மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: நேற்றைய நாளில் நடந்தது என்ன..? அடுத்தடுத்து முக்கிய நிகழ்வுகள்.. ஏபிபி தலைப்பு செய்திகள் இதோ!
Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- காஞ்சிபுரம் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து - 10 பேர் பரிதாபமாக உயிரிழப்பு
- ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பியனுப்பிய நிலையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா இன்று சட்டப்பேரவையில் தாக்கல் - முதலமைச்சர் முக ஸ்டாலின் முடிவு
- அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலில் நிற்க தயார்; வழக்க வாபஸ் பெற எடப்பாடி பழனிசாமிக்கு ஓபிஎஸ் நிபந்தனை - தீர்ப்பை ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்
- கலைஞர் நூற்றாண்டு விழா ஜூன் 3ல் தொடக்கம்: தீர்மானம் நிறைவேற்றிய திமுக
- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உகாதி பண்டிகை வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பி.எம். மித்ரா (PM Mega Integrated Textile Regions and Apparel (PM MITRA)) திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் ஜவுளி மண்டலம், ஆடை பூங்கா அமைக்க மத்திய -மாநில அரசுகளிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- பெண்களுக்கு சம ஊதியம் வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
- மாநிலம் முழுவதும் தனியார் பள்ளிகளில் இலவச, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர்களைச் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழ்நாட்டில் அடுத்து வரும் 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கொரோனா தொற்றில் இருந்து மீண்டதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்தியா:
- தமிழ்நாட்டை சேர்ந்த பாம்பு பிடி வல்லுநர்கள் வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோர் பத்மஸ்ரீ விருது பெற்றனர்.
- இந்தியாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் வகையிலான பாரத் 6ஜி தொலைநோக்கு ஆவணத்தை பிரதமர் மோடி நேற்று வெளியிட்டுள்ளார்.
- தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை; அன்புஜோதி ஆசிரமத்தில் மனித உரிமை மீறலா? மனைவியை காணவில்லையென மேலும் ஒரு புகார்
- அதிகரித்து வரும் கொரோனா தொற்றினால் பிரதமை மோடி அவரச ஆலோசனை; முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தல்
- கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 1ஆம் வகுப்பில் சேர்வதற்கான மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பை கேந்திரிய வித்யாலயா சங்கதன் வெளியிட்டுள்ளது.
- இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுக்க தொடங்கியுள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,026ஆக அதிகரித்துள்ளது.
- காஷ்மீரில் நிலநடுக்கத்திற்கு மத்தியில் மருத்துவமனையில் மருத்துவர்கள் பிரசவம் பார்த்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
உலகம்:
- ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 12 பேர் உயிரிழந்தனர்.
- அலெப்போ சர்வதேச விமான நிலையத்தின் மீது இஸ்ரேல் ராணுவம் நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
- தன்பாலின ஈர்ப்பாளர்கள் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கும் சட்ட மசோதா உகாண்டா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
- ஏப்ரல் மாதம் 4 ஆயிரம் பேரை பணியை விட்டு நீக்க டிஸ்னி நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விளையாட்டு:
- முதுகுவலி காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து ஷ்ரேயாஸ் ஐயர் விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
- ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்து தொடரை இழந்தது.
- 'டாஸ்' போட்ட பிறகு ஆடும் 11 வீரர்களின் பட்டியலை வழங்கினால் போதும் என ஐ.பி.எல். விதிமுறையில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
- பும்ரா, பண்ட் வரிசையில் ஷ்ரேயாஸ் ஐயரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
கிரிக்கெட்
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion