே. பாலகிருஷ்ணன் பேட்டி
இந்தியா:
- சூரியனுக்கு அருகில் உள்ள எல் 1 புள்ளியை நோக்கி ஆதித்யா விண்கலம் சரியான பாதையில் பயணிக்கிறது.
- இஸ்ரேல் நாட்டின் மீது பாலஸ்தீனத்தின் ஹமாஸ் ஆயுதக்குழு நடத்திய தாக்குதல் எதிரொலியாக ஏர் இந்தியா விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- பிரபுல் பட்டேலுக்கு பதவி, அதிகாரம் வழங்கிய போது தான் சரத்பவார் ஜனநாயகமற்ற முறையில் நடந்து கொண்டார் என சுப்ரியா சுலே எம்.பி. ஆவேசமாக கூறியுள்ளார்.
- மேகாலயாவில் நிலச்சரிவு: வீடு இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு
- இந்திய விமானப்படையின் புதிய கொடியை விமானப்படை தளபதி அறிமுகப்படுத்தினார்.
- உத்தரகாண்டில் பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து : 3 பேர் உயிரிழப்பு; 18 பேர் காயம்
- பெங்களூருவில் ஒயிட்பீல்டு-சல்லகட்டா இடையே நேற்று (திங்கட்கிழமை) முதல் மெட்ரோ சேவை தொடங்கியது.
உலகம்:
- இஸ்ரேல்-பாலஸ்தீனம் மோதல் உச்சகட்டத்தை அடைந்த நிலையில், அங்கு சிக்கி தவித்த இந்தியர்கள் 27 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என்று மேகாலயா முதல்வர் தெரிவித்துள்ளார்.
- கனடாவில் விமானம் விழுந்து நொறுங்கி இந்திய பயிற்சி விமானிகள் உயிரிழப்பு
- இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 10 நேபாள மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேலில் உள்ள நேபாள தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
- இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல் வெறுக்கத்தக்க செயல் என ஆஸ்திரேலிய பிரதமர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
- ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இதுவரை 2,000 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விளையாட்டு:
- ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- சீனாவில் நடைபெற்று வந்த ஆசிய விளையாட்டு போட்டி நேற்றுடன் முடிவடைந்தது.
- 40 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி தொடக்க வீரர்கள் இருவரும் ஒரே ஒருநாள் போட்டியில் டக் அவுட்டாகி மோசமான சாதனை படைப்பு
- உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளை பார்க்க கிரிக்கெட் ரசிகர் ஜார்வோவுக்கு ஐ.சி.சி. தடை விதித்து உள்ளது.
- உலகக் கோப்பை போட்டி 2023: இன்றைய போட்டியில் நியூசிலாந்து - நெதர்லாந்து பலப்பரீட்சை
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
க்ரைம்
தமிழ்நாடு
சேலம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion