மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: இதுவரை என்ன நடந்தது..? இன்று என்ன நடக்கிறது.. காலை தலைப்பு செய்திகள் உங்களுக்காக!
Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- லியோ திரைப்படம் அதிகாலை காட்சி: நீதிமன்றம் அனுமதி மறுப்பு
- சிவகாசி அருகே அடுத்தடுத்து பட்டாசு ஆலை வெடித்து விபத்து: 12 பெண்கள் உள்பட 13 பேர் உயிரிழப்பு
- கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
- போக்குவரத்து நெரிசலால் திணறும் சென்னை; 10 புதிய மேம்பாலங்கள் கட்ட நிலம் கையகப்படுத்தும் பணியை வேகப்படுத்திய சிறப்பு அதிகாரிகள்
- அதிமுக ஆட்சியின்போது ஆவினில் முறைகேடாக செய்த நியமனங்கள் அத்தனையும் ரத்து - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
- தமிழ்நாட்டில் 11 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு
- தமிழ்நாடு மாநில ஒலிம்பிக் அசோசியேஷன் சார்பில் ஜனவரி மாதம் பிரமாண்டமாக மினி ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படும் என அதன் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
- காலை 7.30 மணி அளவில் திருக்கச்சூர் நடுநிலைப் பள்ளியில் அரசு தலைமைச் செயலாளர் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்திற்கான ஆய்வினை மேற்கொள்கிறார்.
- சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ. 3 லட்சம் நிதி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார்.
இந்தியா:
- தெலங்கானாவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அகில இந்திய காங்கிரஸ் கண்காணிப்பாளராக சு.திருநாவுக்கரசர் எம்.பி. நியமிக்கப்பட்டுள்ளார்.
- 2040-க்குள் நிலவுக்கு மனிதனை அனுப்ப வேண்டும் என விஞ்ஞானிகளிடம் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
- தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்க முடியாது - உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
- மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம்; ஆட்களை மீட்கும் சோதனை வரும் 21ம் தேதி நடத்தப்படும் - இஸ்ரோ தகவல்
- கடல்சார் பொருளாதாரத்துக்கு ரூ.22,000 கோடியில் திட்டம் - பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
- தன்பாலினத்தவர் திருமணத்துக்கு நீதிமன்றத்தால் அங்கீகாரம் வழங்க முடியாது என நீதிபதி ரவீந்திர பட் தெரிவித்துள்ளார்.
- இஸ்ரேலில் இருந்து 286 இந்திய பயணிகளுடன் 5வது விமானம் டெல்லி வந்தது.
- மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- கர்நாடகத்தில் வசிப்பவர்கள் கன்னடம் பேச கற்றுக்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் சித்தராமையா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உலகம்:
- காஸாவில் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் 500 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- 2 நாள் பயணமாக ரஷ்ய அதிபர் புதின் சீனா சென்றுள்ளார்.
- இஸ்ரேல்-ஹமாஸ் போர் தீவிரமடைந்து வரும் நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று இஸ்ரேலுக்கு செல்கிறார்.
- 13 சீன நிறுவனங்களுக்கு ஏற்றுமதி தடைகளை விதித்து அமெரிக்க வர்த்தகத்துறை உத்தரவிட்டுள்ளது.
- கடந்த அக்டோபர் 7ம் தேதி முதல் 11 பாலஸ்தீன பத்திரிக்கையாளர் உயிரிழப்பு.
விளையாட்டு:
- உலகக் கோப்பை 2023: நியூசிலாந்து - ஆப்கானிஸ்தான் இன்று சென்னையில் மோதல்.
- உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணியை தோற்கடிப்பது மிகவும் கடினம் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
- சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு மேலும் 8 உறுப்பினர்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.
- அகமதாபாத்தில் ‘ஜெய் ஸ்ரீராம்’ என முழக்கமிட்ட சம்பவம் தொடர்பாக ஐ.சி.சி.யிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புகார் அளித்துள்ளது.
- பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி உலகக் கோப்பை 2023ல் நெதர்லாந்து அணி முதல் வெற்றியை பதிவு செய்தது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion