மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: கடந்த 24 மணிநேரம்.. உலகம் முழுவதும் என்ன நடந்தது..? காலை 7 மணி தலைப்புச்செய்திகள் இதோ..!
Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- தமிழ்நாடு அரசின் வேளாண் பட்ஜெட் தாக்கல் - நடப்பு நிதியாண்டுக்கு ரூ.38, 904 கோடி நிதி ஒதுக்கீடு
- வேளாண் பட்ஜெட்டில் காவிரி டெல்டா பகுதியில் வேளாண் பெருந்தொழில் தடம் அமைக்க ரூ.1000 கோடி நிதி - இலவச மின்சாரத்திற்கு ரூ.6,536 கோடி நிதி ஒதுக்கீடு
- அங்கக வேளாண்மையில் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு ரூ.5 லட்சம் பணத்துடன் நம்மாழ்வார் விருது - வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு
- மதுரை மல்லிகைக்கு தனி இயக்ககம் பட்ஜெட்டில் அறிவிப்பு - மல்லிகை வேளாண் முறைகளை கற்றுதர ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு
- எண்ணெய் வித்துகளின் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் 14 மாவட்டங்களை உள்ளடக்கிய சிறப்பு மண்டலம் அமைக்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு - ரூ.33 கோடி நிதி ஒதுக்கீடு
- விவசாயிகளை ஏமாற்றும் வகையில் வேளாண் பட்ஜெட் உள்ளது - எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
- கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு : சிபிசிஐடி கால அவகாசம் கேட்டதால் ஏப்ரல் 28 ஆம் தேதி வழக்கு ஒத்திவைப்பு
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின் தேர்தல் அலுவலர் சிவகுமார் வீட்டில் 9 மணி நேரமாக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை - முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்
- டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள் அதிகரிப்பு - மேலும் 3 ஆயிரம் பணியிடங்கள் உருவாக்கப்படும் என அறிவிப்பு
- சர்வதேச தண்ணீர் தினத்தையொட்டி தமிழ்நாடு முழுவதும் இன்று கிராம சபைக்கூட்டம் - மத சார்புடைய இடங்களில் கூட்டம் நடத்த வேண்டாம் என அறிவுறுத்தல்
- ஆண்டுதோறும் சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுவதை கண்டித்து ஏப்ரல் 1 ஆம் தேதி சுங்கச்சாவடிகள் முன் ஆர்பாட்டம் - தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவிப்பு
- இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நகைகளை திருடிய பணிப்பெண் கைது
- கிருஷ்ணகிரி அருகே காதல் திருமணம் செய்த இளைஞர் பெண் வீட்டாரால் வெட்டிக்கொலை
இந்தியா:
- ஏப்ரல் 8 ஆம் தேதி பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை - சென்னை முதல் கோவை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார்
- ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலையில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - வடமாநிலங்களில் உணரப்பட்டதால் மக்கள் பீதி
- ஆன்லைன் சூதாட்டத்தை வரம்பிற்குள் கொண்டு வர தேவையான சட்டத்தை இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது - மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் பேச்சு
- ராஜஸ்தானில் பொருட்காட்சியில் ராட்டினத்தின் கேபிள் அறுந்து விழுந்து விபத்து - 17 பேர் படுகாயம்
- காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித் பால் சிங் எங்கே? - காரில் வெளியேறும் வீடியோவை வெளியிட்டு தேடுதல் வேட்டை
- கோடை விடுமுறையையொட்டி பெங்களூரு-வேளாங்கண்ணி இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
உலகம்:
- பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிறுமி உயிரிழப்பு - 150 பேர் படுகாயம்
- ஏப்ரல் மாதம் 4 ஆயிரம் பேரை வேலையை விட்டு நீக்க டிஸ்னி நிறுவனம் முடிவு என தகவல் - ஊழியர்கள் அதிர்ச்சி
- உக்ரைனுக்கு ஜப்பான் தொடர்ந்து ஆதரவளிக்கும் - அதிபர் ஜெலன்ஸ்கியிடம் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா உறுதி
- சோமாலியாவில் நிலவும் கடும் வறட்சி - கடந்த ஆண்டு மட்டும் 43 ஆயிரம் பேர் உயிரிழப்பு
விளையாட்டு:
- இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையே கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது - தொடரை வெல்லப்போவது யார் என ரசிகர்கள் எதிர்பார்ப்பு
- பிரான்ஸ் கால்பந்து அணியின் புதிய கேப்டனாக எம்பாப்பே நியமனம்
- மகளிர் பிரிமீயர் லீக் தொடர்: இறுதிப்போட்டிக்கு டெல்லி கேபிட்டல்ஸ் அணி தகுதி
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
மயிலாடுதுறை
இந்தியா
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion