மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: உள்ளூர் முதல் உலக நடப்பு வரை... நேற்று என்ன நடந்தது..? உடனே அறிய இதோ ஏபிபி தலைப்பு செய்திகள்!
Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அமோக வெற்றி
- பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுக்கான அதிகாரிகள் நியமனம்- பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
- நாடாளுமன்ற தேர்தலின் வெற்றிக்கு அச்சாரமாக ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி அமைந்துள்ளது- முதலமைச்சர் முக ஸ்டாலின் பேட்டி
- கச்சத்தீவு திருவிழா இன்று மாலை துவக்கம்: தமிழக பக்தர்கள் 2,408 பேர் பங்கேற்பு
- பாம்பு பிடிப்பவர்களுக்கு முக்கியத்துவம், மரியாதை இல்லை - ஆளுநர் ஆர்.என்.ரவி
- மதுரை ஆவினிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட 47 பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம்
- தமிழ்நாட்டில் மாதிரி பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை ரத்து செய்ய வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
- பருவம் தவறிய கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உயர்த்தப்பட்ட நிவாரணமாக 112 கோடியே 72 லட்சம் நிவாரண உதவி வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
- திருப்பூரில் வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பு பிரிவு என்ற புதிய பிரிவு காவல்துறை சார்பில் தொடங்கப்பட்டுள்ளது.
- விரைவில் சென்னை , மதுரை அரசு மருத்துவமனைகளில் செயற்கை கருத்தரிப்பு மையங்கள் தொடங்குவதற்காக உபகரணங்கள் வாங்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
இந்தியா:
- 3 மாநில தேர்தல் முடிவுகள்: திரிபுரா, நாகலாந்தில் மீண்டும் பாஜக ஆட்சி, மேகாலயாவில் தொடரும் இழுபறி
- தேர்தல் ஆணையர்களை பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், தலைமை நீதிபதி குழு நியமிக்கம்: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
- அதானி விவகாரத்தில் ஜேசிபி விசாரணை மட்டுமே உண்மையை வெளிக்கொண்டு வரும் - காங்கிரஸ் வலியுறுத்தல்
- ஷாருக்கானின் மனைவியும் வடிவமைப்பாளருமான கவுரி கான் மீது லக்னோவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
- சர்வதேச சவால்களுக்கு தீர்வு காண கருத்தொற்றுமை வேண்டும் - பிரதமர் மோடி வலியுறுத்தல்
- 3 மாநில தேர்தல் முடிவுகள் ஏமாற்றம் அளிக்கிறது - காங்கிரஸ் கருத்து புகையிலை பொருட்களுக்கான தடை ரத்து தொடர்பான தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
- கர்நாடகம் முதன்மை மாநிலமாக வருவதை யாராலும் தடுக்க முடியாது - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்
உலகம்:
- பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி: ராணுவ வீரர்களுக்கு உணவு வழங்குவதில் சிக்கல்
- பிலிப்பைன்சில் ராணுவத்தினர் துப்பாக்கி சூட்டில் கிளர்ச்சியாளர்கள் 4 பேர் உயிரிழப்பு
- இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவு.
- உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 65.29 கோடியாக உயர்ந்துள்ளது.
- டிக்டாக் செயலியை தடை செய்ய ஜோ பைடனுக்கு அதிகாரம் வழங்கும் மசோதா - அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல்
விளையாட்டு:
- இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் 76 ரன்கள் என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியுள்ளது.
- பெண்கள் பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக மெக் லானிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
- கால்இறுதி ஆட்டத்தில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு முன்னேறினார்.
- ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி முகாம் இன்று தொடங்குகிறது.
- சொந்த மண்ணில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய 5-வது இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனையை உமேஷ் யாதவ் படைத்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
உலகம்
விளையாட்டு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion