மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: பட்ஜெட் முதல் பணிநீக்கம் வரை.. கடந்த 24 மணி நேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள்.. காலை 7 மணி தலைப்புச் செய்திகள்..!
Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் மாதம் ரூ.1000 வழங்கப்படும் - தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு
- 80 லட்சத்துக்கும் அதிகமான குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட வாய்ப்பு - அமைச்சர் கீதாஜீவன் தகவல்
- எல்லோருக்கும் எல்லாம் என்ற திசையை நோக்கி தமிழ்நாடு அரசின் பயணம் தொடரும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு - திராவிட மாடல் கருத்தியலுக்கு எடுத்துக்காட்டாக பட்ஜெட் இருப்பதாக கருத்து
- தமிழ்நாடு அரசின் பட்ஜெட் மக்களை ஏமாற்றும் பட்ஜெட் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் - நம்பிக்கை துரோகத்தின் ஒட்டுமொத்த உருவம் என ஓபிஎஸ் கண்டனம்
- முதல் தவணையில் 28 மாதங்களுக்கான உரிமைத்தொகையான ரூ.28 ஆயிரம் வழங்க பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தல் - திமுகவுக்கு தேர்தல் வாக்குறுதி நினைவுக்கு வந்ததில் மகிழ்ச்சி என கருத்து
- நிலப்பதிவு கட்டணம் 2 விழுக்காடு குறையும் - கோவை,மதுரையிலும் மெட்ரோ திட்டங்கள் செயல்படுத்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு
- மதுரையில் அமைக்கப்பட்டு வரும் கலைஞர் நூலகம் ஜூன் மாதம் திறக்கப்படும் - சர்வதேச புத்தக கண்காட்சி வரும் ஆண்டில் நடத்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு
- சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் ஏப்ரல் 21 ஆம் தேதி வரை நடைபெறும் - சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
- கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ கைது - 15 நாட்கள் நீதிமன்ற காவல்
- புனரமைக்கப்பட்ட சென்னை அண்ணா நகர் கோபுரம் திறப்பு - மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்
- ஈரோடு கிழக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா தொற்று - தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதி
இந்தியா:
- கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் என கருத்து கணிப்பில் தகவல்
- கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் - ராகுல்காந்தி அறிவிப்பு
- நிலம் கையகப்படுத்தப்பட்ட பின்னரே பரந்தூர் விமானம் நிலையம் செயல்பாட்டுக்கு வரும் காலம் நிர்ணயம் செய்யப்படும் என மத்திய அரசு விளக்கம்
- குறைந்த ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ராம்லீலா மைதானத்தில் விவசாயிகள் போராட்டம்
- மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா காவல் நீட்டிப்பு
- அரசு முறை பயணமாக இந்தியா வந்த ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா - டெல்லியில் பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை
உலகம்:
- அமேசானில் அடுத்த சில வாரங்களில் மேலும் 9 ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கம் - வெப் சர்வீஸ், வீடியோ கேமிற்கான ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள் என தகவல்
- கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து தீப்பிடித்ததில் பெண் அதிகாரி உள்பட 4 பேர் பலி
- காங்கோ நாட்டில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 22 பேர் பலி
விளையாட்டு:
- இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 3வது ஒருநாள் போட்டி - இரு அணி வீரர்களும் சென்னை வருகை
- இலங்கை டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து திமுத் கருணாரத்னே இருந்து விலக முடிவு
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
அரசியல்
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion