மேலும் அறிய

7 AM Headlines: என்ன நடந்தது நேற்று? இன்று என்ன நடக்கவிருக்கிறது? அனைத்தும் உங்களுக்கு தலைப்பு செய்திகளாய்..!

Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.

தமிழ்நாடு:

  • திமுக மகளிர் உரிமை மாநாடு; சோனியா பிரியங்கா சென்னை வருகை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று விருந்து 
  • அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாத 86 மருத்துவ இடங்களை திரும்ப வழங்க வேண்டும் - மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு கடிதம்
  • அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ சுப்புரத்தினம் மனு தாக்கல்; எடப்பாடியின் எம்.எல்.ஏ பதவியை பறிக்க கோடி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு
  • சென்னை உயர்நீதிமன்றத்து கூடுதலாக 2 நீதிபதிகள் நியமனம்-குடியரசு தலைவர் உத்தரவு
  • வருங்கால சமுதாயத்தில் ஆற்றல்மிக்க ஆசைத்தம்பிகள் உருவாக வேண்டும் என்பதற்காகவே ஏவிபி ஆசைத்தம்பி நூற்றாண்டு விழா - முதலமைச்சர் முக ஸ்டாலின் உரை
  • சென்னையில் இருந்து 2,265 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. பெங்களூரு, கோயமுத்தூர், திருப்பூர் மற்றும் பிற பகுதிகளுக்கு 1,700 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு
  • இஸ்ரேலில் நடந்து வரும் போரினால் சிக்கித் தவித்த இந்தியர்களில் 212 பேர் முதல் கட்டமாக மீட்கப்பட்டு உள்ளனர்.
  • தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். 

இந்தியா: 

  • தமிழகத்திற்கு வினாடிக்கு 3,000 கனஅடி நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
  • பிளவுபட்ட உலகம் நம் முன் உள்ள சவால்களுக்கு தீர்வுகளை வழங்காது என, ஜி20 அமைப்பின் 9வது நாடாளுமன்ற சபாநாயகர்கள் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார்.
  • இந்தியாவில் யார் வேண்டுமானாலும் எந்த கோயிலுக்குள்ளும் நுழையலாம் என,  ஆர்எஸ்எஸ் பொதுச்செயலாளர்  தத்தாத்ரேயா ஹொசபலே பேசியுள்ளார்.
  • நவராத்திரி பிரமோற்சவ விழாவை முன்னிட்டு இன்று முதல் திருப்பதியில் சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் தரப்பில் அறிவித்துள்ளது.
  • உலகளாவிய பசி குறியீட்டில் கடந்த ஆண்டை காட்டிலும் நான்கு இடங்கள் சரிந்து இந்தியா, 111வது இடத்தை பிடித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  • இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த ABP Southern Rising Summit 2023 - சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. 
  • கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறப்பு மேலும் குறைக்கப்பட்டுள்ளது.
  • அனைவரும் பயன்பெறும் வகையில் சாதாரண பெட்டிகளுடன் வந்தே ரயில்சேவை

உலகம்: 

  • காசாவில் இருந்து 24 மணிநேரத்திற்குள் 11 லட்சம் பேர் வெளியேற கெடு-இஸ்ரேல் அரசின் உத்தரவால் பரபரப்பு
  • சீனாவில் இஸ்ரேல் தூதரக ஊழியர் கத்திக்குத்து.
  • ஜெர்மனியில் சாலையில் வேன் கவிழ்ந்து தீப்பிடித்த விபத்தில் 7 அகதிகள் உயிரிழப்பு
  • இஸ்ரேலில் சிக்கியுள்ள 1,600 பேரை விமானங்கள் மூலம் மீட்க ஆஸ்திரேலியா தீவிரம் காட்டி வருகிறது. 
  • காசா மீது நடைபெறும் தாக்குதலை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என ஈரான் வெளியுறவு மந்திரி வலியுறுத்தியுள்ளார்.
  • பிலிப்பைன்ஸ் தலைநகரில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

விளையாட்டு: 

  • உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்தியா- பாகிஸ்தான் அணிகள் அகமதாபாத்தில் இன்று மோதல்
  • உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் சாதனை பயணம் முறியடிக்கப்படும் என பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.
  • எகிப்தில் நடக்கும் உலக கேடட் செஸ் சாம்பியன்ஷிப்பில் இருந்து விலகுவதாக அகில இந்திய செஸ் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
  • உலகக் கோப்பை கிரிக்கெட்: வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tungsten Mining: பணிந்ததா மத்திய அரசு?:  டங்ஸ்டன் சுரங்க இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை.!
பணிந்ததா மத்திய அரசு?: டங்ஸ்டன் சுரங்க இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை.!
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
"செந்தில்பாலாஜி என் வீட்டிற்கு வந்து, என் அம்மா கையில் சாப்பிட்டுள்ளார்": அண்ணாமலை பரபர பேட்டி.!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance | ’’அதிமுக தவெக கூட்டணி! நிச்சயம் ஆட்சியை பிடிக்கும்’’ பற்ற வைத்த அமீர் | AmeerAnnamalai vs Senthil Balaji: டார்கெட் செந்தில்பாலாஜி!அண்ணாமலை பலே ப்ளான்.. OK - சொன்ன மோடி!Vijayadharani Join TVK: தவெகவில் இணையும் விஜயதரணி? பாஜகவிற்கு TATA.. ஸ்கெட்ச் போட்ட விஜய்!TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | Bussy

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tungsten Mining: பணிந்ததா மத்திய அரசு?:  டங்ஸ்டன் சுரங்க இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை.!
பணிந்ததா மத்திய அரசு?: டங்ஸ்டன் சுரங்க இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை.!
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
"செந்தில்பாலாஜி என் வீட்டிற்கு வந்து, என் அம்மா கையில் சாப்பிட்டுள்ளார்": அண்ணாமலை பரபர பேட்டி.!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
80 பவுன் நகை கொள்ளை வழக்கை விசாரிக்க லஞ்சம் பெற்றதாக போலீசார் மீது வழக்கு பதிவு!
80 பவுன் நகை கொள்ளை வழக்கை விசாரிக்க லஞ்சம் பெற்றதாக போலீசார் மீது வழக்கு பதிவு!
DMK Vs ADMK: திமுக, அதிமுகவினரிடையே இடையே கடும் மோதல்... சேலம் மாநகராட்சியில் பரபரப்பு
DMK Vs ADMK: திமுக, அதிமுகவினரிடையே இடையே கடும் மோதல்... சேலம் மாநகராட்சியில் பரபரப்பு
No Detention Policy: பள்ளிகளில் ஆல் பாஸ் முறை ரத்து ஏன்?- புள்ளிவிவரங்களைப் புட்டுப்புட்டு வைத்த அண்ணாமலை
No Detention Policy: பள்ளிகளில் ஆல் பாஸ் முறை ரத்து ஏன்?- புள்ளிவிவரங்களைப் புட்டுப்புட்டு வைத்த அண்ணாமலை
திமுகவிற்கு ஆதரவு.. அன்புமணி அதிரடி அறிவிப்பு.. முதலமைச்சருக்கு செக்
திமுகவிற்கு ஆதரவு.. அன்புமணி அதிரடி அறிவிப்பு.. முதலமைச்சருக்கு செக்
Embed widget