மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: இதுவரை உங்களைச் சுற்றி நடந்த மிக முக்கிய நிகழ்வுகள்.. காலை 7 மணி தலைப்புச் செய்திகளாக இதோ..!
Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் வருவமான வரித்துறையினர் சோதனை - மத்திய பாஜக அரசின் பழிவாங்கும் அரசியலுக்கு எல்லையே இல்லை என முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்
- பிரதமரும், ஆளுநரும் மத வெறியை தூண்டிவிட்டு ஆதாயம் தேடுகிறார்கள் - அமைச்சர் பொன்முடி கடும் விமர்சனம்
- சட்ட விரோதமாக விளம்பர பலகைகள் வைப்பதை தடுக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன? - தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி
- வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவிப்பு
- சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை கைது செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்
- பகுதி நேர ஆசிரியர்கள் சங்கத்தினர் மற்றும் டெட் தேர்வு ஆசிரியர்கள் சங்கத்தினர் போராட்டம் தற்காலிக வாபஸ் - இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கத்தினர் போராட்டம் தொடரும் என அறிவிப்பு
- டெல்டா மாவட்டங்களில் குறுவை பயிர் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
- அடுத்த 7 மாதம் திமுக அரசுக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்களை நடத்த வேண்டும் என பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் அண்ணாமலை பேச்சு
- அமைச்சர் செந்தில்பாலாஜி மீது பணமோசடி புகார் - வழக்கை அக்டோபர் 31 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
- டிடிஎஃப் வாசன் ஜாமீன் மனு ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி - பைக்கை எரித்துவிட வேண்டும் என நீதிபதி காட்டமான கருத்து
இந்தியா:
- வள்ளலார் உயிருடன் இருந்திருந்தால் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை பாராட்டி இருப்பார் - பிரதமர் மோடி பேச்சு
- ஊழல் வழக்கில் கைதான சந்திரபாபு நாயுடுவுக்கு மேலும் இரண்டு வாரங்கள் காவலை நீடித்து விஜயவாடா நீதிமன்றம் உத்தரவு
- ஆம் ஆத்மி கட்சிக்கு தொடரும் நெருக்கடி - மனீஷ் சிசோடியாவை தொடர்ந்து சஞ்சய் சிங் எம்.பி.,க்கு 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி
- மார்க் ஆண்டனி படத்தை தணிக்கை செய்ய மும்பை சென்சார் போர்டு அதிகாரிகள் லஞ்சம் கேட்டதாக நடிகர் விஷால் புகார் - சிபிஐ வழக்குப்பதிவு
- திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவம் விழா - கூட்டத்தைக் கட்டுப்படுத்த சர்வ தரிசன டோக்கன்களை நிறுத்த தேவஸ்தானம் முடிவு
- 5 மாநில தேர்தல் தேதி விரைவில் அறிவிப்பு - தலைமை தேர்தல் ஆணையம் இன்று முக்கிய ஆலோசனை
- சமூக வலைத்தளத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் போஸ்டர் யுத்தம் - ராகுல்காந்தியை ராவணனாக சித்தரித்ததால் பரபரப்பு
உலகம்:
- பாகிஸ்தானின் ஊடகங்களை சீனா கட்டுப்படுத்த முயல்வதாக அமெரிக்கா குற்றச்சாட்டு
- 2023 ஆம் ஆண்டின் இலக்கிய துறைக்கான நோபல் பரிசு நார்வே எழுத்தாளர் ஜான் போஸூக்கு அறிவிப்பு
- அமெரிக்காவின் மோர்கன் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிசூடு - 5 மாணவர்கள் காயம்
- ஆளும் கட்சியுடன் இணக்கமாக இருப்பதாக குற்றச்சாட்டு - அமெரிக்கா நாடாளுமன்ற சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி பதவி நீக்கம்
விளையாட்டு:
- 2023 ஆம் ஆண்டுக்கான 50 ஓவர் உலகக்கோப்பை போட்டி கோலாகல தொடக்கம் - முதல் போட்டியில் இங்கிலாந்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி அபார வெற்றி
- உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் - நெதர்லாந்து அணிகள் மோதல்
- ஆசிய விளையாட்டு தொடரில் ஒரே நாளில் 3 தங்க பதக்கங்களை வென்று இந்தியா அசத்தல் - பதக்கப்பட்டியலில் 4வது இடம் பிடித்தது
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
பொழுதுபோக்கு
இந்தியா
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion