மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்! காலை 7 மணி தலைப்புச் செய்திகளாக இதோ!
Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- சாதிவாரி கணக்கெடுப்பை நாடு முழுவதும் நடத்திட வேண்டுமென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம்
- நீட் விலக்கு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - பாஜக ஒட்டுமொத்த மனித குலத்திற்கே எதிரானது என கடும் விமர்சனம்
- தனது வீட்டருகே இருந்த கொடிக்கம்பம் போலீசாரால் அகற்றம் - 100 நாட்களில் 10 ஆயிரம் கொடிக்கம்பங்கள் நடப்படும் என பாஜக தலைவர் அண்ணாமலை சவால்
- தமிழ்நாடு மற்றும் கேரளாவில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது -ஆரம்பகட்டத்தின் தாக்கம் லேசானதாகவே இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
- நாங்கள் ஆரிய ஆதிக்கத்திற்குதான் எதிரியே தவிர, ஆன்மீகத்திற்கு எதிரி அல்ல - மனைவி துர்கா கோயிலுக்கு செல்வதாக விமர்சனம் எழுந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி
- நான்கு நாட்கள் தொடர் விடுமுறை - பொதுமக்கள் சொந்த ஊர் திரும்பியதால் சென்னை புறநகர் பகுதியில் பல கிலோமீட்டர் அணிவகுத்து நின்ற வாகனங்கள்
- பெண்கள் அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் அடைந்து வருவதாக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு பெருமிதம்
- சென்னையில் பாஜக கொடிக் கம்பம் அகற்றப்பட்ட விவகாரத்தில் பாஜக பிரமுகர் அமர்பிரசாத் ரெட்டி கைது
- தொடர் விடுமுறையை பயன்படுத்தி அதிக கட்டணம் வசூலித்த 102 ஆம்னி பஸ்கள் பறிமுதல் - ரூ.27.67 லட்சம் அபராதம் விதிப்பு
- நீட் விலக்கு ஒட்டுமொத்த தமிழர்களின் பிரச்னை என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
- அரவக்குறிச்சி அரசு பள்ளியில் திடீர் தீ விபத்து - மாணவர்களின் தேர்வு விடைத்தாள்கள் எரிந்து நாசம்
இந்தியா:
- மனிதனை விண்ணுக்கு அனுப்பும் இஸ்ரோவின் ககன்யான் திட்டத்தின் முதல் பரிசோதனை வெற்றி
- ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தல் - முதற்கட்டமாக 33 தொகுதிகளுக்கு காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு
- ஊழல்களை மறைக்க அதிகாரிகளின் வாயை அடைக்க பாஜக அரசு முயல்கிறது - காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு
- குப்பைத்தொட்டியில் வீசிய லாட்டரி சீட்டுக்கு ரூ.1 கோடி பரிசு - கேரளாவில் ஆட்டோ டிரைவருக்கு அடித்த அதிர்ஷ்டம்
- ராகுல் காந்தி சிங்கம் அல்ல, காகித புலி என தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மகள் கவிதா கடும் விமர்சனம்
- கடந்த ஓராண்டில் மட்டும் 188 போலீசார் உயிர் தியாகம் செய்துள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தகவல்
- இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள அயோத்தி ராமர் கோயில் கட்டும் பணி - ஜனவரியில் திறப்பு விழா நடத்த திட்டம் என உ.பி., முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தகவல்
- மத்திய பிரதேச சட்டசபை தேர்தலுக்கான 5 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக
- புதுச்சேரி அமைச்சர் சந்திர பிரியங்காவின் பதவி நீக்கத்துக்கு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல்
உலகம்:
- சீனாவில் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 6 பேர் பரிதாபமாக உயிரிழப்பு
- பாகிஸ்தானுக்கு உதவிய சீன நிறுவனங்களுக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது
- லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை இந்தியா கடினமாக்குவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றச்சாட்டு
- லண்டனில் இருந்து 4 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தான் திரும்பிய முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் - உற்சாக வரவேற்பு அளித்த தொண்டர்கள்
விளையாட்டு:
- உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இன்று இந்தியா - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை
- உலகக்கோப்பை கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 229 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி
- உலகக்கோப்பை கிரிக்கெட்டில் நெதர்லாந்தை வீழ்த்தி 5 விக்கெட் வித்தியாசத்தில் முதல் வெற்றியைப் பெற்றது இலங்கை
- ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டம் - 11 ஆண்டுகளுக்குப் பின் பாகிஸ்தான் வீரர்கள் சென்னை வருகை
- டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் அரையிறுதியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோல்வி
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion