மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: கடந்த 24 மணிநேரத்தில் உங்களைச் சுற்றி நடந்தது என்ன? - இதோ காலை 7 மணி தலைப்புச் செய்திகள்
Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- ஏப்ரல் 7 ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு - பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான முதல் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்பு
- பெரியாரின் கருத்தியல்களை வென்றெடுக்க அனைவரும் உழைக்க வேண்டும் - கேரளாவில் நடந்த வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
- தமிழ்நாட்டில் புதிதாக 8 மாவட்டங்கள் உருவாவது பரிசீலனையில் உள்ளதாக சட்டமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பதில்
- அதிமுகவில் இருந்து விலகியது வருத்தம் தான் என பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் கருத்து - எடப்பாடி பழனிசாமி தன்னை அதிமுகவுக்கு அழைத்ததாக தனியார் ஊடக நிகழ்ச்சியில் பேச்சு
- புதுக்கோட்டை அருகே கடலில் வலை விரிப்பது தொடர்பாக விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் நடுக்கடலில் மோதல்
- ஆருத்ரா நிறுவன பண மோசடி விவகாரம் : நடிகர் ஆர்.கே.சுரேஷூக்கு ரூ.12 கோடி கைமாறியதாக புகார் - விசாரணை நடத்த பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை முடிவு
- நெல்லையில் பற்களை பிடுங்கிய சம்பவத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஏஎஸ்பி பல்வீர் சிங்கை மீண்டும் பணியில் அமர்த்தக்கோரி பேனர் வைத்த உள்ளூர் மக்கள்
- கலாஷேத்ரா பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்தில் இயக்குநர்,துணை இயக்குநர் நேரில் ஆஜராக உத்தரவு
- காவலர்களுக்கு வாரம் ஒருநாள் கட்டாய ஓய்வு நடைமுறை விரிவுப்படுத்தப்படும் - டிஜிபி சைலேந்திரபாபு தகவல்
- ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பாக விரைவில் விரிவான கொள்கை வெளியிடப்படும் - அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவிப்பு
- 29 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வுக்கு வலுக்கும் எதிர்ப்பு - முடிவை திரும்ப பெறாவிடில் போராட்டம் தீவிரமாகும் எச்சரிக்கை
- ஏப்ரல் 3 ஆம் தேதி சென்னையில் 5 மெட்ரோ ரயில் நிலையங்களில் ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்பு - ஒரு மணி நேரத்திற்கு ரூ.10 கட்டணம் நிர்ணயம்
- டெல்லியில் ஏப்ரல் 3 ஆம் தேதி சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பின் முதல் மாநாடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கும் மாநாட்டில் பல்வேறு மாநில முதலமைச்சர்கள் பங்கேற்பு
- ஈரோட்டில் சாக்குமூட்டையில் கண்டெடுக்கப்பட்ட மாணவி உடல் - தற்கொலை வழக்காக பதிவு செய்ததை கண்டித்து உறவினர்கள் போராட்டம்
- விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே திடீரென தீப்பிடித்து எரிந்த பேருந்து - ஓட்டுநர் சாமர்த்தியத்தால் பயணிகள் உயிர் தப்பினர்
- மதுரையில் பெட்டிக்கடையில் மிட்டாய் திருடிய பழங்குடியின மாணவர்கள் கட்டி வைக்கப்பட்ட கொடூரம் -வைரலான வீடியோவால் அதிர்ச்சி
- தேக்கடியில் தொடங்கிய மலர் கண்காட்சி - மே 14 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிப்பு
- கீழடி அருங்காட்சியத்தை குடும்பத்துடன் பார்வையிட்ட நடிகர் சூர்யா - தமிழரின் தொன்மையை உணர்த்தும் சான்றுகளை நேரில் பார்த்து மகிழ்ச்சி
- சாதி பெயரை சொல்லி திட்டியதாக மாணவி அளித்த புகாரில் மதுரை காமராஜர் பல்கலைகழக பேராசிரியர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது
இந்தியா:
- தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க சிலர் உறுதிப்பூண்டிருப்பதாக பிரதமர் மோடி குற்றச்சாட்டு - போபாலில் வந்தே பாரத் ரயில் சேவை நிகழ்ச்சியில் பேச்சு
- ஆந்திராவில் காவல் நிலையத்தில் வைக்கப்பட்ட 105 கிலோ வெள்ளி பொருட்கள் , பணம் திருட்டு - 2 காவலர்கள் கைது
- 24 மாநிலங்களைச் சேர்ந்த 67 கோடி தனிநபர்களின் ரகசிய தகவல்கள் திருட்டு - ஹரியானாவைச் சேர்ந்த நபரை பிடித்து விசாரணை
- அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக 2 மாநில நீதிமன்றங்கள் ராகுல் காந்திக்கு சம்மன்
- குஜராத் அரசுக்கு எதிராக 300 இடங்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடத்த முடிவு
உலகம்:
- அமெரிக்காவை தாக்கிய பயங்கர புயல் காற்றால் 21 பேர் உயிரிழப்பு - 2 லட்சத்துக்கு அதிகமானோர் மின்சாரம் இன்றி தவிப்பு
- சுவிட்சர்லாந்தில் ரயில்கள் தடம் புரண்ட விபத்தில் 12 பேர் படுகாயம்
- அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற இந்தியர்கள் உள்பட 6 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு
விளையாட்டு:
- மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி : அரைஇறுதியில் நம்பர் ஒன் வீரர் கார்லஸ் அல்காரஸை வீழ்த்தி ஜானிக் சின்னர் இறுதிப்போட்டி முன்னேற்றம்
- டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டி: 50 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி
- ஐபிஎல் போட்டி : இன்றைய ஆட்டத்தில் ஹைதராபாத்-ராஜஸ்தான், பெங்களூரு-மும்பை அணிகள் மோதல்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion